அனைவரும் தடுத்தும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, சாபம் விட்ட முல்லை அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
அனைவரும் தடுத்தும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, சாபம் விட்ட முல்லை அம்மா - இன்றைய
அனைவரும் தடுத்தும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, சாபம் விட்ட முல்லை அம்மா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
அனைவரும் தடுத்தும் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் முல்லை, சாபம் விட்ட முல்லை அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வீட்டை விட்டு வெளியே போக போறேன் என முடிவு செய்கிறார். மூர்த்தி தனம் ஜீவா கண்ணன் என அனைவரும் தடுத்தும் கூட கதிர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளாமல் வெளியே சென்றுவிடுகிறார். அப்போது முல்லையின் அம்மா தனத்திற்கும் மூர்த்திக்கும் சாபம் விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் நானும் முல்லையும் இப்போது இருக்கும் கடனை அடைக்கும் வரை வெளியே சென்று விடுகிறோம் என சொல்ல, உடனே மூர்த்தி கதிரை அடித்துவிடுகிறார். என்ன டா பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்க, முல்லை அம்மா பேச வருகிறார். ஆனால் முல்லை நீ எதுவும் பேசாதே என சொல்லி விடுகிறார். இந்த வீட்டை விட்டு போக போறியா இல்லை எங்களை எல்லாரையும் பிரிய போறியா என மூர்த்தி கேட்க தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் கதிர் நான் போக போகிறேன் என பிடிவாதமாக இருக்கிறார். அப்போது மூர்த்தி இந்த வீட்டை விட்டு சென்றால் இனிமேல் இந்த வீட்டிற்கு வர கூடாது நாங்க யாரும் உன்னுடன் பேச மாட்டோம் என சொல்கிறார். கதிர் அதை கேட்டு சரி அண்ணா என சொல்கிறார். பின் கதிர் கிளம்ப ஜீவா தடுக்கிறார். மீனா என் அம்மா அப்பா பேசியத்திற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என சொல்ல கதிர் இங்கே யாரும் எந்த தவறும் பேசவில்லை, என்னால் தான் இவ்வளவு கஷ்டம் நான் அண்ணன் கடையில் வேலை செய்யாமல் நான் அந்த பணத்தை கொடுப்பேன் என கதிர் சொல்கிறார்.

ஜீவாவை கட்டி அணைத்து கொள்ள கண்ணனும் கதிரை கட்டி அணைத்து போக வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கதிர் முடியாது என முல்லையை அழைக்க வேண்டாம் என முல்லை சொல்கிறார். என் மீதுஉனக்கு நம்பிக்கை இருக்கிறதா என கதிர் கேட்க முல்லை கிளம்புகிறார். பின் முல்லை வர கதிர் வாசல் வரை செல்கிறார். அப்போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் குழந்தைகளை அழைத்து கொண்டு வந்து காட்டி இவர்களுக்காக போகாதீங்க என சொல்கிறார்.

லட்சுமியிடம் சத்தம் போடும் கண்ணம்மா, ஹேமா கேள்விக்கு குடும்பம் தான் காரணம் என சொல்லும் பாரதி – இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் கயலையும் பாண்டியனையும் கொஞ்சிவிட்டு வேகமாக முல்லை கையை பிடித்து வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அனைவரும் ரோடு வரை சென்று தடுக்க ஆனால் கதிர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுவிடுகிறார். மூர்த்தியும் தனமும் கதிர் போனதை நினைத்து வருத்தப்பட அப்போது முல்லை அம்மா எல்லாரும் திட்டமிட்டு என் மகளை இந்த வீட்டை விட்டு துரத்திவிட்டீர்கள் என சொல்கிறார். மீனாவின் அம்மா அவர்கள் ஏற்கனவே போக வேண்டும் என முடிவு செய்துவிட்டு கிளம்பியதாக சொல்கிறார்.

தனம் அதை கேட்டு நீங்க பேசாமல் இருங்க என சொல்ல, அப்போது முல்லை அம்மா நீ நடித்தது எல்லாம் போதும் என சொல்கிறார். தனம் அம்மா மீண்டும் நீ ஏன் தனத்தை பேசுகிறாய் என கேட்க அப்போது எல்லாரும் அமைதியாக இருங்கள் என சொல்கிறார். மீனாவின் அம்மா என்னமோ நாங்க தான் அவர்கள் போனதற்கு காரணம் போல பேசுகிறாய் என கேட்க அப்போது ஜீவா நீங்க தான் காரணம் என சொல்கிறார்.

முல்லை அம்மா என் மகள் அழுததை போல 100 மடங்கு இந்த குடும்பம் அழும் இந்த வீடு இல்லாமல் சென்றுவிடும் என சொல்ல மூர்த்தி தனத்தை பேசாதீங்க என சொல்கிறார். அப்போது கூட மீனாவிற்கு ஆதரவாக மாப்பிள்ளை பேசவில்லை என மீனாவின் அம்மா குறை சொல்கிறார். மூர்த்தி கதிர் சென்றுவிட்ட கவலையில் எதுவும் பேசாமல் இருக்க பார்வதி முல்லை போன கவலையில் பல சாபங்களை விடுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here