புது கடை பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொண்ட கண்ணன், உண்மையை சொல்வாரா? இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது கடை பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொண்ட கண்ணன், உண்மையை சொல்வாரா? இன்றைய
புது கடை பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொண்ட கண்ணன், உண்மையை சொல்வாரா? இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது கடை பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொண்ட கண்ணன், உண்மையை சொல்வாரா? இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பமே கடையை நினைத்து வருத்தப்பட கண்ணனை அடித்தவர்கள் வழியை மறைக்கிறார்கள். அப்போது உன் அண்ணன் என்னை அடித்ததால் தான் நான் இப்படி செய்தேன் அந்த முனிசிபாலிட்டி அலுவலர் என்னுடைய அப்பா தான் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பமே கடை திறக்க முடியாமல் கவலையில் இருக்கின்றனர். அப்போது கண்ணன் வர வழியில் அவனை ஏற்கனவே அடித்தவர்கள் சிலர் வழி மறைகின்றனர். என்னை விடுங்கள் என கண்ணன் சொல்ல, அந்த பயம் இருக்க வேண்டும் அடி அது மாதிரி என அந்த ஆட்கள் சொல்கின்றனர். அப்போது அவர் உங்க கடைக்கு சீல் வைத்துவிட்டார்கள் போல, அது மட்டும் இல்லாமல் கடையை இடிக்க போறாங்க போல என கேட்கிறார். பெரிய இடத்தில் கை வைத்தால் இப்படி தான் நடக்கும் குடும்பத்துடன் ஆப்பு வைத்தேன் பார்த்தியா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க கடை பற்றி தெரிந்து கொண்டு எதோ என்னிடம் பேசுறீங்க என கண்ணன் சொல்ல, உன் அண்ணன் அடித்ததால் தான் நான் இப்படி செய்தேன் என அந்த ஆள் சொல்கிறார். அந்த முனிசிபாலிட்டி அலுவலர் என்னுடைய அப்பா தான் இதெல்லாம் அடித்த அன்னைக்கே நான் செய்திருக்க வேண்டும் ஆனால் கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக செய்தால் தான் வலிக்கும் என சொல்கிறார். நாளைக்கு உன் கடையை தரைமட்டமாக இடிக்க போகிறோம் என சொல்கிறார். கண்ணன் என்னை என்ன வேண்டும் என்றாலும் பண்ணுங்க ஆனால் கடையை விட்டுவிடுங்கள் என சொல்கிறார்.

இதெல்லாம் அடிப்பதற்கு முன்னதாக தெரிந்திருக்க வேண்டும். யார் மீது கை வைத்தாலும் விசாரித்து வைக்க வேண்டும் என சொல்கிறார். பின் கடை பையன் வந்து எதோ பொருள் கொடுக்க நாளை கடையை இடிக்க போவதாக பேசிக் கொள்கிறார்கள் என சொல்கிறார். அதை கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா என தனம் கேட்க அந்த அலுவலர் அப்படி தான் சொன்னார்களாம் என சொல்கிறார். கதிர் ஜீவா அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள் என சொல்லி சமாதானம் செய்கிறார். மூர்த்தி வருத்தப்பட்டு வெளியே போகிறார்.

கண்ணம்மாவை வெறுப்பேத்தி அசிங்கப்பட்ட வெண்பா, பிறந்தநாள் விழா பற்றி பாரதியிடம் சொல்லும் ஹேமா – இன்றைய எபிசோட்!

பின் கண்ணன் வர ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கதிர் கேட்கிறார். ஆனால் கண்ணன் ஒன்றுமில்லை என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார். மூர்த்தி கடையை இடித்துவிடுவார்களா என நினைத்து அழுகிறார். கண்ணன் இரவு தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அப்போது ஐஸ்வர்யா என்னாச்சு என கேட்க கண்ணன் ஒன்றுமில்லை என சொல்கிறார். என்ன நடந்தது என கேட்க, பயமாக இருக்கிறது என கண்ணன் சொல்கிறார். இதுக்கெல்லாம் நான் தான் காரணம் என கண்ணன் சொல்ல ஐஸ்வர்யா நீ என்ன செய்தாய் என கேட்கிறார்.

இன்னைக்கு நான் டெலிவரி முடித்து வரும் போது சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் பையன் இருந்தான் அவனுடன் நண்பன் ஒருவன் இருந்தான். அவன் அப்பா தான் இப்போ பிரச்சனை செய்வது என சொல்கிறார். இதை நீ மாமாவிடம் சொல்ல வேண்டாமா என ஐஸ்வர்யா கேட்க இதை நான் எப்படி சொல்வது என கேட்கிறார். என்ன காரணம் என தெரியாமல் குடும்பமே குழப்பத்தில் இருக்கிறது நீ சொல்ல வேண்டும் என சொல்ல கண்ணன் சொல்லவிடாமல் தடுக்கிறார். இதெற்கெல்லாம் நான் தான் காரணம் என தெரிந்து அண்ணன் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொன்னால் என்ன செய்வது என கேட்கிறார். எல்லாரும் என்ன பிரச்சனை என தெரியாமல் இருக்கிறார்கள் என சொல்ல, கண்ணன் வேண்டாம் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here