கண்ணனிற்கு உதவி செய்த ஜீவா, முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

0
கண்ணனிற்கு உதவி செய்த ஜீவா, முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் - இன்றைய எபிசோட்!
கண்ணனிற்கு உதவி செய்த ஜீவா, முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் - இன்றைய எபிசோட்!
கண்ணனிற்கு உதவி செய்த ஜீவா, முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படும் கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யா இரவு சாப்பிட வெளியே போக ஆனால் கண்ணன் பணம் எடுத்துக் கொண்டு வர மறந்துவிடுகிறார். அதனால் ஜீவா வந்து உதவி செய்கிறார். பின் முல்லையின் அம்மா அப்பா வந்து பார்க்கிறார்கள். அவர்கள் தனத்தை நினைத்து பெருமைப்படுகின்றனர். பின் முல்லை குழந்தையை நினைத்து ஆசையாக இருக்க கதிர் அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தெரியாமல் இரவு சாப்பிட செல்கின்றனர். அப்போது எல்லாம் சாப்பிட்டுவிட்டு காசு கொண்டு வரவில்லை என நினைக்கிறார். பின் ஐஸ்வர்யா இங்கே மாவு கூட ஆட்ட முடியாதே என பயப்பட அப்போது கண்ணன் அண்ணனிடம் உதவி கேட்போம் என நினைத்து ஜீவாவிற்கு போன் செய்கிறார். ஜீவா தூக்கத்தில் போனை எடுக்க அப்போது கண்ணன் போன் செய்வதை பார்த்துவிட்டு அவருடைய ரூமிற்கு சென்று பார்க்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் அங்கே கண்ணன் இல்லை என்பதால் போனை எடுத்து பேசுகிறார். அப்போது கண்ணன் நான் சாப்பிட வந்தோம் ஆனால் காசு கொண்டு வரவில்லை என சொல்கிறார். பின் ஜீவா நான் வருகிறேன் என சொல்ல, அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவிடம் என்ன வேண்டுமோ சாப்பிடு என சொல்கிறார். பின் ஜீவா அங்கே வர எவ்வளவுபில் என கேட்கிறார். ஆனால் கண்ணன் தெரியவில்லை என சொல்ல ஜீவா பில்லை கட்டிவிட்டு வருகிறார். பின் ஐஸ்வர்யாவிடம் இவனை இங்கையே விட்டுவிட்டு வரலாமா என கேட்க ஐஸ்வர்யா பாவமாக பார்க்கிறார்.

அந்த பெண் முகத்தை பாரு இனிமேல் இப்படி செய்யாதே என ஜீவா சொல்கிறார். மறுபக்கம் முல்லை பாத்ரூம் சென்றிருக்க தனம் அவருக்காக காத்திருந்து பத்திரமாக கூட்டிக் கொண்டு வருகிறார். மீனா அதை பார்த்து நீங்க வேலைசெய்து 2 வாரம் ஆகிவிட்டது. ஆனால் அதை எல்லாம் பொருத்துக் கொள்ளலாம் ஆனால் உங்களை எல்லாரும் இப்படி தாங்குகிறார்களே என பேசுகிறார். பின் தனம் அடுப்படியில் வேலை பார்க்க சொல்ல மீனா என்னால் முடியாது என சொல்லிவிடுகிறார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 5% அகவிலைப்படி (DA) உயர்வு!

பின் முல்லையின் அம்மா அப்பா மற்றும் கஸ்தூரி வீட்டிற்கு வருகின்றனர். அவர்கள் டாக்டர் சொன்னதாக முல்லை சொன்னதை நினைத்து சந்தோசப்படுகின்றனர். முல்லைக்கு எல்லாம் தனம் தான் செய்கிறாள் என்பதால் முல்லைக்கு பெண் குழந்தை பிறந்தால் தனலட்சுமி என பெயர் வைக்க இருப்பதாக சொல்கின்றனர். அப்போ ஆண் குழந்தை பிறந்தால் என கஸ்தூரி கேட்க ஆண் குழந்தைக்கு தனமே பெயர் வைக்கட்டும் என சொல்கிறார்கள். பின் கதிர் முல்லை உள்ளே தான் இருக்கிறாள் என சொல்ல அனைவரும் பார்க்க செல்கின்றனர்.

அப்போது முல்லையை பார்த்த அம்மா அப்பா ரொம்ப சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்கள் அப்போது முல்லையிடம் டாக்டர் என்ன சொன்னார்கள் என கேட்க அப்போது முல்லை இன்னும் 2 வாரத்தில் கர்ப்பம் உறுதியாகிவிடும் என சொன்னதாக சொல்கிறார். ஆனால் எனக்கு இப்பவே வயிற்றில் குழந்தை இருப்பது போல இருப்பதாக முல்லை சொல்ல பெண் குழந்தை பிறந்தால் தனம் பெயரை வைக்க இருப்பதாக அவரது பெற்றோர் சொல்கின்றனர். முல்லை அதை நினைத்து சந்தோசமாக இருந்தாலும் அவர்கள் பேசுவதை நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். பின் தனம் வந்து என்ன நடந்தது என கேட்க அவர்கள் ரொம்ப ஆசையாக இருப்பதை பார்த்து வருத்தமாக இருக்கிறது. முல்லையின் பிடிவாதம் பற்றி உங்களுக்கு தெரியாது என சொல்ல தனம் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here