‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை – அடுத்து வரும் ட்விஸ்ட்!

0
='பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை - அடுத்து வரும் ட்விஸ்ட்!
='பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை - அடுத்து வரும் ட்விஸ்ட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, வருத்தத்தில் முல்லை – அடுத்து வரும் ட்விஸ்ட்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், அடுத்து வரப்போகும் திருப்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா கர்ப்பம்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சில மாதங்களாகவே முல்லை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதை வைத்து தான் கதை நகர்ந்து வந்தது. இது பற்றி மடறவர்கள் சாதாரணமாக கேட்டாலும்,அக்கறையுடன் கேட்டாலும் கூட முல்லை அழ தொடங்கி விடுகிறார். குழந்தை தனக்கு பிறக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் முல்லைக்கு அதிகரிக்க தொடங்கி, கதிரிடம் இது பற்றி சொல்லி வருத்தப்படுவார். கதிரும் முல்லையை சமாதானம் செய்து வருவார்.

பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜா வருணி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதனை அறிந்து கொண்ட தனம் இவர்களை டெஸ்ட் எடுத்து தெரிந்து கொள்ள டாக்டரிடம் அனுப்பி வைப்பார். அங்கு டெஸ்ட் செய்து பார்த்ததில் முல்லைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது. இதனை கதிர் முல்லைக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். எந்த பிரச்சனையும் இல்லை, குழந்தை பிறக்கும் என்று டாக்டர் கூறியதாக சமாளித்து விடுவார். ஆனாலும் முல்லை தொடர்ந்து வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்.

பிறந்தநாளில் லட்சுமியின் அப்பா பற்றிய உண்மையை சொல்லும் கண்ணம்மா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இப்படி இருக்கையில் சமீபத்தில் தான் திருமணம் முடிந்த ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாகவும், இதனால் முல்லை மீண்டும் அதிக வருத்தப்படுவது போல் காட்சிகள் வர இருக்கிறது. திருமணம் முடிந்து 4 வருடம் ஆன முல்லைக்கு குழந்தை இல்லாமல் ஐஸ்வர்யா குழந்தை பெற்றுக் கொண்டால் அனைவரும் முல்லையை கேட்பார்கள் என்று பயப்படுவது போல் காட்சிகள் வர இருக்கிறது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அமைதி குலைய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here