கண்ணனை அடித்த ரௌடிகளை அடிக்கும் கதிர், தனத்திடம் சொல்லி கண்ணனை போக சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை அடித்த ரௌடிகளை அடிக்கும் கதிர், தனத்திடம் சொல்லி கண்ணனை போக சொல்லும் மூர்த்தி - இன்றைய
கண்ணனை அடித்த ரௌடிகளை அடிக்கும் கதிர், தனத்திடம் சொல்லி கண்ணனை போக சொல்லும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை அடித்த ரௌடிகளை அடிக்கும் கதிர், தனத்திடம் சொல்லி கண்ணனை போக சொல்லும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கண்ணனை அடித்த அடியாட்களை மூர்த்திக்கு தெரியாமல் அடிக்கிறார். பின் தனம் கண்ணனை பார்த்துக் கொள்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கண்ணனிற்கு கஷாயம் எல்லாம் வைத்து கொடுத்து பார்த்துக் கொள்கிறார். அப்போது மீனா ஐஸ்வர்யாவை கிண்டல் செய்வது போல பேச தனம் இதான் உனக்கு கிண்டல் செய்யும் நேரமா என கேட்கிறார். ஓடி போய் கல்யாணம் பண்ண தெரியுது 4 பேர் வந்தால் அடிக்க தெரியாதா என மீனா கேட்க, நல்ல கேளுங்க என ஐஸ்வர்யா சொல்கிறார். என் அப்பா திருடியதாக சொல்ல, இல்லை என எதிர்த்து பேசாமல் காசை கொடுத்துவிட்டு வந்திருக்கிறான் என மீனா சொல்கிறார்.

குடித்துவிட்டு கண்ணம்மாவிடம் தகராறு செய்யும் பாரதி, அம்மா நினைப்பாக இருக்கும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

நான் அப்பாவே போலீசில் புகார் செய்வோம் என சொன்னேன் ஆனால் கேட்கவில்லை என ஐஸ்வர்யா சொல்கிறார். அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைய, கதிர் மாமா அடித்ததற்கு கண்ணனை ஏன் அவங்க அடிக்க வேண்டும் என ஐஸ்வர்யா கேட்க, முல்லை கோவப்பட்டு கண்ணனை அடித்ததை மட்டும் பேசு அவங்களை ஏன் அடிக்கவில்லை என கேட்காதே என சொல்கிறார். பின் தனம் கண்ணனை சென்று படுக்க சொல்ல, நீங்க இப்படி என்னிடம் பேசி எத்தனை நாள் ஆகிவிட்டது அதுவே போதும் எனக்கு என சொல்கிறார்.

பின் கதிர் கண்ணனை அடுத்தவனை தேடி செல்கிறார். மூர்த்தி வேலை நடக்கும் இடத்தில் கதிரை தேடி வர, அங்கே கதிர் இல்லை. அப்போது கதிர் வர எங்கே போன என மூர்த்தி கேட்கிறார். கடைக்கு போனேன் என சொல்ல, நான் கடையில் இருந்து தான் வருகிறேன் என சொல்கிறார். நீ வேற கடைக்கு போனேன் என சொல்ல நீ எங்கே போயிருப்ப என எனக்கு தெரியும், ஏற்கனவே நீ அடித்ததால் தான் கண்ணன் அடிவாங்கி உக்காந்திருக்கான் மறுபடியும் நீயும் இப்படி செய்யாதே என சொல்கிறார்.

சரி இனிமேல் நான் செய்யமாட்டேன் என கதிர் சொல்லி நடந்ததை நினைத்து பார்க்கிறார். அந்த அடியாட்களை பின் தொடர்ந்து கதிர் அடித்து நொறுக்கி இருக்கிறார். மேலும் கடை பையனிடம் யாருடைய தம்பி கிட்ட இனிமேல் அவன் மீது கை வைத்தால் சும்மா விடமாட்டேன் என சொல்கிறார். பின் கண்ணன் வீட்டில் இருக்க மீனா இனிமேல் இவங்க இங்கே தான் இருக்கப்போறாங்களா என கேட்கிறார். பின் கண்ணன் கயலை கொஞ்சிக் கொண்டிருக்க, மூர்த்தி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்! அரசு நடவடிக்கை!!

தனம் வந்து கண்ணனிற்கு காலையில் இருந்தது விட வலி குறைந்துவிட்டது என சொல்ல, மூர்த்தி எல்லாம் முடிந்துவிட்டது அப்பறம் என்ன என கேட்கிறார். கண்ணன் நாம கிளம்பலாம் என சொல்ல, ஐஸ்வர்யா அவரை அழைத்து கொண்டு செல்கிறார். கண்ணன் வருத்தத்துடன் வெளியே சென்று தனத்தை பார்க்கிறார். தனம் என்ன சொல்வது என தெரியாமல் இருக்க, போயிட்டு வரேன் என கண்ணன் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here