நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா - இன்றைய
நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
நெஞ்சுவலியால் துடிக்கும் தனத்தின் அம்மா, தனத்தை அழைத்து செல்ல வரும் ஜெகா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் அவரது அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லை என கேள்விப்பட்டு வருத்தப்படுகிறார். கடையில் பணத்தை எடுத்தவனை ஜீவா கதிர் சேர்ந்து அடித்துவிடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஜனார்த்தனன் கடையில் பணத்தை எடுத்தவனை பார்த்த ஜீவா மற்றும் கதிர் நீ தான பணத்தை எடுத்தாய் என கேட்கிறார்கள். நான் பணத்தை எடுக்காமல் இருந்தால் அவனும் அந்த பொண்ணும் சேர்ந்து எடுத்திருப்பார்கள் என சொல்ல கதிர் அவரை அடித்துவிடுகிறார். உடனே கோவப்பட்ட அவன் உங்களை சும்மா விடமாட்டேன் என சொல்லி கிளம்புகிறார். பின் தனத்தின் அம்மா தனத்தை நினைத்து கவலையுடன் கீரை ஆய்ந்து கொண்டிருக்க அப்போது வந்த கஸ்தூரி என்ன அதை கீரை எல்லாம் கிழே போடுறீங்க என கேட்கிறார்.

எல்லாம் தனம் நினைத்து கவலை தான் என சொல்ல அவள் அங்கே நன்றாக தான் இருக்கிறாள் என தனம் அம்மா சொல்கிறார். அப்போது தனம் அம்மாவிற்கு நெஞ்சு வலி வர அவர் வலியால் துடிக்கிறார். ஜெகா ஓடி வந்து தண்ணீர் கொடுக்க, மருத்துவமனை போவோம் என சொல்கிறார். ஆனால் தனம் அம்மா முடியாது என எனக்கு தனத்தை வர சொல்லு அவள் வராமல் நான் எதுவும் சாப்பிடமாட்டேன் என சொல்கிறார். அவள் இங்கே வந்த பின்னாடி நான் மருத்துவமனைக்கு வருகிறேன் என சொல்கிறார்.

லக்ஷ்மியை பார்க்க வரும் கண்ணம்மா, பாரதி கண்ணம்மாவை காரில் அனுப்ப சௌந்தர்யா செய்த திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

அப்போது கஸ்தூரி தனத்தின் அம்மா நடிப்பதை கண்டுபிடித்துவிட்டார். பின் ஜெகா மூர்த்தியை அழைத்து தனியாக பேசுகிறார். அம்மாவிற்கு நெஞ்சுவலி வந்துவிட்டது என சொல்ல மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். எதுவும் பயப்படுவது போல இல்லை. அம்மாவிற்கு மனகவலை தான் அம்மாவிற்கு தனத்தை வீட்டிற்கு வர சொல்லி 2 3 நாட்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறார். இதை தனத்திடம் சொன்னால் அவள் ஒப்புக் கொள்ளமாட்டாள். நீ தான் எதாவது செய்து தனத்தை கூட்டிக் கொண்டு வர வேண்டும் என சொல்கிறார்.

தனத்தை கூட்டிக் கொண்டு வந்து அம்மாவை பார்த்துவிட்டு திருமண வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன் என சொல்கிறார். ஆனால் ஜெகா பிரசவத்திற்கு வராததை ஊரில் அனைவரும் தப்பாக பேசுகிறார்கள் என சொல்கிறார். தனம் அங்கே வந்தால் தம்பிகள் வருத்தப்படுவார்கள் என சொல்கிறார். அடிக்கடி வந்திருந்தால் இப்படி எதுவும் நடக்காது ஆனால் அப்படி இல்லையே என சொல்ல, மூர்த்தி நான் தனத்தை அழைத்து வந்து விடுகிறேன் என சொல்கிறார். பின் மூர்த்தி ஜெகா தனம் வீட்டிற்கு வர குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

திருப்பதி எழுமையான் திருக்கோவிலில் கேரளா நிபுணர்கள் ஆய்வு – தேவஸ்தானம் அறிவிப்பு!!

கதிர் வந்து அம்மா எப்படி இருக்காங்க என கேட்க, நன்றாக இருக்கிறார் என சொல்கிறார். பின் கயல் பற்றி பேசிவிட்டு அம்மா எப்படி இருக்கிறார் என தனம் கேட்க, அம்மாவிற்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டது என சொல்கிறார். அதை கேட்டு தனம் கதிர் முல்லை பயப்படுகிறார்கள். என்னாச்சு என தனம் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை எல்லாம் சரியாகிவிடும் என ஜெகா சொல்கிறார்.அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல் நான் வந்து பாக்கிறேன் என தனம் சொல்ல, நீ அங்கே வந்து 4 5 நாட்கள் இருக்க வேண்டும் என அம்மா நினைப்பதாக சொல்கிறார்.

நீங்க இல்லாமல் நாங்க எப்படி இருப்பது என கதிர் கேட்க, மூர்த்தி அத்தைக்கு முடியாமல் இருக்கும் போது மகள் இருக்க வேண்டும் என நினைப்பாங்க என சொல்கிறார். அம்மாவிற்காக நீ வந்து இருக்க வேண்டும் என சொல்ல, தனத்தை கிளம்ப சொல்கிறார் ஜெகா, அக்கா இல்லாமல் நாங்க எப்படி இருப்போம் என முல்லை கேட்க, நீங்க சொல்வது புரிகிறது ஆனால் அம்மாவிற்கும் மீனாவிற்கு சரி வரவில்லை அம்மாவால் இங்கே இருக்க முடியவில்லை என சொல்கிறார். மூர்த்தி 3 நாள் தான போய்ட்டு வா என சொல்கிறார்.

அத்தை எத்தனை நாள் இங்கே வந்து இருந்தார்கள் அது போல நாமளும் போக வேண்டும் என சொல்லி முல்லையை ட்ரெஸ் எடுத்து வர சொல்கிறார். இப்பவே போக வேண்டுமா என தனம் கேட்க, அப்பறம் நான் வேண்டாம் என சொல்லுவேன் என மூர்த்தி சொல்கிறார். கதிர் இப்பவே போக வேண்டுமா என கேட்க, ஆமாம் என மூர்த்தி சொல்கிறார். தனம் எனக்கும் அம்மாவை பார்க்க வேண்டும் என தான் இருக்கிறது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here