முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

0
முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
முக்கிய சீரியலில் இருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். அவர் தொடர்ந்து சன் டிவி “ரோஜா” சீரியலில் நடித்து வரும் நிலையில், அந்த சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வெங்கட்:

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா என்றால் அனைவருக்கும் தெரியும். அவர் நிஜ பெயர் வெங்கட் ரங்கநாதன். அவரது சொந்த ஊர் பழனி ஆகும். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மூலம் தான் முதன் முதலாக நடிக்க தொடங்கினார். பின்னர் குந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் புதிய அவதாரம் – அவரே வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி ரோஜா சீரியலில் அர்ஜுனின் தம்பியாக நடித்து வருகிறார். ஆனால் அனைத்து சீரியல்களை விட விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தான் நல்ல புகழ் கிடைத்தது. மேலும் ஜீவாவாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் சன் டிவி ரோஜா சீரியலில் இருந்து விலக உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. உங்கள் அஸ்வின் நிரந்தரமாக ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறார். உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்து விடுங்கள்.

கடைசியாக அம்மாவை பார்த்த சந்தோசத்தில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வெளியான புகைப்படம்!!

ஆனால் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி’ என்று பதிவிட்டுள்ளார். சீரியலில் இருந்து ஏன் விலகினார் என்ற தெளிவான காரணம் எதுவும் தெரியவில்லை. இவர் பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்துள்ளார். அதன் பின் புதுக்கோட்டை மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார் எனவும், இவரது மனைவி பெயர் அஜந்தா அவர் ஒரு புகைப்படக் கலைஞர். இவருக்கு தேஜா என்ற ஒரு மகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!