கடை வேலைகளை பொறுப்பாக செய்து பாராட்டுகளை பெறும் தனம், முதல் நாள் வேலையில் திட்டு வாங்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

0
கடை வேலைகளை பொறுப்பாக செய்து பாராட்டுகளை பெறும் தனம், முதல் நாள் வேலையில் திட்டு வாங்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
கடை வேலைகளை பொறுப்பாக செய்து பாராட்டுகளை பெறும் தனம், முதல் நாள் வேலையில் திட்டு வாங்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
கடை வேலைகளை பொறுப்பாக செய்து பாராட்டுகளை பெறும் தனம், முதல் நாள் வேலையில் திட்டு வாங்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தனம் கடை வேலைகளை பொறுப்புடன் கவனித்து எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கி விடுகிறார். மறுபக்கம் கதிர் முதல் நாள் வேலையில் திட்டுவாங்குகிறார். அதனால் மீனா அப்பா சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி வீட்டில் இருக்க ஐஸ்வர்யா அருகே கடைக்கு சென்றுவிட்டு வருகிறார். அப்போது மூர்த்தி எங்கே போனாய் என கேட்க முட்டை வாங்க சென்றேன் என சொல்கிறார். நம்ம கடையில் இருந்து கொண்டு வர சொல்லிருக்கலாமே என மூர்த்தி கேட்க ஐஸ்வர்யா இதற்காக ஜீவா மாமாவை அலைய வைக்க வேண்டாம் என நினைத்தேன் என சொல்கிறார். பின் மூர்த்தியிடம் ஐஸ்வர்யா சண்முகம் என்பவர் பற்றி கேட்க அவரை நன்றாக தெரியும் என மூர்த்தி சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா அவர் இறந்துவிட்டதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதை கேட்டு மூர்த்தி அதிர்ச்சி அடைய ஜீவாவை சென்று பார்க்க சொல்ல வேண்டும் என சொல்கிறார். அப்போது மீனா கடையில் வேலை இருப்பதாக சொல்ல முக்கியமான நபர் கடையில் இருந்து அரைமணி நேரம் வந்தால் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் மீனாவிடம் அவர் எப்படி இறந்தார் என கேட்க ஹார்ட்அட்டாக் என சொல்கிறார். அதை கேட்டு மூர்த்திக்கு பயம் வருகிறது. நானும் சென்று விடுவேன் என சொல்ல நாங்க உங்களை பார்த்துக் கொள்வோம் என ஐஸ்வர்யா மீனா சொல்கிறார்கள்

பின் ஐஸ்வர்யா மாமாவிடம் இப்படியா சொல்வது என கேட்கிறார். அவர் கேட்டதற்கு தான் நான் பதில் சொன்னேன் என சொல்கிறார். மறுபக்கம் தனம் கடையில் மீதமுள்ள வேலைகளை எல்லாம் பொறுப்புடன் கவனிக்கிறார். அப்போது சரவணன் அண்ணாச்சியிடம் அண்ணி வந்து கதிர் ஜீவா அண்ணன்களை விட அதிகம் வேலை செய்வதாக சொல்ல தனம் இப்போதா கடைக்கு வருகிறார். சிறு கடையாக இருக்கும் போது வீட்டையும் கவனித்து அத்தையையும் கவனித்து கடையையும் பொறுப்புடன் கவனித்து கொள்வார் என சொல்கிறார்.

மறுபக்கம் கதிர் முதல் நாள் வேலையை வேகமாக செய்து கொண்டிருக்கிறார். அப்போது எல்லாரும் கேட்பதை கொடுத்து கொண்டிருக்க தெரியாமல் ஒருவர் மீது சாம்பார் கொட்டிவிடுகிறது. உடனே அவர் கதிரை பயங்கரமாக திட்டுகிறார். பதிலுக்கு முதலாளியும் திட்டுகிறார். ஆனால் கதிர் மீனா அப்பா சொன்னதை நினைத்து பார்க்கிறார். உங்க மனைவிக்கு டிரீட்மென்ட் செய்ய வக்கு இல்லை என அவர் சொன்னது நியாபகத்திற்கு வருகிறது. அதனால் கதிர் எல்லாத்தையும் பொறுத்துக் கொள்கிறார்.

கோர்ட்டில் இருந்து வந்த விவாகரத்து நோட்டீஸ், கோபியை திட்டிய ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

பின் தனம் கடையில் மேலே ஏறி எல்லா வேலைகளையும் செய்ய ஜீவா வேண்டாம் என சொல்கிறார். ஆனால் தனம் அதெல்லாம் முடியாது நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். அப்போது ஜீவாவிற்கு தனத்தை நினைத்து பெருமையாக இருக்கிறது. உடனே மீனாவிற்கு வீடியோ கால் செய்து தனம் செய்யும் வேலைகளை காட்டுகிறார். அதை பார்த்து மீனா கடுப்பாகிறார். பின் தனம் அண்ணன் ஜெகா தனத்தை பார்க்க கடைக்கு வருகிறார். பேச கூட நேரம் இல்லாமல் தனம் ஓடி ஓடி வேலை செய்வதை பார்த்து ஜெகா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here