தனம் பணத்தை கொடுத்ததால் மீனாவிடம் கோவமாக பேசிய ஜனார்த்தனன், நிம்மதியாக இருக்கும் ஜீவா – இன்றைய எபிசோட்!

0
தனம் பணத்தை கொடுத்ததால் மீனாவிடம் கோவமாக பேசிய ஜனார்த்தனன், நிம்மதியாக இருக்கும் ஜீவா - இன்றைய எபிசோட்!
தனம் பணத்தை கொடுத்ததால் மீனாவிடம் கோவமாக பேசிய ஜனார்த்தனன், நிம்மதியாக இருக்கும் ஜீவா - இன்றைய எபிசோட்!
தனம் பணத்தை கொடுத்ததால் மீனாவிடம் கோவமாக பேசிய ஜனார்த்தனன், நிம்மதியாக இருக்கும் ஜீவா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்தனனிடம் பணத்தை கொடுத்ததால் மீனாவிடம் போன் செய்து உன் குடும்பத்திற்கு நல்லது தான் செய்தேன் என சொல்கிறார். பின் மீனா அந்த குடும்பத்திற்கு ஆதரவாக பேசியதால் அவர் கோபப்படுகிறார். பின் ஜீவா பணத்தை திருப்பி கொடுத்ததை நினைத்து நிம்மதியாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் தனம் வாங்கி கொடுத்த ட்ரெஸை பார்த்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் மீனா என்ன சமைக்கலாம் என யோசித்து கொண்டிருக்க அப்போது ஐஸ்வர்யா வந்து மீனாவிடம் என்ன யோசித்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார். அப்போது மீனா என்ன ஐஸ்வர்யா இவ்வளவு நேரமா கடைக்கு சென்றால் சீக்கரம் வரமாட்டியா என கேட்க நான் என்ன செய்வது கடையில் நான் மட்டும் தான் இருந்தேன் என சொல்கிறார்.

நான் எப்படி தனியாக சமாளிப்பது குழந்தைகள் வேற இன்னைக்கு ரொம்ப தொல்லை செய்தார்கள் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மதியம் சமைத்ததை வைத்து கொள்ளலாம் என சொல்கிறார். பின் மீனா அப்படியா என கேட்க குழந்தைகளை வைத்து கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை என சொல்கிறார். பின் மீனாவிற்கு அவருடைய அப்பா போன் செய்கிறார். அவர் மீனாவிடம் நான் உங்க குடும்பத்திற்கு நல்லது தான் செய்கிறேன் ஆனால் ஏன் அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மீனா எப்படியும் பணத்தை கொடுத்து தான ஆக வேண்டும். நீங்க பணத்தை கொடுக்காமல் இருந்தாலும் அவர்கள் எங்கையாவது ஏற்பாடு செய்திருப்பார்கள் என சொல்ல, மீனாவின் அப்பா பணம் கொடுத்தால் கொஞ்ச நாள் கழித்து கொடுக்க வேண்டும் என சொல்கிறார். பின் மீனா எப்படியும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் தான என சொல்ல, அது கடை பணம் இல்லை தனம் அக்காவின் நகை அடமானம் வைத்தது என சொல்கிறார்.

உடனே மீனாவின் அப்பா உன்னிடம் பேச முடியாது என வைக்கிறார். பின் மூர்த்தி இன்னும் தனம் வரவில்லையா என கேட்க ஆமாம் என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் ஐஸ்வர்யா மூர்த்தியிடம் அவர்கள் பணம் கொண்டு போனதாக சொல்ல அப்போது தனம் வருகிறார். ஏன் இவ்வளவு நேரம் என கேட்க முக்கியமான வேலை என சொல்கிறார். பின் தனம் மீனாவின் அப்பா உங்களுடைய மருத்துவமனை செலவிற்கு பணம் கொடுத்தார் அதை தான் திருப்பி கொடுத்தோம் என சொல்ல மூர்த்தி நகையை வைத்து கொடுத்தியா என கேட்கிறார்

ஆமாம் என தனம் சொல்கிறார். மீனா அப்படி என்ன அவசரம் என கேட்க ஜீவா 45000 ரூபாய்க்கு எவ்வளவு சண்டை போட்டார் அதனால் குடும்பத்தில் விரிசல் வந்துள்ளது என சொல்கிறார். சண்டை வந்ததற்கு காரணமாக இருந்த பணத்தையும் கொடுத்தாச்சு என சொல்கிறார். பின் ஜீவா மீனாவிடம் கதிர் வீட்டிற்கு சென்றோம் என சொல்கிறார். மூர்த்தி மாமா அவருடைய வீட்டிற்கு போக கூடாது என சொன்னார்களே என சொல்ல, கதிருக்கு தனியாக வீடு பார்க்கும் அளவிற்கு ஏது பணம் என கேட்கிறார். தெரியவில்லை ஆனால் முல்லையின் கழுத்தில் தாலி செயின் இல்லை என சொல்கிறார்.

கதிரை பார்த்தது எவ்வளவு சந்தோசமாக இருந்தது என சொல்கிறார். பின் அவன் எடுத்த முடிவு சரியானது தான் இப்போது உன் அப்பாவிடம் பணத்தை கொடுத்ததும் தான் நிம்மதியாக இருக்கிறது என சொல்கிறார். என்னிடம் சொல்லிருக்கலாமே என சொல்ல ஜீவா எனக்கே தெரியாது என சொல்கிறார். பின் ஜீவா பணத்தை கொடுத்த பின் தான் நிம்மதியாக இருப்பதாக சொல்கிறார். பணத்தை கொடுத்த போது திமிராக பேசுனியா என கேட்க ஜீவா அதெல்லாம் இல்லை என சொல்கிறார்.

மருத்துவமனையில் வந்ததும் கோபியிடம் கேள்வி கேட்ட பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மூர்த்தி தனம் நகையை கொடுத்ததை நினைத்து கோவமாக இருக்கிறார். உடனே தனம் விடுங்க மாமா பணத்தால் வந்த பிரச்சனை எல்லாம் போதும் என சொல்கிறார். புரிகிறது தனம் ஆனால் உனக்கு நான் நகை வாங்கி கொடுத்து சந்தோசப்படுத்தலாம் என நினைத்தேன் ஆனால் அது முடியாது போல என சொல்கிறார். மீனாவின் அப்பா பணம் கொடுத்தது எனக்கு உறுத்தலாக இருந்தது என சொல்கிறார். பின் கதிர் வீட்டிற்கு சென்றதாக சொல்கிறார்.

மாமா நான் வீட்டிற்கு உள்ளே போகவில்லை வெளியே தான் நின்றேன் என சொல்லிவிட்டு முல்லைக்கு சில பொருள்கள் வாங்கி கொடுத்துவிட்டு வந்தேன் என சொல்கிறார். அன்னைக்கு மருத்துவமனையில் நான் கூப்பிட்டேன் அவன் வரமாட்டேன் என சொல்லிவிட்டான் அதனால் தான் நான் உள்ளே போகவில்லை. அவன் உங்க போட்டோ என் போட்டோ வைத்து தான் சாமி கும்பிட்டு இருக்கிறான் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here