தனத்தின் பிறந்தநாளுக்கு போட்டி போட்டு சமைக்கும் மீனா, ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
தனத்தின் பிறந்தநாளுக்கு போட்டி போட்டு சமைக்கும் மீனா, ஐஸ்வர்யா - இன்றைய
தனத்தின் பிறந்தநாளுக்கு போட்டி போட்டு சமைக்கும் மீனா, ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
தனத்தின் பிறந்தநாளுக்கு போட்டி போட்டு சமைக்கும் மீனா, ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தின் பிறந்தநாள் அன்று லட்சுமி அம்மாவை பற்றி நினைத்துக் கொண்டு தனம் வருத்தப்பட அப்போது கண்ணன் நக்கலாக பேசுகிறார். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் போட்டி போட்டுக் கொண்டு சமையல் செய்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் அவருடைய பிறந்தநாளில் லட்சுமி அம்மாவை பற்றி நினைத்து பார்க்கிறார். லட்சுமி அம்மா என்னுடைய பிறந்தநாளை மறக்கவே மாட்டார் என சொல்ல, எனக்கு ஒவ்வொரு நாளும் அத்தை நினைப்பாகவே இருக்கிறது என சொல்கிறார். அப்போது கண்ணன் நீங்க சொல்லிடீங்க என்னால் சொல்ல முடியவில்லை என சொல்கிறார். தினமும் அம்மா என்னுடைய கனவில் வருகிறார் என சொல்ல, முல்லை வந்து எதாவது சொல்வாரா என கேட்கிறார். அப்போது கண்ணன் சீக்கிரம் பேரக் குழந்தை பெற்றுத்தர சொல்லி சொன்னதாக சொல்ல, தனமும் முல்லையும் அடிக்க வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது ஐஸ்வர்யா வர கண்ணன் சொன்னதை சொல்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா நேற்று நான் எதற்கு வடை செய்தேன் அத்தை கனவில் வந்ததாக இவன் சொன்னான் அதனால் தான் என சொல்கிறார். பின் மீனா வர ஐஸ்வர்யாவிடம் போட்டிக்கு தயாராக இருக்கியா என கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா நான் தயார் என சொல்ல 2 மணி நேரத்தில் சமைக்க வேண்டும் என சொல்கிறார். இருவரும் சமையல் செய்ய சென்றுவிட என்ன நடக்க போகிறது என அனைவரும் வெளியே காத்திருக்கின்றனர்.

பின் இருவரும் சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா வேண்டும் என்றே ஐஸ்வர்யாவின் அடுப்பை அணைத்து விட அவர் கோவமாக பேசுகிறார். பின் மீனாவின் அடுப்பை ஐஸ்வர்யா அணைத்து விடுகிறார். இருவரின் சண்டை சத்தமும் வெளியே வர கேட்கிறது. இந்நிலையில் மீனாவும் ஐஸ்வர்யாவும் ஒன்றுமில்லை என சொல்லி சமைக்க தொடங்குகின்றனர். பின் மூர்த்தி மற்றும் அனைவரும் கடையில் இருந்து வருகின்றனர்.

மாப்பிள்ளை வீட்டை துரத்தி விட்ட வெண்பா, ஹேமா அம்மா யார் என கேட்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது ஜீவா மீனா எங்கே என கேட்க அவர் தனம் அக்காவிற்காக சமைக்க இருக்கிறார் என சொல்கிறார். ஜீவா அதை கேட்டு அதிர்ச்சி அடைய உண்மையாகவே மீனா சமைக்கிறாளா என கேட்கிறார். அப்போது கதிர் அவர் சமையலை பற்றி தான் தெரியுமே நீங்க அவர்களை கிண்டல் செய்யாதீர்கள் என சொல்கிறார். பின் மூர்த்தி தனத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல என்ன பரிசு கொடுத்திருப்பார் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். ஐஸ்வர்யா மூர்த்தி கொடுத்ததை வாங்கி பார்க்க அனைவரும் அதில் என்ன இருக்கும் என ஆவலுடன் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here