மீண்டும் சண்டையை பெரிதாக்கும் மீனா, கதிர் முடிவு தவறு என சொல்லும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீண்டும் சண்டையை பெரிசாக்கும் மீனா, கதிர் முடிவு தவறு என சொல்லும் முல்லை - இன்றைய
மீண்டும் சண்டையை பெரிசாக்கும் மீனா, கதிர் முடிவு தவறு என சொல்லும் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீண்டும் சண்டையை பெரிதாக்கும் மீனா, கதிர் முடிவு தவறு என சொல்லும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனமும் மூர்த்தியும் கதிர் வெளியே போனதை நினைத்து வருத்தத்துடன் இருக்கின்றனர். ஆனால் மீண்டும் மீனாவும் தனத்தின் அம்மாவும் சண்டையை வளர்த்து கொண்டே இருக்கின்றனர். பின் முல்லை நீங்க எடுத்த முடிவு தவறு என சொல்ல என் மீது நம்பிக்கை இருந்தால் வா என கதிர் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தி கதிர் வீட்டை விட்டு வெளியே சென்றதை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் முல்லையின் அம்மா என் மகளின் இந்த நிலைமைக்கு காரணமாக இருப்பதால் நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க என சொல்கிறார். இந்த குடும்பம் நாசமாக தான் போகும் என சொல்ல ஜீவா வேண்டாம் அத்தை என கெஞ்சுகிறார். பின் தனத்தின் அம்மா சத்தம் போட முல்லை அப்பா கிளம்பு என சொல்கிறார். ஆனால் பார்வதி கேட்காமல் நின்று சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

லட்சுமி அம்மாவின் புகைப்படத்தை பார்த்து நீங்க இருந்தால் இது போல எந்த பிரச்சனையும் வந்திருக்காது என வருத்தப்பட்டு பேசுகிறார். மீண்டும் வந்த அவர் நீங்க எல்லாரும் நாசமாக தான் போவீங்க என சொல்கிறார். தனம் இந்த குடும்பத்திற்காக செய்தது எல்லாத்தையும் சகித்து கொண்டு இருந்தார்கள் ஆனால் அவளுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை என சொல்ல மீனாவின் அம்மா அப்போ என் மகள் எல்லாம் என்ன சொல்வது என கேட்கிறார்.

நீங்க எல்லாரும் வந்தால் தனம் அண்ணி சந்தோசமாக இருப்பார் என நினைத்தது தவறு என சொல்ல உடனே மீனா என் அப்பாவிற்கு எவ்வளவு வேலை இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு நான் சொன்னதற்காக வந்தார் என சொல்ல ஜீவா வராமலே இருந்து இருக்கலாம் என சொல்கிறார். என்ன ஜீவா பேசுகிறாய் என மீனா சொல்ல தனம் அக்கா அம்மா தான் அறிவில்லாமல் பேசுவதாக சொல்கிறார். உடனே கோவப்பட்ட ஜீவா மீனாவை அடிக்க கை ஓங்குகிறார்.

அப்பா யாரை விவாகரத்து செய்ய போகிறார் என குடும்பத்திடம் கேட்ட ஹேமா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

உடனே மீனாவின் அப்பாவிற்கு கோவம் வர என் மகளை தங்க தட்டில் வைத்து வளர்த்தேன் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தேன் ஆனால் உங்களை காதலித்ததால் அவள் இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என மீனாவின் அப்பா வருத்தப்பட்டு பேசுகிறார். இனி ஒருதடவை என் மகளை அடிக்க கை ஓங்கினால் உங்களது குடும்பத்தை அழித்து விடுவேன் உங்க தொழில் இல்லாமல் செய்துவிடுவேன் என சொல்கிறார். அதை கேட்டு ஜீவா எதுவும் பேசாமல் இருக்க மீனாவின் அப்பா அம்மா கிளம்பி செல்கின்றனர்.

மறுபக்கம் கண்ணன் கதிரை தேடி செல்கிறார். அப்போது கதிர் முல்லை கையை பிடித்துக் கொண்டு செல்ல முல்லை நிறுத்துங்கள் நீங்க செய்வது தவறு என சொல்கிறார். அது நம்ம வீடு நம்ம வீட்டை விட்டு வர கூடாது என சொல்ல, இந்த பிரச்சனை நம்மளால் தான் தொடங்கியது என கதிர் சொல்கிறார். ஆனால் நாம வெளியே வந்தால் அக்கா மாமா எவ்வளவு கஷ்டப்படுவார் என கேட்க ஆனால் நாம இருந்தால் அதைவிட கஷ்டப்படுவார் என சொல்கிறார்.

நான் எடுத்தது தான் சரியான முடிவு என கதிர் சொல்ல முல்லை வேண்டாம் நாம வீட்டிற்கு சென்றுவிடுவோம் என சொல்கிறார். ஆனால் கதிர் வராமல் இருக்க நான் உன்னை பார்த்துக் கொள்வேன் என உனக்கு நம்பிக்கை இல்லையா என கேட்கிறார். அதெல்லாம் இருக்கிறது என முல்லை அவருடன் கிளம்புகிறார். அப்போது முல்லையின் அம்மா அப்பா நடந்து வர அவங்க பேசியது எல்லாம் சரியா என கேட்கிறார். முல்லை அப்பா நீ பேசியது தவறு என சொல்ல மாப்பிள்ளை எடுத்த முடிவு சரியான முடிவு தான் என சொல்கிறார். இந்த நேரத்தில் அவர்கள் எங்கே இருப்பார்கள் என கேட்க அப்போது கதிர் முல்லையும் வருகின்றனர். அவர்களை பார்த்து பேச செல்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here