கடை திறப்பு விழாவிற்கு திட்டமிடும் குடும்பத்தினர், ஜீவாவிற்கு வந்த போன் கால் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கடை திறப்பு விழாவிற்கு திட்டமிடும் குடும்பத்தினர், ஜீவாவிற்கு வந்த போன் கால் - இன்றைய
கடை திறப்பு விழாவிற்கு திட்டமிடும் குடும்பத்தினர், ஜீவாவிற்கு வந்த போன் கால் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கடை திறப்பு விழாவிற்கு திட்டமிடும் குடும்பத்தினர், ஜீவாவிற்கு வந்த போன் கால் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் ஜீவா புது கடை பற்றி பேசி சந்தோசப்படுகின்றனர். பின் கடை திறப்பு விழாவிற்கு தேவையான வேலைகள் செய்கின்றனர். அப்போது ஜீவாவிற்கு கான்ட்ராக்டர் போன் செய்து கடைக்கு சீல் வைக்க இருப்பதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் ஜீவாவும் கடை பற்றி பல கனவுகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சாதாரண சிறு கடையில் இருந்து தற்போது இவ்வளவு பெரிய கடை கட்டி இருக்கோம் என சொல்கிறார். அதுவும் ஒரு நல்ல இடத்தில் கட்டி இருக்கிறோம் எவ்வளவு பெரிய விஷயம் என சொல்கிறார். எனக்கு ஒரு ஆசை நம்ம கடைக்கு வருபவர்கள் எல்லாமே வாங்கி கொண்டு செல்ல வேண்டும் வீட்டு உபயோக பொருள்கள் எல்லாம் வாங்க வசதி செய்ய வேண்டும். இன்னும் பல கடைகள் திறக்க வேண்டும் என ஜீவா சொல்ல, எல்லா வேலையும் நல்லபடியாக முடிந்தது, உங்க கதிர் தான் எல்லா வேலையும் கூட இருந்து பார்த்துக்கொண்டார் என சொல்கிறார்.

பின் வீட்டில் அனைவரும் கடை திறப்பு விழா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பத்திரிகை அடிக்க வேண்டுமா என கேட்க, அதெல்லாம் இல்லை எல்லாருக்கும் நேரில் சென்று சொல்ல வேண்டும் என சொல்கின்றனர். கண்ணன் தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்க ஜீவா கண்ணனை அழைத்து வருகிறார். பின் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வருகின்றனர். கடை வேலை பற்றி பேசிக் கொண்டிருக்க, தனம் இன்னும் கடையை பார்க்கவில்லை என சொல்கிறார். இன்றே வந்து பாருங்கள் என சொல்கின்றனர்.

கடைக்கு பெயர் பலகை பற்றி பேச, தனம் சொந்தங்களுக்கு போன் செய்து பேசுகிறார். கதிர் வந்து தனத்தை கடையை பார்க்க கூப்பிட மீனாவெளியே போயிருக்கா அவ வந்ததும் வரேன் என சொல்கிறார். முல்லை டீ போட்டுக் கொடுக்க தனம் எல்லாரையும் கூப்பிடுகிறீர்களா என கேட்கிறார். அப்போது ஜீவாவும் மீனாவும் வர சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போனால் சாப்பிட எல்லாம் வைத்து கொடுப்பதாக சொல்கிறார். பின் ஜீவாவிற்கு கான்டக்டர் போன் செய்து கடையில் பிரச்சனை என சொல்கிறார்.

பாரதி பெட்டியை திருப்பி கொடுத்த கண்ணம்மா, உண்மையை நிரூபிக்க போட்ட சபதம் – இன்றைய எபிசோட்!

கடையை திறக்க முடியாது என சொல்ல, கதிரை அழைத்துக் கொண்டு ஜீவா கிளம்புகிறார். பின் தனம் நானும் கடைக்கு வருகிறேன் என சொல்ல, ஜீவா வேகமாக வருகிறார். பின் ஜீவா செல்ல, சரியாக அப்ரூவல் இல்லை அதனால் இந்த கடையை சீல் வைக்க போகிறோம் என சொல்கிறார். எல்லாம் வாங்கியாச்சு என சொல்ல, அதெல்லாம் சரியாக இல்லை என ஆபிசர் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here