புது வீட்டிற்கு வரும் கண்ணன் ஐஸ்வர்யா, பால் கொடுக்க எதிர் வீட்டிற்கு சென்ற ஐஷு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
புது வீட்டிற்கு வரும் கண்ணன் ஐஸ்வர்யா, பால் கொடுக்க எதிர் வீட்டிற்கு சென்ற ஐஷு - இன்றைய
புது வீட்டிற்கு வரும் கண்ணன் ஐஸ்வர்யா, பால் கொடுக்க எதிர் வீட்டிற்கு சென்ற ஐஷு - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
புது வீட்டிற்கு வரும் கண்ணன் ஐஸ்வர்யா, பால் கொடுக்க எதிர் வீட்டிற்கு சென்ற ஐஷு – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா புது வீட்டிற்கு வருகின்றனர். பின் ஐஸ்வர்யா தனத்தின் வீட்டிற்கு சென்று பால் கொடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், ஐஸ்வர்யா புது வீட்டு வாசலில் கோலம் போட, மீனா அதை பார்த்து கடுப்பாகிறார். பின் ஐஸ்வர்யா நானும் உங்க வீட்டில் வந்து கோலம் போடவா என கேட்க வேண்டாம் என மீனா சொல்கிறார். உடனே கண்ணன் வந்து எதிர் வீட்டில் யாராவது பார்க்கிறார்களா என எட்டி பார்க்கிறார். பின் கஸ்தூரி எல்லாருக்கும் தெரியாமல் பின் வாசல் வழியாக வருகிறார். உடனே ஐஸ்வர்யா கேட்க எதிர் வீட்டில் பார்த்தால் என்ன ஆகும் என சொல்கிறார்.

எதிர் வீடு எங்க வீடு தான என கண்ணன் சொல்ல, மூர்த்திக்கு தெரிந்தால் என்னை என்ன நினைப்பார் என கஸ்தூரி சொல்கிறார். பின் உங்களை இந்த வீட்டில் சேர்த்து வைக்க வேண்டும் அதான் என்னுடைய ஆசை என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா நிறைய பால் ஊற்றுகிறார். அப்போது கஸ்தூரி எதற்கு என கேட்க, அக்கம் பக்கத்தினருக்கு கொடுக்க வேண்டும் அதற்கு தான் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவா கதிர் சேர்ந்து அனைவரும் கயல் பாப்பா நடப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹேமா தான் நீ பெற்ற பொண்ணு, உண்மையை கண்ணம்மாவிடம் சொன்ன சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

அப்போது தனம் மீனா வந்து என்ன பண்றீங்க என கேட்க கயல் பாப்பா நடப்பதை பார்த்து வீடியோ எடுத்துக் கொண்டிருக்கோம் என சொல்கின்றனர். அப்போது இன்னும் சில நாளில் பேச ஆரம்பித்துவிடுவார் அதை எல்லாம் கேட்க நன்றாக இருக்கும் என சொல்கின்றனர். பின் ஐஸ்வர்யா மூர்த்தி வீட்டிற்கு பால் கொண்டு போய் கொடுக்கிறேன் என சொல்கிறார். ஆனால் கண்ணன் வேண்டாம் என சொல்கிறார். கஸ்தூரி கொண்டு போய் கொடுக்க சொல்ல, கண்ணன் வேண்டாம் என சொல்கிறார்.

பொம்பளை புள்ள மேல டென்ஷன் ஆக மாட்டாங்க நீ போ என கஸ்தூரி சொல்ல, ஐஸ்வர்யா கதவை தட்டுகிறார். அப்போது மீனா சென்று எதற்கு இங்கே வந்த என கேட்க, உங்க கூட சண்டை போட வந்தால் தட்டு பால் எல்லாம் கொண்டுவருவேனா என கேட்கிறார். அப்போது, ஐஸ்வர்யா கேட்காமல் வீட்டிற்குள் வர, தனம் எதற்கு இங்கே வந்திருக்காள் அன்னைக்கு வாங்காமல் இருந்த சாவியை வாங்க வந்திருப்பாளோ என தனம் கேட்கிறார். உடனே ஐஸ்வர்யா நீங்க சொல்வது புரியவில்லை. ஆனால் நாங்க எதிர் வீட்டிற்கு புதிதாக குடி வந்திருக்கோம் என சொல்லி பால் கொடுக்கிறார்.

தமிழகத்தில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு – அரசு அறிக்கை!

நானும் என் கணவர் கண்ணனும் இங்கே தான் இருக்கோம் நீங்க எல்லாரும் ஒரு நாள் வீட்டிற்கு வர வேண்டும் என ஐஸ்வர்யா சொல்கிறார். எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது என சொல்லி, பால் கொடுக்கிறார். ஆனால் யாருமே எடுக்காமல் இருக்கிறார்கள். உடனே கயல் பாப்பாவை தூக்கிக் கொண்டு கொஞ்சுகிறார். பின் கயலை தூக்கிக் கொண்டு ஐஸ்வர்யா செல்ல, மீனா அது என் குழந்தை என சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா நான் சாயங்காலம் வரேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

உடனே தனம் நான் கேள்விப்பட்டேன் எதிர் வீட்டிற்கு புதிதாக யாரோ குடி வர இருக்காங்க என ஆனால் இவங்க என தெரியாது என சொல்கிறார். உடனே மூர்த்தி வீட்டில் கொஞ்ச நாள் ஆச்சும் நிம்மதியாக இருக்க முடியுதா என கேட்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யாவை நினைத்த வருத்தத்தில் இருக்க, கஸ்தூரி எதுவும் ஆகாது ஏன் நீ இப்படி டென்ஷனாக இருக்க என கேட்கிறார்., உடனே ஐஷு வர கண்ணன் அங்க யாரும் எதுவும் சொல்லவில்லையே என கேட்கிறார். அதெல்லாம் யாரும் என்னை எதுவும் சொல்லவில்லை என ஐஷு சொல்ல, கஸ்தூரி மேலே சந்தேகப்படுகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

நீ நாங்க இருவரும் குடும்பத்துடன் சேர வேண்டும் என நினைப்பது தான் சந்தேகமாக இருக்கிறது என சொல்கிறார். உடனே வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க என கேட்க எல்லாரும் தான் இருக்காங்க என ஐஷு சொல்கிறார். பின் கஸ்தூரி எனக்கு வேலை இருக்கிறது நான் சென்று வருகிறேன் என சொல்கிறார். உடனே கண்ணன் நிஜமாலுமே ஒன்னும் சொல்லவில்லையா என கேட்க, ஆமாம் சொல்லவில்லை உனக்கும் உன் வீட்டை விட்டு வெளியே இருப்பது போல இருக்காது அவர்களை தினமும் பார்க்கலாம் என ஐஷு சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here