ஐஸ்வர்யாவை படிக்க சொல்லும் கண்ணன், கடை கடையாக வேலை தேடுவதை பார்த்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
ஐஸ்வர்யாவை படிக்க சொல்லும் கண்ணன், கடை கடையாக வேலை தேடுவதை பார்த்த கதிர் - இன்றைய
ஐஸ்வர்யாவை படிக்க சொல்லும் கண்ணன், கடை கடையாக வேலை தேடுவதை பார்த்த கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
ஐஸ்வர்யாவை படிக்க சொல்லும் கண்ணன், கடை கடையாக வேலை தேடுவதை பார்த்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் சேர்ந்து லட்சுமி அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவரும் இருவரையும் சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்கிறார்.கண்ணன் ஐஸ்வர்யா படிப்பை தொடர சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா படுக்க வைக்க முல்லை வருகிறார். அவரை சிறிது நேரம் அமர்ந்து பேச சொல்கிறார். பின்னர் கதிரும் அங்கே வர அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முல்லையை நல்ல மருமகள் என புகழ்ந்து கொள்கிறார். மீனா குழந்தையை பார்த்துவிட்டேன் தனம் குழந்தை வர போகிறது நீயும் எனக்கு சீக்கரம் எனக்கு குழந்தை பெற்று தர வேண்டும் என கேட்கிறார். கதிரும் முல்லையும் சரி என சொல்லி அவரை தூங்கவைத்துவிட்டு கிளம்புகிறார்.

அஞ்சலிக்கு நன்றி சொல்லும் குடும்பத்தினர், கண்ணம்மாவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின்னர் கண்ணனுக்கு காபி போட்டுக் ஐஸ்வர்யா கொடுக்க, கண்ணன் நான் பால் தான் குடிப்பேன் என சொல்கிறார். ஐஸ்வர்யாவை கல்லூரிக்கு கிளம்ப சொல்ல அவர் கண்ணனையும் வர சொல்கிறார். ஆனால் கண்ணன் நான் வேலைக்கு செல்ல வேண்டும் நீ ஒரு ஆள் தான் படிக்க முடியும் நீ கிளம்பு நான் உன்னை பஸ் ஸ்டாப்பில் விடுகிறேன் என சொல்கிறார். பின்னர் கண்ணன் வேலை தேடி கடை கடையாக ஏறி இறங்குகிறார்.

அப்போது கதிர் ஒரு கடையில் பொருள்கள் கொடுக்க வர அங்கே கண்ணன் வருகிறார். எந்த வேலையாக இருந்தாலும் சரி என சொல்ல அதை கதிர் பார்த்துவிடுகிறார். அப்போது கண்ணனை பார்த்து படித்த பையனாக இருக்க இப்படி டேபிள் துடைக்க வந்திருக்க என கதிரிடம் சொல்ல கண்ணனும் கதிரை பார்த்துவிடுகிறார். பின்னர் அழுது கொண்டே கண்ணன் அங்கிருந்து கிளம்ப, பின்னால் சென்று கதிர் பார்க்கிறார்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ முதல் சன் டிவி ‘ரோஜா’ வரை – டாப் சீரியல் கமெண்ட்கள்!

கதிருக்கு ஒரு மாதிரி ஆகிறது. அவர் சோகமாகவே இருக்க ஜீவா என்ன நடந்தது என கேட்கிறார். ஒன்றுமில்லை என கதிர் மறைக்க, ஜீவா கண்டுபிடித்துவிடுகிறார். பின்னர் கதிர் கண்ணன் வேலை தேடி கடை கடையாக செல்வதை பார்த்தேன் என சொல்ல ஜீவா, நம்மை போல அவனும் ஆகக்கூடாது என நினைத்தோம் ஆனால் அவனும் இப்படி ஆகிட்டான் என நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது மீனாவின் அப்பா அங்கே வர, சூப்பர் மார்க்கெட் பார்க்க ஆள் வேண்டும் என கேட்டேனே என சொல்கிறார். என்னால தனியாக பார்க்க முடியவில்லை என சொல்கிறார். உடனே கண்ணனுக்கு வேலை தரும்படி சொல்கிறார் . இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!