கயலை கண்ணன் வைத்திருப்பதை பார்த்த மூர்த்தி, சண்டை போடும் மீனா முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கயலை கண்ணன் வைத்திருப்பதை பார்த்த மூர்த்தி, சண்டை போடும் மீனா முல்லை - இன்றைய
கயலை கண்ணன் வைத்திருப்பதை பார்த்த மூர்த்தி, சண்டை போடும் மீனா முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கயலை கண்ணன் வைத்திருப்பதை பார்த்த மூர்த்தி, சண்டை போடும் மீனா முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா கயல் பாப்பாவை வைத்திருப்பதை மூர்த்தி பார்த்து விட்டு கோபப்படுகிறார். பின் ஐஸ்வர்யாவிடம் மீனா பேசியதை பார்த்த முல்லை ஏன் பேசுனீங்க என கேட்கிறார். உடனே மீனா கோவப்பட்டு கேள்வி கேட்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கயல் பாப்பா அழுவதால் வீட்டிற்குள் சென்று தூக்கி வருகிறார். அப்போது தனம் மீனா வீட்டிற்குள் இருந்து கண்ணன் கொஞ்சுவதை பார்க்கிறார். உடனே தனம் உள்ளே செல்ல மீனா நின்று பார்த்துக் கொள்கிறார். பின் ஐஸ்வர்யா போதும் கொண்டு போய் விட்டுவிடு என சொல்ல, கண்ணன் கயல் பாப்பாவை தூக்கி ரொம்ப நாள் ஆகுது என சொல்லி கொஞ்சுகிறார். பின் மூர்த்தி வந்துவிடுவார் நீ கூட்டிக் கொண்டு வா என தனம் சொல்ல, மீனா அவங்க தான் இல்லையே என சொல்கிறார்.

அந்த நேரம் பார்த்து மூர்த்தி அங்கே வர, கண்ணன் கயலை வைத்திருப்பதை பார்த்து கோபப்படுகிறார். கண்ணன் வீட்டிற்குள் வந்து கயலை விட்டுவிட்டு கயல் பாப்பா அழுதால் அதனால் தான் தூக்கினேன் என சொல்கிறார். பின் மூர்த்தி வீட்டில் இத்தனை பேர் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லையா என கேள்வி கேட்கிறார். பின் முல்லை கடைக்கு சாப்பாடு கொண்டு செல்ல, நீ எதற்கு அலைகிறாய் என கதிர் கேட்கிறார்.

கண்ணம்மாவிடம் 4 நாள் கெடு கேட்கும் சௌந்தர்யா, வெண்பாவை கடுப்பேத்தி அனுப்பிய கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கடை வேலை தொடங்க இருக்கிறது, ஒரு ஆள் தொடர்ந்து அங்கே இருக்க வேண்டும் வேலைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என கதிர் சொல்ல ஜீவாவும் ஆமாம் என சொல்கிறார். பின் முல்லை நான் வந்து வேலையை பார்த்துக் கேட்க கதிர் வேண்டாம் என சொல்கிறார். உடனே ஜீவா அந்த புள்ளை தான் ஆசைப்படுகிறது வரட்டும் என சொல்ல, அப்போ நீயும் மீனா அண்ணியை உன்னுடன் அழைத்துக் கொண்டு கடைக்கு செல் என கதிர் சொல்கிறார்..

மறுபக்கம் ஐஸ்வர்யா மீனா கோலம் போட வரும் போது பேசுகிறார். அப்போது மீனா அருகில் வந்து பேச சொல்ல, ஐஸ்வர்யா உங்க கோலம் நன்றாக இருக்கிறது என சொல்லி பேசுகிறார். அப்போது முல்லை அங்கே வந்து பார்த்துவிட, மீனாவிடம் அவளிடம் ஏன் பேசுறீங்க என கேள்வி கேட்கிறார். வீட்டில் ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கிறது என முல்லை சொல்ல, மீனா சண்டை போடுகிறார். உடனே அங்கே வந்த ஜீவா கதிர் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,280 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!

பின் கதிர் வந்து மீனாவை சமாளித்து அனுப்ப, முல்லை அதை பார்த்து சிரிக்கிறார். பின் தனம் கடை பற்றி பேசிக் கொண்டிருக்க, மீனா இவ்வளவு சின்ன பேப்பர் பார்த்து எப்படி பெரியதாக இருக்கிறது என கேட்க, நான் என்ன முட்டாளா என தனம் கேட்கிறார். உடனே முல்லை இவங்களுக்கு தான் எல்லாம் தெரியும் என நினைப்பு என சொல்ல, உடனே தனம் இருவரும் ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார். பின் நீங்க சொன்ன மட்டும் தான் நான் கேட்பேன் என முல்லை சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here