கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் - இன்றைய
கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணன் தான் லட்சுமி அம்மா இறப்பிற்கு காரணம் என சொல்லும் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா இறந்துவிட்டதை ஜெகா ஜனார்தனிடம் போன் செய்து சொல்கிறார். உடனே அவர் கடையில் இருந்த ஐஸ்வர்யாவிடம் சொல்லி கடைக்கு விடுமுறை விடுகிறார். ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் வர கூடாது என பார்வதி சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா நன்றாக வாழ்ந்து மகன்கள் திருமணத்தை பார்த்துவிட்டு தான் இறந்திருக்காங்க, அதுனால அடுத்து நடக்க வேண்டியதை பார்த்து நல்ல படியாக வழி அனுப்பி வைக்க வேண்டும் என ஜெகா சொல்கிறார். ஐஸ்வர்யா சூப்பர் மார்க்கெட்டில் கண்ணன் போனை தேடி எடுக்கிறார். அப்போது ஜெகா ஜனார்தனனிற்கு போன் செய்கிறார். என்ன இவ்வளவு காலையில் போன் செய்திருக்கிங்க என ஜனார்த்தனன் கேட்க, அத்தை தவறிவிட்டார்கள் என சொல்கிறார்.

யாரு நம்ம சம்மந்தி அம்மாவ என சொல்லி அவர் உடனே வருகிறேன் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவிடம் சம்மந்தி அம்மா இறந்துவிட்டார்கள் என சொல்ல, யாரு சம்மந்தி அம்மா என ஐஸ்வர்யா கேட்கிறார். கண்ணனின் அம்மா,அதான் உன் அத்தை என சொல்ல, ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். பின்னர் கடைக்கு விடுமுறை விட்டு அவர் கிளம்பி அங்கே செல்கிறார். ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து எப்படி மாமாவிடம் இதை நான் சொல்வேன், என்னால தான் எல்லாம் நடந்தது என எல்லாரும் சொல்லுவாங்களே, மாமாவே அப்படி நினைத்தால் என்ன செய்வது என சொல்லி கதறி அழுகிறார்.

இரட்டை குழந்தை பற்றி சொல்லி கண்ணம்மாவை பிளாக்மெயில் செய்யும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அதன் பின்னர் அவர் மயங்கி விழுகிறார். ஜனார்த்தனன் வீட்டிற்கு சென்றதும் மீனா அவர் அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார். ஜெகாவை அழைத்து ஆகவேண்டிய காரியத்தை பாப்போம் என சொல்கிறார். கடைக்குட்டி என செல்லம் கொடுத்து வளர்த்த பையன் இப்படி செய்துவிட்டார் என நினைத்து வருத்தத்தில் அவர் சென்று விட்டார். பந்தல் போட வேண்டும் சொந்தக்காரங்க எல்லாரிடமும் சொல்லிவிட சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மயக்கத்தில் இருக்க புது நம்பரில் இருந்து போன் வருகிறது.

ஐஸ்வர்யா அதை எடுக்கவே இல்லை விடாமல் போன் அடித்துக் கொண்டே இருக்கிறது. முல்லையின் அம்மா மல்லிக்கு போன் செய்து சொல்கிறார். என்னதான் பிரச்சனை இருந்தாலும் சொல்லவேண்டிய கடமை அதான் சொன்னேன் என சொல்கிறார். பின்னர் ஐஸ்வர்யா கண் விழித்து பார்க்க போன் அடித்துக் கொண்டு இருக்கிறது. புது நம்பராக இருக்கு ஒரு வேலை மாமாவாக இருக்கும் என எடுத்தால் அதில் வேறு ஒருவர் பேசுகிறார்.

தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!

பின் ஐஸ்வர்யா அத்தையை பார்க்க செல்ல, ஈஸ்வரி அம்மா தடுக்கிறார். இதனை வருசம் அவங்க உடம்பு சரி இல்லாமல் இருந்தாலும் நன்றாக இருந்தாங்க, ஆனால் நீ வந்து தான் அவங்களை இப்படி செய்துவிட்டாய் என திட்டுகிறார். உனக்கு அத்தாச்சியை பார்க்க தகுதி இல்லை என சொல்கிறார். உள்ளே போகாதே என சொல்ல வாசலில் நின்று ஐஸ்வர்யா அழுகிறார். ஐஸ்வர்யாவை ஓரமாக நிற்க சொல்லி ஜனார்த்தனன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!