லட்சுமியை பார்க்க விடாமல் கண்ணனை தடுக்கும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

0
லட்சுமியை பார்க்க விடாமல் கண்ணனை தடுக்கும் குடும்பம் - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோட்!
லட்சுமியை பார்க்க விடாமல் கண்ணனை தடுக்கும் குடும்பம் - இன்றைய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோட்!
லட்சுமியை பார்க்க விடாமல் கண்ணனை தடுக்கும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோட்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமியை கண்ணன் பார்க்க வருகிறார். அப்போது அங்கு வரும் மூர்த்தி, ஜீவா, கதிர் அனைவரும் கண்ணனை தடுக்க, லட்சுமியும் கண்ணனை பார்த்தால் செத்து விடுவேன் என மறுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணனை நினைத்து வருத்தப்பட்ட லட்சுமி, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்ததும் மருத்துவமனைக்கு பதறி அடித்துக்கொண்டு செல்லும் கண்ணனை, லட்சுமியை பார்க்க விடாமல் தடுக்கிறார்கள் ஜீவாவும், மூர்த்தியும். அம்மா இப்படி ஆனதுக்கு காரணம் நீதான், நீ போனதுல இருந்து அம்மா சரியா சாப்பிடல, வீட்ல யாரும் சரியா இல்ல என கோவமாக கத்துகிறார் ஜீவா. பின்னர் ப்ளீஸ் என கெஞ்சும் கண்ணனை அங்கிருந்து விரட்டுகிறார்கள்.

‘பாக்கியலட்சுமி’ முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வரை – டாப் சீரியல் ப்ரோமோ கமெண்ட்கள்!

அம்மாவை பார்க்க கண்ணனை விட வேண்டாம் என மூர்த்தி கூறி விட்டு செல்ல கண்ணன் அழுதுகொண்டு நிற்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும் கதிருக்கு சாப்பாடு எடுத்து தர சொல்லி முல்லையிடம் கூறுகிறார் தனம். லட்சுமியை பற்றி தனமும், முல்லையும் விசாரிக்கிறார்கள். தனம் லட்சுமியை பார்க்க வேண்டும் என சொல்ல, அம்மாவுக்கு ஒன்னும் இல்லை அவங்க இன்னும் 2 நாளில் வீட்டுக்கு வந்துடுவாங்க என கூறிவிட்டு, கண்ணனை மருத்துவமனையில் பார்த்ததாக கதிர் சொல்லுகிறார்.

பின்னர் லட்சுமியை பார்க்க கண்ணனை அனுமதிக்க வேண்டாம் என தனமும், முல்லையும் கூறுகிறார்கள். மருத்துவமனையில் ஜீவாவும், மீனாவும் லட்சுமியை கவனித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கண்ணன் இன்னும் வாசலில் நிற்பதை ஜீவா, மீனாவிடம் சொல்ல அவர் பார்த்து விட்டு வருகிறேன் என கிளம்புகிறார். தொடர்ந்து லட்சுமி அத்தை கண்ணனை பார்த்தா சரி ஆகிடுவாங்க என கூற, மூர்த்தி அண்ணன் கோவப்படுவார் என ஜீவா மறுக்கிறார்.

அஞ்சலியின் சீமந்தத்திற்கு வரும் கண்ணம்மா, அதிர்ச்சியில் சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

கண் விழிக்கும் லட்சுமிக்கு ஜீவா சாப்பாடு ஊட்டி விடுகிறார். அப்போது மீனா, கண்ணனை பார்க்குறீங்களா என கேட்க அவனை நான் பார்த்தால் இப்போது இங்கேயே உயிரை விட்டு விடுவேன் என லட்சுமி கூறுகிறார். பிறகு அம்மாவை பார்க்க வேண்டும் என கண்ணன் மீனாவிடம் கெஞ்ச, உங்க அம்மா நல்லா இருக்கணும்னா இங்க இருந்து நீ கெளம்பு, உன்ன பாக்க அவங்களுக்கு விருப்பம் இல்ல, இன்னும் ஏன் இங்க நின்னுட்டு இருக்க என மீனா கூற கண்ணன் வருத்தப்படுகிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here