முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

0
முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என சொன்ன மருத்துவர், உண்மையை மறைக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா சென்று முல்லை கதிரிடம் குழந்தை சீக்கிரமாக பிறக்கத்தான் போகிறது என சொல்கிறார். முல்லைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என கதிரிடம் மருத்துவர் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா முல்லை மற்றும் கதிரிடம் இந்த வீட்டில் ஒரு வயது வித்தியாசத்தில் மூன்று குழந்தைகள் இருக்க தான் போகிறது என சொல்ல, முல்லை எனக்கு பயமாக இருக்கிறது மருத்துவமனையில் எதாவது பிரச்சனை என சொன்னால் என்ன செய்வது என பயமாக இருக்கிறது. இன்று இரவு எப்படி போகுமோ என தெரியவில்லை என்று முல்லை வருத்தப்பட அதெல்லாம் எதுவும் ஆகாது என ஜீவா சொல்கிறார். பின் கதிரும் சமாதானம் செய்ய முல்லை சிரிக்கிறார்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு தேவையான பொருள்களை எடுத்துக் கொண்டு கதிர் கிளம்ப, முல்லை கதிர் மீது சாய்ந்து வருத்தப்படுகிறார். அங்கே எதாவது பிரச்சனை என சொன்னால் நான் வீட்டிற்கே வர மாட்டேன் என சொல்ல, நான் அப்போ எங்கே இருப்பேன் என கேட்கிறார். கதிர் முல்லைக்கு சமாதானம் செய்து கூட்டிக் கொண்டு வருகிறார். அப்போது தனம் மூர்த்தி பணம் கொடுக்க கதிர் வேண்டாம் என சொல்கிறார். வாங்கி கொள்ளுங்கள் என சொல்ல, கதிர் வாங்கி கொள்கிறார்.

பின் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என சொல்ல, முல்லை வேண்டாம் என சொல்கிறார். பயமாக இருப்பதால் எனக்கு சாப்பாடு இறங்காது என சொல்கிறார். எதுவும் நடக்காது என சொல்ல, தனம் அங்கே சென்று போன் செய்ய சொல்கிறார். அவர்கள் கிளம்பியதும் தனம் சாமியை வேண்டிக் கொள்கிறார். முல்லை போகிற வழி எல்லாம் பதட்டத்துடன் வருகிறார். அப்போது முல்லை தலை சுற்றுவதாக சொல்ல, கதிர் ஜூஸ் வாங்கி கொடுக்கிறார். பின் டாக்டரை பார்க்க போக டாக்டர் இருவரிடமும் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். எதாவது பிரச்சனையா என முல்லை கேட்க இல்லை என சொல்கிறார்கள்.

திட்டமிட்டு பாரதியை சமாதானம் செய்த வெண்பா, மகளின் நிலைமையை நினைத்து கவலைப்படும் சண்முகம் – இன்றைய எபிசோட்!

முதலில் முல்லை வெளியே இருக்க சொல்லி கதிரிடம் டாக்டர் உண்மையை சொல்கிறார். முல்லைக்கு கர்ப்பப்பையில் சிறு பிரச்சனை இருக்கிறது. அது சிறு வயது முதலே அவங்களுக்கு இருந்து இருக்கிறது. அதனால் கூட பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கிறது என சொல்ல, கதிர் குழந்தை பிறக்குமா பிறக்காதா என கேள்வி கேட்கிறார். இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என சொல்ல, ஆனால் மருத்துவம் மூலம் குழந்தை பிறக்க முடியும் என சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைகிறார்.

அவர் இதை முல்லையிடம் சொல்ல வேண்டாம் என சொல்ல, டாக்டர் அவருக்கு சொல்லாமல் இருந்தால் மாதம் மாதம் குழந்தை பெற்றுக் கொள்ள என நினைத்து வருத்தப்படுவார் என சொல்கிறார். பின் முல்லையிடம் சொல்ல வேண்டாம் என கதிர் வருத்தப்பட்டு கேட்க, முல்லை உள்ளே வருகிறார். டாக்டர் குழந்தை இல்லை என்பது ஒரு குறை இல்லை அதற்காக வருத்தப்பட வேண்டாம், குழந்தை வரும் என சொல்லி முல்லைக்கு மருந்து எழுதி கொடுக்கிறார். எதுவும் பிரச்சனை இல்லையே என முல்லை கேட்க அதெல்லாம் இல்லை என கதிர் சொல்கிறார். என் மேலே சத்தியமாக சொல்லுங்கள் என சொல்ல கதிர் தயங்குகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here