திருச்சிக்கு செல்லும் கண்ணன், லட்சுமி அம்மா இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
திருச்சிக்கு செல்லும் கண்ணன், லட்சுமி அம்மா இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர் - இன்றைய
திருச்சிக்கு செல்லும் கண்ணன், லட்சுமி அம்மா இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
திருச்சிக்கு செல்லும் கண்ணன், லட்சுமி அம்மா இறந்துவிட்டதாக சொன்ன டாக்டர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், காலையில் சீக்கிரமாக எழுந்து கண்ணன் திருச்சிக்கு கிளம்பி செல்கிறார். பின்னர் லட்சுமி அம்மா மூச்சு பேச்சு இல்லாமல் இருக்க, டாக்டரை அழைத்து சோதனை செய்து பார்க்கின்றனர். டாக்டர் அம்மா இறந்துவிட்டதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா தூங்கி கொண்டிருக்க அருகில் கண்ணனை காணவில்லை என தேடுகிறார். கண்ணன் அவருக்கு முன்னாள் எழுந்து கிளம்பி நிற்கிறார். அதுக்குள்ள எழுந்துவிட்டிங்களா என கேட்க இரவெல்லாம் தூங்கவே இல்லை என கண்ணன் சொல்கிறார். என்னாச்சு என ஐசு கேட்க, என்னை நம்பி பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறார். நான் நல்லபடியாக செய்ய வேண்டும் என கண்ணன் கூறுகிறார்.

பின்னர் ஐஸ்வர்யா நானும் உங்களுடன் வந்து வண்டியில் ஏறும் வரை இருக்கிறேன் என சொல்ல,கண்ணன் சரி என சொல்கிறார். ஐஸ்வர்யாவும் கண்ணனும் கை கோர்த்து நடந்து வந்து கடை வாசலில் நிற்கின்றனர். போன் உள்ளே இருக்கு எப்படி எடுப்பது என குழப்பத்தில் இருக்கின்றனர். நான் எடுத்து வைக்கிறேன் மாமா என ஐஸ்வர்யா சொல்கிறார். பின்னர் வண்டி வர கண்ணன் அதில் ஏறி செல்கிறார். மூர்த்தியும் தனமும் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

லட்சுமிக்கு ட்ரெஸ் கொடுக்க செல்லும் ஹேமா, இரட்டை குழந்தைகள் குழப்பத்தில் இருக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

முல்லை அவர்களுக்கு டீ போட்டு கொண்டிருக்கிறார். கதிர் இன்னும் எந்திரிக்கவில்லையா என கேட்க அவருக்கு இரவெல்லாம் கேட்ட கனவு அதுனால சரியாக தூங்கவில்லை என முல்லை சொல்கிறார். தனம் எனக்கும் சரியாக தூங்க முடியவில்லை என சொல்கிறார். ஜீவா எனக்கும் சரியாக தூக்கம் வரவில்லை என சொல்கிறார். அப்போது கதிர் எழுந்து வந்து அம்மா தூங்கி கொண்டிருப்பதை பார்த்து சிரிக்கிறார். ஆனால் எதோ தவறாக உணர்ந்து அருகில் வந்து தொட்டு பார்க்கிறார்.

கைகள் ஜில்லுனு இருக்க, மூச்சு இருக்கிறதா என பார்க்கிறார். பின்னர் மூச்சு இல்லாததை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறார். அம்மா அம்மா என அருகில் அமர்ந்து அழ, முல்லை அத்தை என கத்திக் கொண்டு வருகிறார். மூர்த்தி தனம் ஜீவா இவர்கள் சத்தம் கேட்டு வர அம்மா எந்திரிக்கவில்லை என முல்லை சொல்கிறார். மூர்த்தி தனம் அவர்களை எழுப்ப, கதிர் அவருக்கு எதோ ஆனதை நினைத்து விலகி செல்கிறார். தனத்தின் அம்மா வந்து என்னாச்சு என பார்க்க, அவரும் லட்சுமி அம்மா இறந்துவிட்டார் என நினைத்து விலகுகிறார்.

தமிழகத்தில் மின்பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 3.16 கோடியை தாண்டியது – மின்வாரிய அதிகாரி தகவல்!

மீனா என்னாச்சு என கேட்க, தனத்தின் அம்மா கையை பிடித்து தலையை அசைகிறார். ஜீவாவை வண்டி பிடித்து வர சொல்ல, அவர் சென்று வண்டி எதுவும் இல்லை என சொல்கிறார். அருகில் இருக்கும் டாக்டரை கூட்டிக் கொண்டு வாங்க என தனத்தின் அம்மா சொல்ல, ஜீவா சென்று கூட்டி வருகிறார். டாக்டர் அம்மாவை பரிசோதனை செய்து, அவர் தவறி விட்டதாக மூர்த்தியிடம் சொல்கிறார். அதை கேட்டு குடும்பத்தினர் கதறி அழுகின்றனர். ஆனால் தனம் நேற்று என்னிடம் நன்றாக பேசினார்கள் என சொல்லி நம்பாமல் இருக்க, தனத்தின் அம்மா உண்மையாகவே சாமந்தி அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க என சொல்கிறார். கதிர் தனத்தின் கையை பிடித்து ஆமாம் என்பது போல் சொல்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!