மூர்த்தியை பற்றி தகவல் தெரிந்து வந்த காமாட்சி, மீண்டும் தொடங்கிய சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தியை பற்றி தகவல் தெரிந்து வந்த காமாட்சி, மீண்டும் தொடங்கிய சண்டை - இன்றைய
மூர்த்தியை பற்றி தகவல் தெரிந்து வந்த காமாட்சி, மீண்டும் தொடங்கிய சண்டை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தியை பற்றி தகவல் தெரிந்து வந்த காமாட்சி, மீண்டும் தொடங்கிய சண்டை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனத்தின் அம்மா காமாட்சிக்கு இரவு கனவு வர தனத்திற்கு எதோ ஆனதாக நினைக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து விவரத்தை கேட்க அவர் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்ததை சொல்கிறார். பின் மீனாவிற்கு ஜீவா போன் செய்து பதட்டமாக இருப்பதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனத்தின் அம்மாவிற்கு இரவு கேட்ட கனவு ஒன்று வருகிறது. பதறி போய் எழுந்த அவரை பார்த்து கஸ்தூரி பதட்டம் அடைகிறார். தனத்திற்கு எதோ ஆகிவிட்டதாக நினைத்து காமாட்சி பதட்டம் அடைய அப்போது ஜெகா வந்து என்ன ஆனது என கேட்கிறார். தனத்திற்கு எதோ ஆகிவிட்டது என சொல்ல அப்போது ஜெகா அதெல்லாம் ஒன்றுமிருக்காது என சொல்கிறார். ஆனால் தனம் அம்மாவிற்கு எதோ தவறாக இருப்பது போல இருக்க உடனே சென்று பார்க்க வேண்டும் என சொல்கிறார். கஸ்தூரி நம்மை அசிங்கப்படுத்தி அனுப்பியபின் எப்படி போவது என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

சரி போன் செய்து பார்ப்போம் என நினைத்து கஸ்தூரி தனத்திற்கு போன் செய்கிறார். வீட்டில் ஐஸ்வர்யாவும் மீனாவும் இருக்க போன் அடிக்கும் சத்தம் கேட்கிறது. அது உன் போனா என மீனா கேட்க அது என்னுடைய போன் இல்லை என ஐஸ்வர்யா சொல்கிறார். தனம் அக்கா போன் தான் அடிக்கிறது என சொல்ல ஜெகா சித்தப்பா தான் போன் செய்வதாக ஐஸ்வர்யா சொல்கிறார். அவர் எதற்கு இந்த நேரத்தில் போன் செய்கிறார் என தெரியாமல் ஐஸ்வர்யா இருக்க ஒருவேளை அவர்களுக்கு விஷயம் தெரிந்து இருக்குமா என கேட்கிறார்.

மீனா நமக்கே யாரும் போன் செய்யவில்லை அவர்களுக்கு யார் போன் செய்திருப்பா அதெல்லாம் இருக்காது என சொல்ல போனை எடுக்கவில்லை. பின் கஸ்தூரி போனை எடுக்கவில்லை என சொல்ல தனத்தின் அம்மா மீண்டும் பதட்டம் அடைகிறார். ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து பார் என சொல்ல ஐஸ்வர்யாவிற்கு போன் செய்கிறார். உண்மையை சொல்லிவிடுவோம் என சொல்லி போனை எடுக்க அப்போது கஸ்தூரி போனை தனத்திடம் கொடு என சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அக்கா இங்கே இல்லை என சொல்லி மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக சொல்கிறார்.

ரோஹித்தை திருமணம் செய்ய விருப்பமில்லை என சொல்லும் வெண்பா, பாரதி சொன்ன அதிர்ச்சி தகவல் – இன்றைய எபிசோட்!

அதை கேட்டு கஸ்தூரி பதட்டம் அடைய கஸ்தூரி பேசுவதை பார்த்து காமாட்சியும் ஜெகாவும் பதட்டம் அடைகின்றனர். அப்போது கஸ்தூரி எந்த மருத்துவமனை என விவரத்தை கேட்க ஆப்ரேசனா என கேட்கிறார். பின் காமாட்சி தனத்தை நினைத்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கண்ணன் போன் செய்து அழுகிறான் என சொல்ல மீனா ஜீவா ஒரு போன் கூட பண்ணமாட்டான் என சொல்கிறார். ஜீவா மாதிரி கண்ணன் இருந்தால் அவ்வளவு தான் என சொல்ல எல்லாம் தெரிந்து தான் கல்யாணம் செய்தேன் என சொல்கிறார்.

அப்போது மீனாவிற்கு போன் வருகிறது ஜீவா போன் செய்து எனக்கு மிகவும் பதட்டமாக இருப்பதாக சொல்கிறார். ஆப்ரேசன் நடந்து கொண்டிருக்கிறது என சொல்கிறார். நான் இப்போது தான் போனை எடுத்தேன் என சொல்கிறார். எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது ஆனால் நான் காட்டினால் அண்ணி பயப்படுவாங்க அதனால் தான் அமைதியாக இருக்கிறேன் என சொல்கிறார். பின் மீனா ஜீவாவிற்கு ஆறுதல் சொல்கிறார். கண்ணன் போன் செய்து அப்படி அழுகிறான் நீ தான் தைரியமாக இருக்க வேண்டும்,என சொல்கிறார்.

நீ தான் உன் அப்பா அம்மாவிடம் சொன்னியா என கேட்க ஆமாம் நான் தான் சொன்னேன் என மீனா சொல்கிறார். எல்லா பிரச்சனைக்கும் உன் அப்பா தான் காரணம் இப்போது 2 லட்சம் பணம் கொடுத்துவிட்டு பின்னால் பெரிய பிரச்சனை வரும் என சொல்கிறார். இந்த நடு ராத்திரியில் யாரிடம் பணம் வாங்குவாய் மாமா உயிர் தான் முக்கியம் என சொல்கிறார். கயல் தூங்குகிறாள் நானும் ஐஸ்வர்யாவும் தான் இருக்கிறோம் என சொல்கிறார். பின் மீனா ஐஸ்வர்யாவிடம் ஜீவா தான் போன் செய்தான் என சந்தோசமாக சொல்கிறார்.

மறுபக்கம் மருத்துவமனைக்கு தனத்தின் அம்மா வருகிறார். தனம் அவரை பார்த்து அழுது கொண்டிருக்க மாப்பிள்ளை எப்படி இருக்கிறார் என தனத்தின் அம்மா கேட்கிறார். ஆப்ரேசன் நடக்கிறது அவருக்கு இதயத்தில் எதோ பிரச்சனை அதனால் தான் ஆப்ரேசன் நடப்பதாக சொல்கிறார். எனக்கு எதோ தவறாக நடப்பதாக தோன்றியது ஆனால் மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்சனையா என கேட்கிறார். பின் மீனாவின் அம்மா அப்பாவை பார்த்து இவங்க பேசிய வார்த்தையால் தான் மாப்பிள்ளை இப்படி படுத்த படுக்கையாக இருப்பதாக சொல்ல மீனாவின் அப்பா ஜீவாவிடம் என்ன இப்படி பேசுகிறார் என கேட்கிறார். பின் தனம் அம்மா சண்டை போட நீங்க பேசியதால் தான் எல்லாம் வந்தது என சொல்ல மீண்டும் சண்டை தொடங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here