முல்லையிடம் வேலை போனதை சொல்லும் கதிர், கயலை காணாமல் தேடும் மீனா – இன்றைய எபிசோட்!

0
முல்லையிடம் வேலை போனதை சொல்லும் கதிர், கயலை காணாமல் தேடும் மீனா - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் வேலை போனதை சொல்லும் கதிர், கயலை காணாமல் தேடும் மீனா - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் வேலை போனதை சொல்லும் கதிர், கயலை காணாமல் தேடும் மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கயலை அழைத்து கொண்டு கதிர் வீட்டிற்கு செல்ல வீட்டில் கயலை காணாமல் மீனா பதட்டம் அடைகிறார். மறுபக்கம் கதிர் வேலை போன விஷயம் பற்றி முல்லையிடம் சொல்ல அவர் ஆறுதல் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனிடம் கதிர் அண்ணன் எப்படி இருக்கிறார் என கேட்க நீங்க போனதில் இருந்து வீட்டில் அண்ணி வேலைக்கு செல்கிறார். ஐஸ்வர்யாவும் மீனா அண்ணியும் தினமும் சண்டை போடுகின்றனர். வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என சொல்ல கதிர் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட சொல்கிறார். பின் கண்ணன் சாப்பாடு நன்றாக இருப்பதாக சொல்ல வீட்டில் இத்தனை நாள் சமைக்க தெரியாது என ஏமாற்றி இருக்கிறாய் என கேட்கிறார். தெரியும் என சொல்லி இருந்தால் அண்ணிக்கு பதிலாக உன்னை சமைக்க சொல்லலாம் என சொல்கிறார்.

கதிர் அதனால் தான் நான் சொல்லவில்லை என சொல்கிறார். பின் கண்ணன் நேரமாகிவிட்டது மீனா அண்ணி போன் செய்வதற்குள் போக வேண்டும் என கிளம்புகிறார். மறுபக்கம் மீனா கயலை காணாமல் வீடு முழுவதும் தேடுகிறார். கயலை காணவில்லை என சொல்ல, ஐஸ்வர்யா கண்ணன் தான் வைத்திருந்தான் வெளியே சென்று பார்க்க சொல்கிறார். மீனா எல்லா பக்கமும் தேடி பார்த்து காணாமல் தேடுகிறார். பின் மூர்த்தியிடம் கேட்க கண்ணன் தான் கயலை வைத்திருந்தான் என சொல்கிறார். பின் மீனா கண்ணனிற்கு போன் செய்து பார்க்கிறார்

TN Job “FB  Group” Join Now

கண்ணன் வந்து கொண்டிருக்க மீனாவின் நம்பரை பார்த்து போனை எடுக்கவில்லை. பின் மீனா தனத்திற்கு போன் செய்கிறார். கண்ணன் கடைக்கு வந்தான என கேட்க இல்லை என தனம் சொல்கிறார். மீனா பதட்டமாக இருப்பதை பார்த்து நான் கண்ணனிற்கு போன் செய்கிறேன் நீ பொறுமையாக இரு என சொல்கிறார். பின் கண்ணனிற்கு போன் செய்ய கண்ணன் கடைக்கு சென்றதாக சொல்கிறார். தனம் மீனாவிடம் கண்ணன் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார். ஆனாலும் மீனா நம்பாமல் பதட்டமாக இருக்கிறார். கண்ணனிடம் கயல் இருக்கிறாளா என தெரியவில்லை என பதட்டப்பட மூர்த்தி சற்று அமைதியாகா இருக்க சொல்கிறார்.

மறுபக்கம் கதிர் வேலைக்கு கிளம்பவில்லையா என முல்லை கேட்க வேலைக்கு இன்னைக்கு போகவில்லை என கதிர் சொல்கிறார். இப்படி வாரத்திற்கு ஒரு நாள் லீவு கேட்டால் நன்றாக இருக்கும் என முல்லை சொல்ல, இதற்கு மேல் பொய் சொல்ல முடியாது என கதிர் உண்மையை சொல்கிறார். அந்த வேலை போய்விட்டது என சொல்ல என்ன ஆச்சு என முல்லை கேட்கிறார். எல்லாம் உன் அம்மா தான் அங்கே வந்து ஓனரிடம் சண்டை போட்டதாக சொல்ல, முல்லை அம்மாவை நினைத்து வருத்தப்படுகிறார். மல்லி தான் உதவி செய்வதாக சொல்லி இருப்பாள் என சொல்ல, இப்போது வேலையும் இல்லை என முல்லை வருத்தப்படுகிறார். கதிர் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார்.

இனியாவிற்காக மீண்டும் பாக்கியாவை கூப்பிடும் தாத்தா, கோபியை காரணம் சொல்லும் எழில் – இன்றைய எபிசோட்!

அவள் சாப்பிட நேரமாகிவிட்டது என மீனா சொல்கிறார். பின் கண்ணன் வந்துவிட மீனா எங்கே போனாய் என கேட்கிறார். கண்ணன் கடைக்கு போனதாக சொல்ல, அப்போது மீனா அக்கா அங்கே நீ வரவில்லை என சொன்னதாக சொல்கிறார். பின் கண்ணன் வேற கடைக்கு போனதாக சொல்கிறார். பின் அவளுக்கு பசி வந்துவிட்டது என சொல்ல, ஐஸ்வர்யா எங்கே போனாய் என கேட்கிறார். பின் கண்ணன் சொல்கிறேன் என சொல்ல, கயலுக்கு முல்லை அண்ணி சாப்பாடு கொடுக்க ஆனால் சாப்பிடவில்லை என உளறிவிடுகிறார். மீனா அதை கேட்டு கோபப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here