முல்லையிடம் செய்யும் வேலையை மறைக்கும் கதிர், கண்ணன் வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

0
முல்லையிடம் செய்யும் வேலையை மறைக்கும் கதிர், கண்ணன் வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் செய்யும் வேலையை மறைக்கும் கதிர், கண்ணன் வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் செய்யும் வேலையை மறைக்கும் கதிர், கண்ணன் வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லாமல் இருக்கும் ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி கண்ணனிடம் பேங்க் வேலை பற்றி சொல்லி பார்க்க சொல்கிறார். பின் ஐஸ்வர்யா வேலைக்கு செல்லும் விஷயத்தை பற்றி வீட்டில் மறைகிறார். மறுபக்கம் கதிர் முல்லையிடம் செய்யும் வேலை பற்றி பொய் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், வீட்டில் கண்ணன் தூங்கி கொண்டிருக்க அப்போது கஸ்தூரி வருகிறார். கண்ணன் என்ன காலையிலேயே தூங்குகிறாய் என கேட்க மூர்த்தி எங்கே என கேட்கிறார். அண்ணன் உள்ளே இருப்பதாக சொல்ல கஸ்தூரி சென்று பார்க்கிறார். பின் எப்படி இருக்கீங்க என கேட்க நன்றாக இருக்கேன் ஆனால் டாக்டர் தான் ரெஸ்ட் எடுக்க சொல்லி வீட்டில் இருக்க வைத்துவிட்டதாக சொல்கிறார். அப்போது கஸ்தூரி டாக்டர் அப்படி தான் சொல்வார்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறவர்கள் இறந்துவிடுவார்கள்.இறக்க போவதாக சொன்னவர்கள் உயிரோடு இருப்பார்கள் என சொல்கிறார்.

பின் என்ன விஷயமாக இங்கே வந்தாய் என கேட்க இந்த பக்கம் ஒரு வேலை இருந்தது என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மீனா ஹாலில் இருக்க எப்போ வந்தீங்க என கேட்கிறார். பின் தனம் கடைக்கு சென்று இருக்கிறாரா என கேட்க ஆமாம் என சொல்கிறார். எங்கே பாண்டியன் என கேட்க அக்கா கடைக்கு கூட்டிக் கொண்டு சென்று இருக்கிறார் என சொல்கிறார். பின் இருவரும் வீட்டில் சும்மா தான இருக்கீங்க அவ கடை வேலையை பார்த்துக் கொண்டு குழந்தையை பார்க்க வேண்டுமா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

சும்மாவே ஒரு வேலையும் பார்க்க மாட்டாய் என மீனாவை சொல்ல மீனா கோபப்படுகிறார். சரி சமையல் யார் செய்வது என கேட்க நாங்க தான் என மீனா சொல்கிறார். ஐஸ்வர்யா உடனே அவங்க ஒரு வேலையும் செய்வதில்லை என சொல்கிறார் . பின் கண்ணனிடம் வேலைக்கு போகலாம்ல என சொல்லி பேங்க் வேலை பற்றி சொல்கிறார். அது தற்காலிகமான வேலை என்பதால் கண்ணன் வேண்டாம் என சொல்ல , ஆனால் கஸ்தூரி அதை நிரந்தரமாக்கி விடுவார்கள் என சொல்கிறார்.

உடனே கஸ்தூரி சென்று பார்க்க சொல்ல, ஐஸ்வர்யா சென்று பார்க்க சொல்கிறார். கண்ணன் அண்ணனிடம் சொல்லலாம் என சொல்ல ஆனால் ஐஸ்வர்யா வேண்டாம் என சொல்கிறார். வேலை கிடைத்ததும் சொல்லிக்கலாம் என சொல்ல சரி என கண்ணன் கிளம்புகிறார். மறுபக்கம் தனம் பாண்டியனை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வேலை பார்க்கிறார். அப்போது ஜீவா பாண்டியனை கொடுங்கள் என சொல்ல பரவாயில்லை என தனம் சொல்கிறார். ஜீவா வீட்டிற்கு போக சொல்ல நீ எப்படி தனியாக கவனிப்பாய் என சொல்லி தனம் சொல்கிறார்.

