ஹோட்டலில் வைத்து கதிரை பார்த்த ஜீவா, கதிர் நிலைமையை தெரிந்து வருத்தப்படும் தனம் – இன்றைய எபிசோட்!

0
ஹோட்டலில் வைத்து கதிரை பார்த்த ஜீவா, கதிர் நிலைமையை தெரிந்து வருத்தப்படும் தனம் - இன்றைய எபிசோட்!
ஹோட்டலில் வைத்து கதிரை பார்த்த ஜீவா, கதிர் நிலைமையை தெரிந்து வருத்தப்படும் தனம் - இன்றைய எபிசோட்!
ஹோட்டலில் வைத்து கதிரை பார்த்த ஜீவா, கதிர் நிலைமையை தெரிந்து வருத்தப்படும் தனம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி ” பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் வேலை செய்யும் ஹோட்டலிற்கு டெலிவெரிக்காக ஜீவா வந்திருக்க அப்போது கதிரை அங்கே பார்த்துவிடுகிறார். பின் தனத்திடம் இது பற்றி சொல்ல அவன் என்ன செய்கிறான் என அவனுக்கு தெரியும் என தனம் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் வேலை செய்யும் ஹோட்டலிற்கு ஜீவா மளிகை பொருள்களை கொடுக்க வருகிறார். அப்போது ஜீவாவை பார்த்துவிட்டு கதிர் ஒளிந்து கொள்கிறார். ஆனால் சப்பளை செய்ய ஆள் இல்லை என்பதால் முதலாளி கதிரை கூப்பிடுகிறார். அப்போது கதிர் வர ஜீவா அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கதிர் சாப்பாடு பரிமாறும் நிலைமையை பார்த்து ஜீவா மிகவும் வருத்தப்படுகிறார். கதிர் அருகே சென்று என்னடா இது என கேட்கிறார். இங்கே என்ன பண்ணிக் கொண்டு இருக்கிறாய் என ஜீவா கேட்க நீ போ நான் வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என கதிர் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஜீவா கதிருக்காக வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். கதிர் எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவதற்கு பார்த்து மனம் வருத்தப்படுகிறார். கண்ணீருடன் அவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் வெளியே சென்று ஜீவாவிடம் பேசுகிறார். என்னடா இப்படி இருக்கிறாய் என கேட்டு உடம்பை துடைத்துவிடுகிறார். டீ சாப்பிடு என சொல்லி ஜீவாவிற்கு டீ கொண்டு வருகிறார். என்னடா இப்படி டேபிள் துடைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாய் உனக்கு கஷ்டப்பட வேண்டும் என தலையெழுந்தா என கேட்க தயவு செய்து வீட்டிற்கு வா என சொல்கிறார்.

இல்லை அண்ணா என சொல்ல சொந்த வீட்டிற்கு வருவதற்கு என்ன வீராப்பு என கேட்கிறார். நம்ம கடையில் இன்னும் 10 பேருக்கு வேலை கொடுக்கலாம் நீ ஏன் கஷ்டப்பட வேண்டும் என கேட்க நான் சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என சொல்கிறார். பின் கதிர் நான் நன்றாக சமைக்க பழகிவிட்டேன் என சொல்ல ஜீவா எதுவும் பேசாமல் இருக்கிறார். அப்போது முதலாளி வர நீ ஏன் இங்கே இருக்கிறாய் என கேட்கிறார். இவர் எனக்கு தெரிந்தவர் என சொல்ல, முதலாளி உள்ளே சென்று பார்க்க சொல்கிறார்.

பின் ஜீவா வருத்தத்துடன் கிளம்பி செல்கிறார். மறுபக்கம் தனம் கடையில் வேலையை பார்த்துக் கொண்டிருக்க ஜீவா தனத்திடம் சொல்லலாமா என நினைக்கிறார். பின் தனத்திடம் சென்று சாப்பிடவில்லையா என கேட்க ஜீவா நீங்க சாப்பிடுங்க என சொல்கிறார். பின் அண்ணாச்சி மீனாவும் ஐஸ்வர்யாவும் சரியாக சமைக்க வில்லை என சொல்கிறார். பின் ஜீவா கதிர் ஹோட்டலில் வேலை செய்கிறான் என சொல்கிறார். தனம் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

அண்ணாச்சி எதுக்கு இப்படி கஷ்டப்பட வேண்டும் தனம் அவனை ஒரு வார்த்தை சொன்ன அவன் வந்துருவான் என சொல்ல, அவன் ஒரு முடிவோட தான் இருக்கான் என சொல்கிறார். அண்ணாச்சி நான் சென்று கூட்டிக் கொண்டு வரவா என கேட்க, தனம் அதெல்லாம் வேண்டாம் அவன் சின்ன குழந்தை இல்லை எல்லாம் யோசித்து தான் முடிவு செய்திருப்பான் என சொல்ல தனம் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் தனம் கதிரை நினைத்து வருத்தப்படுகிறார்.

ஊரை விட்டு செல்வதை நினைத்து வருத்தப்படும் மயூரா, செழியனிடம் மன்னிப்பு கேட்கும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் முல்லை வீட்டில் தூங்கி கொண்டிருக்க கதிர் வீட்டிற்கு வருகிறார். ஆனால் அவர் வருவது கூட தெரியாமல் முல்லை தூங்குகிறார். அதனால் கதிர் முல்லையை எழுப்பாமல் ட்ரெஸ் மாத்த போகிறார் முல்லை எழுந்து என்ன கதவு திறந்து இருக்கிறது என நினைக்கிறார். கதிர் போனை பார்த்து அவர் வந்துட்டார் போல என நினைக்கிறார். பின் முல்லை எப்போ வந்தீங்க என்னை எழுப்பி இருக்கலாமே என சொல்ல இனி கதவை திறந்து வைக்காதே என சொல்கிறார். பின் கதிர் நான் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி வந்துள்ளதாக சொல்லி சாப்பிட கூப்பிடுகிறார். பின் பணத்தை கொடுக்கிறார். நிறைய பணம் இருப்பதாக சொல்ல, கதிர் வேலை அதிகம் என சொல்கிறார். பின் தனம் முல்லைக்கு சாப்பாடு கொடுக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!