கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா - இன்றைய
கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை புரிந்து கொண்ட மூர்த்தி, இட்லி கடை தொடங்கிய ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி கண்ணன் மீது தப்பு எதுவும் இல்லை என நினைத்து வருத்தப்படுகிறார், மறுபக்கம் ஐஸ்வர்யா சாப்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்ய இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கடையில் கண்ணன் ஏன் வேலை செய்யவில்லை என கேட்க அவரது அப்பாவிற்கு போன் செய்கிறார். ஆனால் முல்லை அவர் போனை பேசவிடாமல் தடுக்கிறார். ஆனால் மீனா நான் போன் செய்வேன் என சொல்ல கயல் அழ தொடங்குகிறார். பின் கண்ணன் மூர்த்தி பேசியதை நினைத்து வருத்தப்பட ஐஸ்வர்யா கடைக்கு சென்று கணக்கு பார்த்தால் அவருக்கு எல்லாம் புரிந்துவிடும் நீ வருத்தப்படாமல் இரு என தைரியம் சொல்கிறார்.

அப்போது கடையில் ஜீவா மற்றும் கதிர் பேசிக் கொண்டிருக்க, நம்ம கண்ணன் இப்படி செய்வான் என நினைக்கவே இல்லை தேவை இல்லாத வேலை எல்லாம் பார்த்து பிரச்சனையில் சிக்கிவிடுகிறான் என புலம்பி கொண்டிருக்க மூர்த்தி வருகிறார். கடை கணக்கில் எதாவது நஷ்டம் ஆகி இருந்தால் நாங்க சமாளித்து கொள்கிறோம் என சொல்ல, அதெல்லாம் தேவை இல்லை கடை கணக்கு எல்லாம் நல்ல லாபத்தில் தான் இருக்கிறது. அதுவும் அவன் இலவச பொருள்கள் கொடுத்த அன்று எல்லாரும் 5000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கி சென்றிருக்கிறார்கள் அதனால் நல்ல லாபம் என சொல்கிறார்.

கண்ணம்மா வீட்டிற்கு பாரதி கிளம்ப சந்தோஷத்தில் குடும்பத்தினர், லட்சுமியின் நிலை என்ன? – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கண்ணன் மூன்று நாள் கடையை திறந்தது சரி தான் என சொல்லி நான் தான் அவனை புரிந்து கொள்ளாமல் திட்டிவிட்டேன் என மூர்த்தி வருத்தப்படுகிறார். அவனை பார்த்தால் கொஞ்சம் பேசுங்கள் என சொல்கிறார். பின் கண்ணனிடம் ஐஸ்வர்யா நான் ஒரு முடிவு செய்துள்ளதாக சொல்லி இட்லிகடை ஒன்றை தொடங்குகிறார். அப்போது முல்லை பார்த்து கோபப்படுகிறார். முல்லை சென்று தனத்தை கூப்பிட அவர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ஐஸ்வர்யா தனத்திடம் இட்லி வாங்கி கொள்ளுங்கள் என சொல்ல, எப்படி கத்துறா பாருங்க என முல்லை கோபப்படுகிறார்.

திருச்சி தேசிய கல்லூரிக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!

என்ன இப்படி பேசுகிறாய் என கண்ணன் சொல்ல, இட்லி வாங்க சொன்னேன். அவங்களுக்கும் நேரம் மிச்சம் நமக்கும் எல்லாம் வித்துரும் என சொல்கிறார். அப்போது கஸ்தூரி வர ஐஸ்வர்யா இட்லி விற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என்ன இதெல்லாம் என கேட்க, காலேஜ் போகவில்லையா என கேட்கிறார். இதை வித்துவிட்டு போவோம் என சொல்ல, சூப்பர் மார்க்கெட் போகவேண்டாம் என முடிவு செய்துள்ளோம் அதான் என சொல்ல, உன்னை எப்படி எல்லாம் வாழ வைக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் நீ இப்படி இருக்கிறாய் என கேட்கிறார். எங்களுக்கு தொழில் வேண்டும் என ஐஸ்வர்யா சொல்ல, கஸ்தூரி தனத்தை பார்க்க செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!