பின் தனம் கடை வேலைகளை கவனிக்க அப்போது பாண்டியனுக்கு பால் கொடுக்க தனம் செல்கிறார். பின் இரவு கதிர் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். கதிர் சாப்பிட்டியா என கேட்க சாப்பிட்டேன் என சொல்கிறார். கதிர் நானும் சாப்பிட்டேன் என சொல்ல, அந்த கடையில் மதியம் வெளியே போக முடியவில்லை என சொல்கிறார். சூப்பர் மார்க்கெட்டில் சாப்பாடு இருந்ததா என கேட்க அங்கே கொடுத்தார்கள் என சொல்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியா, ஊரை விட்டு போக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!

உங்க மேலே என்ன வெங்காய வாசனை வருகிறது என முல்லை கதிரை பார்த்து கேட்க, வெங்காய மூட்டை வந்தது அங்கே நின்று கணக்கு பார்த்தேன் என சொல்கிறார். அப்போது முல்லை அத்தனை வெங்காய மூட்டை வந்ததா காரைக்குடியில் அவ்வளவு பெரிய வெங்காய வியாபாரியா என கேட்கிறார். பின் கதிர் சாப்பாடு வைக்க சொல்ல முல்லை கையில் வைத்திருக்கும் பையை வாங்குகிறார். அதில் வேலை செய்யும் போது போட்ட ட்ரெஸ் இருக்க இவ்வளவு அழுக்காக இருக்கிறது அப்படி என்ன வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார்.

முல்லை உண்மையாகவே சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்கிறீர்களா என கேட்க ஆமாம் என கதிர் சொல்கிறார். உண்மையை சொல்லுங்கள் என கேட்க, கதிர் அதெல்லாம் இல்லை சூப்பர் மார்க்கெட்டில் தான் வேலை செய்கிறேன் என சொல்கிறார். கல்யாண வீடுகளில் சமையல் செய்தால் வாசனை வருமே அது போல வருகிறது என சொல்ல நான் என்ன சமையல்காரனா என கேட்கிறார். உண்மையாகவே நான் சூப்பர் மார்கெட்டில் தான் வேலை செய்கிறேன் என சொல்கிறார்.

பின் பாண்டியனுக்கு தூக்கம் வர அவன் அழுது கொண்டே இருக்கிறான். அப்போது ஜீவா தனத்தை வீட்டிற்கு போக சொல்ல தனம் நான் அவனை பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். பின் தனம் வீட்டிற்கு வர ஐஸ்வர்யா பாண்டியன் அழுதானா என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என சொல்ல தனம் அவன் அமைதியாக இருந்தான் என சொல்கிறார். பின் கண்ணன் எங்கே என கேட்க ஒரு வேலையா அவனுடைய நண்பனை பார்த்துக் கொண்டு வர சென்று இருப்பதாக சொல்கிறார். பின் கண்ணன் வர ஏன் இவ்வளவு நேரமாகிவிட்டது என ஐஸ்வர்யா கேட்கிறார்.

எல்லாம் பார்த்துவிட்டேன் சரியான கூட்டம் என சொல்ல விவரங்கள் கேட்டார்கள் சொல்லிருக்கேன் என சொல்கிறார். பின் இன்டெர்வியூ வைத்தார்களா என கேட்க இல்லை என கண்ணன் சொல்கிறார். வேலை கிடைத்துவிடுமா என கேட்க நாளைக்கு சொல்கிறேன் என சொல்லி இருக்காங்க என சொல்கிறார். பின் தனம் எங்கே போனாய் என கேட்க, ஐஸ்வர்யா சொல்ல வேண்டாம் என சொல்கிறார். ஐஸ்வர்யா முக்கியமான வேலையாக தான் போனான் என சொல்ல வீட்டில் எல்லாரும் தனியாக இருக்கிறார்கள் என சொல்கிறார். பின் அண்ணியிடம் ஏன் சொல்லவேண்டாம் என நினைத்தாய் என கேட்க வேலை கிடைத்ததும் சொல்வோம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here