சொந்த காசில் அப்பா, அம்மாவிற்கு வீடு கட்டி கொடுத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

0
சொந்த காசில் அப்பா, அம்மாவிற்கு வீடு கட்டி கொடுத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகா - ரசிகர்கள் வாழ்த்து!
சொந்த காசில் அப்பா, அம்மாவிற்கு வீடு கட்டி கொடுத்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' விஜே தீபிகா - ரசிகர்கள் வாழ்த்து!
சொந்த காசில் அப்பா, அம்மாவிற்கு வீடு கட்டி கொடுத்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவியில் டாப் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜே தீபிகா. அவர் சீரியலில் இருந்து விலகினாலும் பல ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் தீபிகா தனது அம்மா அப்பாவிற்கு சிறிய வீடு ஒன்று கட்டி கொடுத்து இருப்பதாக பெருமையுடன் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை விஜே தீபிகா:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்களிடத்தில் பிரபலமாகிவிடுகின்றனர். அப்படி குறுகிய காலத்தில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்தவர் விஜே தீபிகா. திருநெல்வேலி பெண்ணான அவருக்கு நடிப்பு மீது அவ்வளவு ஆசை. ஏகப்பட்ட நிராகரிப்பிற்கு பின் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரம். ஆனால் முகப்பரு பிரச்சனை காரணமாக அவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டார்.

Exams Daily Mobile App Download

கனவுகள் சுக்குநூறாக போனாலும் தன்னுடைய பிரச்சனையை சரி செய்ய முழு முயற்சியை செலுத்தினார். அவருடைய பிரச்சனையை சரி செய்து தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு சரியாக இல்லாமல் இருந்தது. சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த அவருக்கு வீடு கூட கிடைக்காமல் இருந்ததாக உருக்கமாக பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அவர் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான ஜில்லுனு ஒரு காதல் சீரியலில் சஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி டிடி வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ரசிகர்கள் ஷாக்!

சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தீபிகாவை திரையில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில் தற்போது தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய அப்பா அம்மாவிற்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்ற அவருடைய கனவு நினைவாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார். சிறிய வீடாக இருந்தாலும் நான் என்னுடைய காசில் கட்டி கொடுத்ததை நினைத்து மிகவும் சந்தோசமாக இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!