கண்ணனை அடித்தவனை தேடும் கதிர், கோபத்துடன் அலுவகத்தில் காத்திருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை அடித்தவனை தேடும் கதிர், கோபத்துடன் அலுவகத்தில் காத்திருக்கும் மூர்த்தி - இன்றைய
கண்ணனை அடித்தவனை தேடும் கதிர், கோபத்துடன் அலுவகத்தில் காத்திருக்கும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை அடித்தவனை தேடும் கதிர், கோபத்துடன் அலுவகத்தில் காத்திருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி மற்றும் ஜீவா அலுவலகத்திற்கு சென்று கோவமாக பேசுகிறார்கள். பின் கதிர் கண்ணன் பிரச்சனைக்கு காரணமானவனை வழிமறைகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடையை இன்று இடிக்கப் போவதாக சொல்ல, உடனே கோவப்பட்ட மூர்த்தி ஜீவா கடையில் இருந்து கோவமாக கிளம்புகிறார்கள். அப்போது இன்னைக்கு என்ன செய்கிறார்கள் என பார்த்துவிடலாம் என அலுவலகத்திற்கு செல்ல அங்கே அவர்கள் இப்படி உள்ளே வர கூடாது என சொல்லி வெளியே நிற்கவைக்கின்றனர். பின் முல்லை கடைக்கு சென்றுவிட்டு வந்து கொண்டிருக்க முல்லையின் அப்பா வருகிறார். சரக்கு என்ன ஆச்சு என அவர் கேட்க நேற்று மழையில் சரக்கு எதுவும் வைக்க இடம் இல்லாமல் கஷ்டப்பட்டோம்.

பாரதிக்கு ஆதரவாக இருக்கும் ஹேமா, லட்சுமி அப்பா பற்றி பாரதியிடம் கேட்க சொல்லும் வடிவு – இன்றைய எபிசோட்!

ஆனால் இவங்க தான் சென்று எல்லாத்தையும் பாதுகாப்பாக வைத்ததாக சொல்கிறார்கள். பின் முல்லை அப்பா இடம் இல்லை என்றால் நம்ம வீட்டில் வைத்துக் கொள் என சொல்கிறார். தேவைப்பட்டால் சொல்கிறேன் என முல்லை சொல்கிறார். பின் மூர்த்தி நீண்ட நேரமாக காத்திருக்க ஆனால் உள்ளே இருந்து கொண்டே அவர் பேசாமல் இருக்கிறார். அதனால் மூர்த்தி கோவப்பட வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். பின் கதிர் கண்ணனை அழைத்துக் கொண்டு வர ஆனால் கதிர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

கதிர் பேசாதத்தை வைத்தே கண்ணன் அண்ணனிற்கு உண்மை தெரிந்துள்ளதாக சொல்கிறார். பின் கண்ணனிடம் உன்னை அடித்தவன் வீடு எங்கே இருக்கிறது என கேட்க, அண்ணா அவன் என்னை மிரட்டினான் இந்த விஷயம் அண்ணனிற்கு தெரிந்தால் என்னை வெளியே அனுப்பிவிடும் என பயந்து தான் சொல்லவில்லை என சொல்கிறார். அதெல்லாம் இருக்கட்டும் அவனுடைய வீடு எங்கே இருக்கு என கேட்கிறார்.

விவாகரத்து நோட்டீஸுடன் பாக்கியாவை சந்திக்கும் கோபி, ராதிகாவுடன் திருமணம் நடைபெறுமா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பின் அவன் வீட்டிற்கு வர அங்கே கதவு பூட்டி இருக்கிறது. அந்த பக்கம் கடை பையன் வர அவனை கதிர் துரத்தி கொண்டே செல்கிறார். ஆனால் அவன் அவர்களிடம் மாட்டாமல் தப்பித்துவிடுகிறார். பின் அந்த அலுவலகரின் மகனிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். அவர் கோவப்பட்டு இன்னும் அவர்கள் திருந்தவில்லையா இனிமேல் அவன் எப்படி கடையை பார்த்துக் கொள்கிறான் என நான் பார்க்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் தனம் கவலையாக இருக்க ஜெகா வருகிறார்.

நடந்தது எல்லாத்தையும் ஜெகா கேள்வி பட்டதாக சொல்ல, என்ன தான் காரணம் என மீனா கேட்கிறார். அது தான் தெரியவில்லை என தனம் சொல்ல, எனக்கு தெரியும் என ஐஸ்வர்யா சொல்கிறார். என்ன தெரியும் யார் காரணம் என மீனா கேட்க, எல்லாத்துக்கும் கண்ணனை அடித்தவன் தான் காரணம் அவனுடைய அப்பா இஓ தான். அவன் கண்ணனை அடித்ததற்கு கதிர் மாமா திருப்பி அடித்ததால் தான் இப்படி நடந்தது என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here