மீனா தனத்திடம் குடித்துவிட்டு ரகளை செய்த ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஜீவா குடித்துவிட்டு வர ஜீவா கை தாங்கி பிடித்து படுக்க வைக்கின்றனர். பின் ஜீவா சத்தம் போட்டு தனத்தை எழுப்பிவிட ஒரே ரகளை செய்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவா குடித்துவிட்டு வர மீனாவின் அப்பா வந்து மீனாவிற்கு போன் செய்து கூட்டிக் கொண்டு போக சொல்கிறார். அப்போது மீனா தனியாக தோள் மீது கையை போட்டு கூட்டிக் கொண்டு வர, ஜீவா கூச்சலிட்டு வருகிறார். அப்போது நடு வீட்டில் படுத்துக் கொண்டு சத்தம் போட அப்போது கதிர் வருகிறார். என்னாச்சு அண்ணனிற்கு அடி எதுவும் பட்டுவிட்டதா என கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை என மீனா சொல்கிறார். பின் ஜீவா குடித்திருப்பதை பார்த்து நானும் வந்திருப்பேன் என கதிர் சொல்கிறார். மீனா கதிரை பார்த்து முறைக்க, சும்மா சொன்னதாக சொல்கிறார்.
கண்ணம்மா பிறந்தநாளுக்கு வந்த பாரதி, ஹேமா தன்னுடைய மகள் என சொன்ன கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
ஜீவா பொண்டாடிகளை மறைந்து குடிப்பது நன்றாக இருப்பதாக சொல்ல, அப்போது கதிர் ஜீவாவை பிடித்து ரூமிற்குள் அழைத்து வருகிறார். இதற்கு மேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என மீனா சொல்ல, உள்ளே கூட்டி சென்று படுக்க வைக்கிறார். அப்போது மீனாவை பார்த்து மிகவும் அழகாக இருக்க உன்னை நான் காதலித்ததற்கு காரணமே தான், உன்னையும் உன் தோழி ஸ்வீட்டியை தான் காலேஜ் முழுவதும் பார்ப்பார்கள் அவ்வளவு அழகு என சொல்கிறார்.
பின் இப்படியே சத்தம் போட்டு கயலை எழுப்பி விடாதே என மீனா சொல்ல, நான் உன்னை மிகவும் லவ் பண்ணுகிறேன் என ஜீவா சொல்கிறார். பின் வெளியே வந்த ஜீவா தனத்தை கூப்பிடுகிறார். தேவை இல்லாமல் கலாட்டா செய்கிறாய் என மீனா சொல்ல, அண்ணி அண்ணி என கூப்பிடுகிறார். அப்போது அவர்கள் தூங்கி விட்டதாக மீனா சொல்ல, ஜீவாவின் சத்தம் கேட்டு தனம் வருகிறார். ஏன் ஜீவா ஒரு மாதிரி இருக்கிறான் என கேட்க, ஜீவா குடித்திருப்பதை தெரிந்து கொண்டு தனம் கோவப்படுகிறார்.
நீங்க தான் எங்க எல்லாருக்கும் சாப்பாடு கொடுப்பீங்க நீங்க தான் எண்களின் தெய்வம் என சொல்லி ஜீவா தனம் காலில் விழ போக தனம் விலகியது கூட தெரியாமல் கீழே படுத்து ரகளை செய்கிறார். அதை பார்த்து தனம் சிரிக்கிறார். பின் நீங்க தான் எனக்கு எல்லாமே என சொல்ல, மீனா உள்ளே எல்லாம் நான் என சொன்னாய் இப்போது இவர்களை சொல்வதாக சொல்கிறார். ஜீவாவின் நடவடிக்கை நகைச்சுவையாக இருக்க தனம் சிரிக்கிறார்.