குடித்துவிட்டு கதிர் கண்ணனிடம் ரகளை செய்த ஜீவா, மறுநாள் நக்கலடித்த குடும்பம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
குடித்துவிட்டு கதிர் கண்ணனிடம் ரகளை செய்த ஜீவா, மறுநாள் நக்கலடித்து குடும்பம் - இன்றைய
குடித்துவிட்டு கதிர் கண்ணனிடம் ரகளை செய்த ஜீவா, மறுநாள் நக்கலடித்து குடும்பம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
குடித்துவிட்டு கதிர் கண்ணனிடம் ரகளை செய்த ஜீவா, மறுநாள் நக்கலடித்த குடும்பம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா குடித்துவிட்டு கதிர் வீட்டிற்கு சென்று அங்கே ரகளை செய்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யா வர அவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்கிறார். மறுநாள் எல்லாம் தெளிந்த பின்னர் எல்லார் முகத்தையும் பார்க்க வெட்கப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா குடித்துவிட்டு தனத்திடம் பேச நீங்க எனக்கு இன்னொரு அம்மா என சொல்கிறார். பின் நாங்க சிறு வயதில் இருக்கும் போது எங்களுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு நீங்க சாப்பிடாமல் இருந்தீங்க என சொல்லி ரகளை செய்கிறார். பின் மீனா அவரை இழுத்துக் கொண்டு சென்று ரூமில் படுக்க வைக்கிறார். பின் மீனா தூங்கிய பின் ஜீவா மீண்டும் எழுந்து வருகிறார். அவர் எழுந்து சென்று கதிர் ரூம் கதவை தட்டுகிறார். அப்போது கதிர் கதவை திறக்க மீனா ஜீவாவை காணாமல் வருகிறார். கதிரிடம் சென்று தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் முல்லை நல்ல பொண்ணு என அங்கையும் பல வசனங்களை பேசுகிறார்.

பாரதி தான் உன்னுடைய அப்பா என்று கை காட்டும் கண்ணம்மா, சந்தோஷத்தில் லட்சுமி – இன்றைய எபிசோட்!

அப்போது கண்ணன் வர அவனை ஜீவா தெரியாமல் அடித்துவிடுகிறார். நீ மட்டும் தான் இந்த வீட்டில் என்னை அடிக்காமல் இருந்தாய் நீயும் அடித்துவிட்டாய் என கண்ணன் சொல்ல, அய்யோ தம்பி உன்னை தெரியாமல் அடித்துவிட்டேன் என சொல்கிறார். பின் நீயும் ஐஸ்வர்யாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜீவா சொல்ல, மீனா அவரை அழைத்து கொண்டு செல்கிறார். பின் ஜீவாவை தூங்க வைக்க, மீனா தூங்காமல் அவரை பார்த்துக் கொள்கிறார். மறுநாள் ஜீவா தூங்கி கொண்டிருக்க மீனா வந்து ஜீவாவை எழுப்புகிறார்.

ஜீவா எழுந்து என்ன இப்படி தலை வலிக்கிறது என சொல்ல, நீ செய்த காரியத்தால் வலிக்காமல் இருக்காதா என கேட்கிறார். அப்படி என்ன செய்தேன் என ஜீவா கேட்க, என்ன செய்யவில்லை என கேளு என சொல்கிறார். என்னிடம் மட்டுமே 110 தடவை காதலிப்பதாக சொன்னாய் என சொல்கிறார். பின் வெளியே யாரும் இல்லையே என கேட்க, இல்லை முதலில் குளி என மீனா சொல்கிறார். பின் கதிர் தனம் காத்துக் கொண்டிருக்க ஜீவா யாருக்கும் தெரியாமல் வருகிறார். அப்போது தனம் கூப்பிட எதுவும் நடக்காதது போல ஜீவா நிற்கிறார்.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் – பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் வரை உயர்வு?

பின் ஜீவாவை கதிர் கிண்டல் செய்ய, தனமும் பதிலுக்கு கிண்டல் செய்கிறார். ஜீவா எதுவும் தெரியாதது போல இருக்க அப்போது மீனா வருகிறார். என்னை காதலிக்கும் போது கூட இவன் இப்படி பேசியது இல்லை ஆனால் நேற்று மானே தேனே என பேசினான் என சொல்கிறார். அப்போது கண்ணன் வர இவன் என்ன சொல்ல போகிறானோ என நினைக்கிறார். அப்போது கண்ணனும் பதிலுக்கு கிண்டல் செய்ய ஜீவா இவனையும் விட்டு வைக்கவில்லை என நினைக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here