விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா? அடுத்து வரப்போகும் திருப்பம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது முல்லை குழந்தைக்காக காத்திருக்கும் வேளையில், தீடீரென ஐஸ்வர்யா கர்ப்பமாவதை போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தற்போது கொண்டாட்டத்துடன் களைகட்டி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது குடும்பத்தாருடன் மீண்டுமாக இணைந்துள்ளனர். இந்த சந்தோஷத்துடன் தற்போது கயல் பாப்பாவிற்கு பிறந்தநாள் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ரௌடிகளை அடித்து நொறுக்கிய கதிர் – படப்பிடிப்பு வீடியோ வைரல்!

இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கயலின் பிறந்த நாளுக்கு பின்பாக அடுத்தகட்ட கதைக்களம் என்னவாக இருக்கும் என்கிற ஹின்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, முல்லை தனக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருக்க அது நடக்கவில்லை என்று கதிரிடம் கூறி வருத்தப்படுவதாக சில காட்சிகள் இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் வெளியானது. இந்த கதைக்களம் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்தகட்டமாக இடம் பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி, கண்ணம்மாவை மீண்டும் சந்தித்த நீதிபதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!

அதாவது குழந்தைக்காக காத்திருக்கும் முல்லைக்கு குழந்தை உருவாகலாம், இல்லையென்றால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இணைந்திருக்கும் சமயத்தில் ஐஸ்வர்யா கர்ப்பமாகி முல்லைக்கு அதிர்ச்சி கொடுப்பது போலவும் அடுத்தகட்ட கதைக்களம் இருக்கலாம் என்றும் தெரிகிறது. அப்படி ஒருவேளை ஐஸ்வர்யா கர்ப்பமானால் இதன் மூலம் கண்டிப்பாக முல்லைக்கு புதிய பிரச்சனைகள் உருவாகும். இந்த காட்சிகளுடன் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அடுத்த கட்டத்திற்கு நகர இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here