வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் - இன்றைய
வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
வீட்டிற்கு பொருள்கள் வாங்கும் கண்ணன் ஐஸ்வர்யா, ரோட்டில் இருவரையும் பார்த்து வருத்தப்படும் மூர்த்தி தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்க செல்கின்றனர். தனமும் மூர்த்தியும் ஹாஸ்பிடல் சென்று வரும் போது இருவரையும் பார்க்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி சாப்பிடுகின்றனர். மீதமான சாம்பாரை வைக்க பாத்திரம் இல்லாமல் இருக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கலாம் என சொல்கிறார். செலவு அதிகமாகுமே என கண்ணன் சொல்ல அதெல்லாம் ஆகாது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவதை விட குறைவான செலவு தான் ஆகும் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

லட்சுமி நினைப்பாக இருக்கும் கண்ணம்மா, விஷ மாத்திரைகளை சாப்பிடும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின்னர் இருவரும் பொருள்கள் வாங்க கடைக்கு செல்கின்றனர். தனமும் மூர்த்தியும் ஹாஸ்பிடல் செல்ல தயாராகுகின்றனர். அப்போது தனத்தின் அம்மா இவள் அவளை பார்த்துக் கொள்ளவே மாட்டேங்கிறாள் எப்படி குழந்தையை வளர்ப்பாளோ என கேட்க, இப்போ கயல் பாப்பாவை எப்படி எல்லாரும் சேர்ந்து வளர்க்கிறோம் அது போல வளர்ப்போம் என சொல்கிறார் மூர்த்தி. பின்னர் தனம் வர இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.

கண்ணனும் ஐஸ்வர்யாவும் கடையில் தேவையான பொருள்களை வாங்குகின்றனர். அப்போது கண்ணன் இதுவரை கடைக்கு சென்று பொருள்களே வாங்கியது இல்லை, விலை எதுவும் தெரியாமல் இருக்கிறார். எந்த பொருள் குறைந்த விலையில் இருக்கிறது என பார்த்து எடுக்கிறார். ஐஸ்வர்யா விலை அதிகமாக வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். ஆனால் கண்ணா விலை அதிகமாக வந்துவிடும் என பயத்தில் இருக்கிறார்.

தமிழக ஆசிரியர்கள் கவனத்திற்கு – அரசின் அதிரடி உத்தரவு!

பின்னர் அனைத்து பொருள்களையும் வாங்கி விட்டு பில் சரியான அளவில் வந்து விடுகிறது. இருவரும் பொருள்களை தூக்கிக் கொண்டு செல்ல அங்கே தனமும் மூர்த்தியும் வருகின்றனர். இருவரும் இப்படி பொருள்களுடன் நிற்பதை பார்த்து மூர்த்தி கோபப்படுகிறார். தனத்திற்கு தெரியாமல் கண்ணன் பொருள்களை மறைத்து வைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!