முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் – இன்றைய எபிசோட்!

0
முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் - இன்றைய எபிசோட்!
முல்லையிடம் பொய் சொல்லும் கதிர், உண்மையை மறைப்பதை நினைத்து வருத்தத்தில் கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் முல்லையிடம் சத்தியம் செய்து டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை என சொல்கிறார். பின் வீட்டில் அனைவரிடமும் கதிர் உண்மையை மறைத்து அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் டாக்டரை பார்த்துவிட்டு வர முல்லை எதுவும் பிரச்சனை இல்லையா என கேட்கிறார். எதுவும் பிரச்சனை இல்லை என டாக்டர் சொன்னதாக சொல்ல, அப்போ இவ்வளவு நேரம் என்ன பேசினார்கள் என கேட்கிறார். அவர் நாம சொந்தத்தில் திருமணம் செய்து இருக்கிறோம் அதனால் குழநதைக்கு எதாவது பிரச்சனை வரும் என சொல்கிறார். ஆனால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என சொல்ல, என் தலையில் சத்தியம் செய்யுங்கள் என சொல்கிறார். கதிர் உண்மையை மறைத்து தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

அப்போது தான் முல்லை நிம்மதி அடைகிறார். பின் கதிர் முல்லை வீட்டிற்கு வர கதிர் அழுது கொண்டே வருகிறார். முல்லை என்ன என கேட்க, கண்ணில் தூசி விழுந்துவிட்டது என சொல்கிறார். வண்டியை முல்லை நிறுத்த சொல்லி கண்ணில் முல்லை தூசி ஊதிவிடுகிறார். அப்போது கதிர் டாக்டர் சொன்னதை நினைக்கிறார். பின் ஹோட்டலுக்கு சாப்பிட கூட்டிக் கொண்டு போக அங்கே முல்லை அம்மா போன் செய்கிறார். முல்லை சந்தோசமாக எதுவும் பிரச்சனை இல்லை என சொன்னதாக சொல்ல, முல்லையின் சந்தோசத்தை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார்.

பாரதி மனதை மாற்றும் வெண்பா, குழந்தைகளுக்காக உண்மையை நிரூபிக்கும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

பின் இருவரும் சாப்பிட்டிவிட்டு வீட்டிற்கு வர அங்கே தனம் என்ன சொன்னார்கள் என கேட்கிறார். எதுவும் பிரச்சனை இல்லை என சொன்னதாக சொல்ல தனமும் மீனாவும் சந்தோசப்படுகிறார்கள். பின் கதிர் பின் பக்கம் சென்று முல்லையை நினைத்து அழுது கொண்டிருக்க, அங்கே முல்லை வருகிறார் அவர் வருவதை பார்த்து கதிர் கண்ணீரை துடைக்க, வெயில் அதிகமாக இருப்பதால் முகம் தழுவியதாக சொல்கிறார். தனம் மூர்த்திக்கு போன் செய்து நடந்ததை சொல்ல ஜீவாவும் கேட்டு சந்தோசப்படுகிறார். பின் கதிர் கடைக்கு செல்ல முகம் வாட்டமாக இருப்பதை ஜீவா கவனிக்கிறார். பின் கடை வேலைகளை கவனிக்க, கடையை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here