அலுவலரால் உதாசீனப்படுத்தப்பட்ட கதிர் ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுமா? இன்றைய எபிசோட்!

0
அலுவலரால் உதாசீனப்படுத்தப்பட்ட கதிர் ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுமா? இன்றைய எபிசோட்!
அலுவலரால் உதாசீனப்படுத்தப்பட்ட கதிர் ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுமா? இன்றைய எபிசோட்!
அலுவலரால் உதாசீனப்படுத்தப்பட்ட கதிர் ஜீவா, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறக்கப்படுமா? இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவும் மூர்த்தியும் நீண்ட நேரமாக அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்க அலுவலர் வரவே இல்லை. அப்போது ஜீவா கோவப்பட்டு அலுவலரிடம் பேச அந்த அலுவலர் ஜீவாவை வெளியே அனுப்ப சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜீவாவும் மூர்த்தியும் ரொம்ப நேரமாக அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்க ஆனால் அலுவலர் வருவதாக இல்லை. அங்கே இருப்பவரிடம் பேச அவர் வருவார் காலையில் வந்து கடுப்பேத்தாதீங்க என சொல்கிறார். அப்ரூவல் சரியாக வாங்காமல் கடை கட்டியது சட்டப்படி தவறு இல்லையா என கேட்க, அதெல்லாம் எங்க காண்ட்ராக்டர் எல்லாம் வாங்கியாச்சு என சொன்னதாக சொல்கிறார். மூர்த்தி ஜீவா அலுவலரை கோவமாக பேச அவர்கள் உதாசீனப்படுத்தி பேசுகின்றனர். நீண்ட நேரமாக இருவரும் எந்த முடிவும் தெரியாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

மதியம் எல்லாரும் சாப்பிட போக மூர்த்தி ஜீவா மட்டும் அலுவலரை பார்க்காமல் இருக்கின்றனர். மூர்த்தி எப்போது சார் வருவார் என கேட்க அவர் வரும்போது பார்த்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். இப்படியே இருந்தால் நாங்க எப்படி கடை திறப்பது. என்ன பிரச்சனை என சொன்னால் அதை சரி செய்ய முடிவு எடுப்பேன் என ஜீவா சொல்கிறார். ஆனால் அலுவலர் சரியாக பேசாமல் இருக்க மூர்த்தியை கிளம்ப சொல்கிறார். பின் மூர்த்தி கிளம்பிவிட, மறுபக்கம் பெண்கள் வீட்டில் வருத்தத்துடன் இருக்கிறார்கள். அனைவரும் சாப்பிடாமல் இருக்க முல்லை சாப்பிட சொல்கிறார்.

கடை எப்படியும் திறந்திடுவோம் பால் காய்ச்ச கூப்பிட வேண்டும் என சொல்ல, தனம் இன்று மாலை வரை காத்திருப்போம் என சொல்கிறார். பின் மீனா பயப்படாமல் இருங்கள் என சொல்ல, தனம் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் திறக்கும் போது இப்படி தான் பல பிரச்சனைகள் வந்தது என சொல்கிறார். எல்லாம் சரியாகிவிடும் என தனத்திற்கு அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர். மறுபக்கம் கதிர் வந்து ஜீவாவை சாப்பிட சொல்கிறார். பின் அலுவலர் வர ஜீவாவும் கதிரும் கோவமாக பேசுகின்றனர்.

பாரதியை தங்கவிடாமல் கண்ணம்மா போட்ட மாஸ்டர் பிளான் , கதறி அழுத வெண்பா – இன்றைய எபிசோட்!

என்ன தப்பு செய்தோம் ஏன் கடையை சீல் வைத்து இருக்கீங்க என கேட்க, அப்ரூவல் வாங்காமல் இருந்தால் அப்படி தான் செய்ய முடியும் என சொல்கிறார். கதிர் அலுவலர் கையை பிடித்து பேச, அந்த அலுவலர் கடையை இடித்துவிடவா என மிரட்டுகிறார். என்னுடைய அலுவலகத்திற்கு வந்து என்னையே குரலை உயர்த்தி பேசுகிறாய் என அவர் கோவமாக பேசுகிறார். பின் கதிர் ஜீவாவும் என்ன செய்வது என தெரியாமல் வெளியே செல்கின்றனர். கண்ணன் புது கடையில் இருந்து கட்அவுட் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தினர் அனைவரும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். அங்கே ஒரே பிரச்சனையாக இருக்கிறது என கண்ணன் சொல்ல, மீனா எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here