கதிரை சொந்த தொழில் செய்ய சொல்லும் முல்லை, கடைக்கு வருவதாக சொல்லும் மீனா – இன்றைய எபிசோட்!

0
கதிரை சொந்த தொழில் செய்ய சொல்லும் முல்லை, கடைக்கு வருவதாக சொல்லும் மீனா - இன்றைய எபிசோட்!
கதிரை சொந்த தொழில் செய்ய சொல்லும் முல்லை, கடைக்கு வருவதாக சொல்லும் மீனா - இன்றைய எபிசோட்!
கதிரை சொந்த தொழில் செய்ய சொல்லும் முல்லை, கடைக்கு வருவதாக சொல்லும் மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கயலை முல்லை வீட்டிற்கு அழைத்து சென்றேன் என சொல்ல மீனா கோபப்படுகிறார். பின் முல்லை சொந்தமாக தொழில் தொடங்க கதிருக்கு ஐடியா கொடுக்கிறார். பின் மீனா நாளை முதல் நானும் கடைக்கு வருகிறேன் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கயல் சாப்பிட நேரமாகிவிட்டது என சொல்ல, அப்போது கண்ணன் முல்லை அண்ணி கொடுத்தார்கள் ஆனால் இவள் சாப்பிடவில்லை என சொல்கிறார். பின் மீனா என்ன சொன்னாய் என கேட்க முல்லை வீட்டிற்கு போனதாக கண்ணன் சொல்கிறார். உடனே மீனா இனிமேல் அங்கே கூட்டிக் கொண்டு போகாதே என சொல்கிறார். அவங்க பார்க்க வேண்டும் என சொன்னதாக கண்ணன் சொல்ல அவங்க தான் வீட்டை விட்டு சென்று விட்டார்கள் தேவை என்றால் வந்து பார்க்க சொல் என மீனா சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா நீ ஏன் எல்லாருக்கும் நல்லது நினைத்து தேவை இல்லாத வேலை பார்க்கிறாய் என கேட்க பின் மீனா ஐஸ்வர்யாவை தேவை இல்லாமல் பேசாதே என சொல்கிறார். மறுபக்கம் கதிர் வேலை இல்லாமல் கவலையில் இருக்க அப்போது முல்லை வந்து என்ன யோசிக்கிறீர்கள் என கேட்கிறார். அப்போது கதிரின் நண்பர் போன் செய்து ஒரு கேஸ் குடவுனில் வேலை இருப்பதாக சொல்ல ஆனால் சம்பளம் சரியாக வராது என சொல்கிறார். ஆனால் கதிர் பரவாயில்லை என சொல்கிறார். மறுபக்கம் முல்லை இத்தனை நாள் சொந்த தொழில் செய்துவிட்டு இப்போது இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டுமா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கதிர் என்ன செய்வது என கேட்க நாமளே சொந்தமாக தொழில் செய்ய கூடாதா என கேட்கிறார் என்ன தொழில் என கதிர் கேட்க இப்போது தான் ஹோட்டலில் வேலை செய்து உங்களுக்கு அனுபவம் இருக்கிறதே அதனால் நாமளே ஒரு மெஸ் வைக்கலாம் என சொல்கிறார். கதிர் அதற்கு முதலீடு வேண்டும் என சொல்ல நம்மிடம் நகை வைத்த பணம் இருக்கிறதே என முல்லை சொல்கிறார். அதை கேட்டு கதிர் சரி என சொல்கிறார். மறுபக்கம் தனம் குடும்பத்துடன் சாப்பிட்டு கொண்டிருக்கிறார். ‘

அப்போது மீனா முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல தனம் என்னிடம் தனியாக சொல் என சொல்கிறார். ஆனால் மீனா நான் இப்போது தான் சொல்வேன் என சொல்ல, இந்த வீட்டில் என்னால் இருக்கவே முடியவில்லை ஒரே சண்டையாக இருக்கிறது என சொல்கிறார். அதனால் நான் எங்கையாவது செல்ல போகிறேன் என சொல்ல, ஜீவா சும்மா இரு என சொல்கிறார். உடனே கண்ணன் சிரிக்க ஐஸ்வர்யாவிடம் நான் தனியாக வரமாட்டேன் என சொல்கிறார். பின் ஜீவா நானும் வரமாட்டேன் என சொல்ல, நான் அப்படி சொல்லவில்லை

இந்த வீட்டில் இனிமேல் இருக்கமாட்டேன் நாளை முதல் நானும் கடைக்கு வருகிறேன் என சொல்ல தனம் கடைக்கு வருவது கஷ்டம் என சொல்கிறார். ஆனால் மீனா அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் இந்த வீட்டில் ஒரே சண்டையாக இருப்பதாக சொல்கிறார். பின் ஐஸ்வர்யாவிடம் இனிமேல் நான் இருக்கமாட்டேன் நீ மட்டும் சந்தோசமாக இரு என சொல்கிறார். மூர்த்தி தனத்திடம் எதற்கு மீனாவை வர சொல்கிறாய் என கேட்க கடைக்கு வருவதை விட வீட்டில் இருப்பது நல்லது என அவளுக்கு தோன்றிவிடும் என தனம் சொல்கிறார்.

கோபியை மன்னிப்பு கேட்க சொல்லும் ஈஸ்வரி, பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி – இன்றைய எபிசோட்!

பின் மீனா கடைக்கு நாளைக்கு போக புடவை எல்லாம் எடுத்து வைக்கிறார். ஜீவா அவரை எதற்கு என கேட்க, கல்யாண வீட்டிற்கா போகிறாய் என ஜீவா கேட்கிறார். நான் இருக்கும் டேபிள் கீழே பேன் காற்று வருமா என கேட்கிறார். ஜீவா மீனாவை நினைத்து வருத்தப்படுகிறார். கடையில் வேலை செய்வது கஷ்டம் உன்னால் முடியாது என ஜீவா சொல்ல ஆனால் மீனா ஜீவாவை முறைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!