கண்ணனை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்ளும் மூர்த்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறப்பை தொடர்ந்து பல திருப்புமுனைகள் நடக்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்ட்டு வரும் நிலையில், இன்றைய சீரியலில் நடந்த காட்சிகளை காண்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
லட்சுமி அம்மா இறந்ததை அறிந்து கண்ணன் கோவமாக வீட்டிற்கு வந்து அனைவரிடமும் ஏன் இப்படி செய்தீங்கன்னு சொல்லி கோவப்படுறான். அப்புறம் தனம் சொன்னதை கேட்டு வீட்டில் வந்து நானே எங்க அம்மாவ கொன்னுட்டேன் என்று சொல்லி கதறி அழுகிறான். ஐஸ்வர்யா அவனுக்கு ஆராய்தல் சொல்லி சமாதானம் செய்கிறார். நான் எங்க வீட்ட நம்பியிருக்கனும் அவசரப்பட்டு கல்யாணத்த பண்ணி என் குடும்பத்தையே இழந்துட்டேன். இப்போ எங்க அம்மா என் குடும்பத்துக்கே இல்லாம போய்ட்டாங்க என்று சொல்லி கண்ணன் அழுகிறார். இங்கே மூர்த்தி வீட்டில் யாரும் தூங்காமல் உள்ளனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து பாதியில் விலகிய லட்சுமி அம்மா – மனம் திறந்து பேட்டி!
ஜெகாவும், முல்லை அம்மாவும் சமாதானம் சொல்லி அனைவரையும் தூங்க சொல்கின்றனர். காலையில் அம்மாவிற்கு இறுதி சடங்குகளை செய்வதற்கு கண்ணன் அவர் அம்மா இறந்த இடத்திற்கு வந்து சடங்குகளை செய்கிறான். அங்கு மூர்த்தி ஜீவா கதிர் ஜனார்த்தன், முருகன், ஜெகா அனைவரும் வருகின்றனர். கண்ணனை ஜனார்த்தனன் தடுக்க போக அவரை மூர்த்தி தடுக்கிறார். பால் ஊற்றி முடித்துவிட்டு எழுந்து கும்பிடும் கண்ணன், தப்புதான் அம்மா நா வேணும்னு பண்ணலமா அந்த புள்ளைக்கு புடிக்காத கல்யாணம் நடக்க கூடாதுனுதான் ஏதோ செய்ய போய் இப்படி பண்ணிட்டேன் அம்மா என்று கதறி அழுகிறான்.
TN Job “FB
Group” Join Now
இதை பார்த்து மூர்த்தியும் மற்ற தம்பிகளும் அழுகின்றனர். அப்போது, மாமா முருகன் டேய் கண்ணா என்று கூப்பிட கண்ணன் எல்லாரையும் பார்த்து விட்டு அந்த இடத்தில இருந்து நகர்ந்து விடுகிறான். அதன்பிறகு ல்ஷ்மி அம்மாவின் இறுதி சடங்கு நடந்த இடத்தில் பாலை கூற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். அதன்பிறகு அங்கிருக்கும் ஒருவர் மூர்த்தியிடம் அஸ்தியை கொடுக்கிறார். அதை வாங்கி கொண்டு அனைவரும் கிளம்பும்போது ஜனார்த்தன் நீ ஏண்டா நிக்கிர போ என்று கண்ணனிடம் சொல்கிறான். கடைசியாக மூர்த்தி மட்டும் கண்ணனை திரும்பி கவலையுடன் பார்க்கும் படி இன்றைய தொடர் முடிகிறது.