மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை - இன்றைய
மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தி சொல்லியும் காலேஜ் போகாத ஐஸ்வர்யா, குழந்தை பற்றி பேசிய முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா காலேஜ் போகவில்லை என தனத்திடம் சொல்ல தனம் மூர்த்தியிடம் சொல்கிறார். பின் யாரு சொன்னதையும் கேட்காமல் ஐஸ்வர்யா படிக்க விருப்பமில்லை என உறுதியாக இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா காலேஜ் படிக்க மாட்டேன் என சொன்னதை தனம் மூர்த்தியிடம் சொல்ல, மூர்த்தி ஏன் யாரும் எதாவது சொன்னார்களா என கேட்கிறார். ஆனால் ஐஸ்வர்யா எனக்கு படிக்க ஆர்வமில்லை அதனால் நான் படிக்க மாட்டேன் என சொல்கிறார். பின் மூர்த்தி எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். பின் மீனா ஜீவாவிடம் வந்து என்னால் தான் ஐஸ்வர்யா படிக்கமாட்டேன் என சொன்னதாக சொல்கிறார். ஜீவா அப்படி அந்த பெண் எதுவும் சொல்லவில்லையே என கேட்க, அதற்கு அதான் அர்த்தம் என மீனா சொல்கிறார்.

சௌந்தர்யாவை சந்தேகப்படும் பாரதி, கண்ணம்மாவை புரிந்து கொண்ட லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மறுபக்கம் ஐஸ்வர்யாவை கண்ணன் ஏன் காலேஜ் வரவில்லை என கேட்கிறார். எனக்கு விருப்பில்லை என ஏற்கனவே சொன்னேனே என சொல்ல, இனிமேல் நான் நிம்மதியாக இருப்பேன் என ஐஸ்வர்யா சொல்கிறார். நாளைக்கு நான் மட்டும் எப்படி தனியாக போவேன் என கண்ணன் கேட்க, நான் தினமும் உன்னை கொண்டு வந்து விடுகிறேன் என ஐஸ்வர்யா சொல்லவில்லை. அதனால் இல்லை எதோ மாதிரி இருப்பதாக கண்ணன் சொல்ல, ஐஸ்வர்யா அப்படி எல்லாம் நினைக்காதே என ஐஸ்வர்யா சொல்கிறார்.

பின் முல்லை கதிரிடம் என்னை எங்கையாவது வெளி ஊருக்கு கூட்டிக் கொண்டு போறீங்களா என கேட்க கதிர் சரி என சொல்கிறார். இப்பவே போக வேண்டும் என சொல்ல, குன்னக்குடி காரைக்குடி என அருகில் இருக்கும் ஊரின் பெயர்களை சொல்கிறார். அதை கேட்டு முல்லை கோவப்பட பீரோ சாவி கேட்கிறார். அதில் தான் முல்லையின் ரிப்போர்ட் இருப்பதை நினைத்து கதிர் சாவி கொடுக்க தயங்குகிறார். எதற்கு என கேட்க மோதிரத்தை உள்ளே வைக்க வேண்டும் என சொல்கிறார். நான் வைக்கிறேன் என சொல்ல, ஏன் கொடுக்கமாட்டேங்குறீங்க என சொல்கிறார்.

TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வுக்கு தயாராவது எப்படி?

நாம சீக்கிரமாக வெளி ஊருக்கு போக வேண்டும் என சொல்ல, நாம ஊட்டி போகலாம் என கதிர் பேச்சை மாற்றுகிறார். உடனே முல்லை சந்தோசபட நான் அண்ணனிடம் சொல்லிவிடுகிறேன் நாம ஊட்டி போறோம் என கதிர் சொல்ல, உடனே போக வேண்டும் அப்பறம் நான் கர்ப்பமாக இருந்தால் போக முடியாது என முல்லை சொல்கிறார். பின் கதிர் முல்லைக்கு சாவியை கொடுக்க முல்லையின் நிலைமையை நினைத்து வருத்தப்படுகிறார். பின் மறுநாள் கண்ணன் காலேஜ் கிளம்பி இருக்க, ஐஸ்வர்யா கண்ணனிற்கு பிடித்த சாப்பாடு செய்து கொடுக்கிறார். கண்ணன் ஐஸ்வர்யாவை வருத்தத்துடன் பார்த்து கட்டி அணைக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here