கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி சண்டையிடும் மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி சண்டையிடும் மல்லி - இன்றைய
கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி சண்டையிடும் மல்லி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லி சண்டையிடும் மல்லி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் முருகன் வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்டு மல்லியும், கஸ்தூரியும் சண்டை போடுகின்றனர். ஐஸ்வர்யா கண்ணனை வெளியே அனுப்புமாறு சொல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், லட்சுமி அம்மா கண்ணனை காணாமல் இரவு தூக்கம் இல்லாமல் புலம்புகிறார். பின்னர் கண்ணனும் ஐஸ்வர்யாவும் சந்தோசமாக இருக்கின்றனர். இப்போ தான் நிம்மதியாக இருக்கு என கண்ணன் சொல்கிறார். ஆனால் இது நிரந்தரமில்லை , கொஞ்ச நாள் இருப்போம் அடுத்து வேற எதாவது பார்ப்போம் என்று சொல்ல, எங்க வீட்டில் கோவமெல்லாம் குறைந்து நாம போயிருவோம் என்று சொல்கிறார்.

நான் வேலைக்கு போறேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறார். நீ படிக்க வேண்டும் என்று தான் உன் வீட்டில் ஆசைப்படுகிறார்கள். நீ படி மாமா நான் வேலைக்கு போறேன் என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. அதன் பின்னர் கண்ணன் பின் பக்கம் வீட்டு வாசலில் கண்ணன் நிற்க முல்லை அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அண்ணி என்று கூப்பிட எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிடுகிறார். பின்னர் தனம் அந்த பக்கம் வர முல்லை அதை தடுக்கிறார். ஆனால் கேட்காமல் தனம் வெளியே செல்ல அவரும் கண்ணனை பார்க்கிறார்.

கண்ணம்மா பற்றி பாரதியிடம் சொல்லி ஏற்றிவிடும் வெண்பா, அஞ்சலியை கொல்ல திட்டம் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட, மூர்த்தி அந்த பக்கம் வருகிறார். அவர் கண்ணனை பார்த்துவிட கூடாது என முல்லை சமாளிக்க மூர்த்தி கேட்காமல் செல்கிறார். ஆனால் அங்கே கண்ணன் இல்லை. பின்னர் பிரசாந்த் கோவம் குறையாமல் இருக்க நான் நல்ல பொண்ண பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று மல்லி சமாதானம் படுத்துகிறார். அப்போது கஸ்தூரி வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் உன் அம்மா அப்பா தங்க வைத்துள்ளார்கள் என்று சொல்கிறார்.

‘பிசாசு 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அஜ்மல் – மிஷ்கினின் அடுத்த படம்!

கண்ணனும் ஐஸ்வர்யாவும் சந்தோசமாக இருக்க, மல்லி கஸ்தூரி பிரசாந்த் கோபத்துடன் வருகின்றனர். பிரசாந்த் என் புள்ளை தான் அவனுக்கு நானும் எனக்கு அவன் மட்டும் தான் இருக்கான் அவனுக்கு துரோகம் பண்ண ஒருத்திய எப்படி வீட்டிற்குள் வைக்கலாம் என சண்டை போடுகின்றனர். முருகன் அவர்கள் பாவம் என்று சொல்ல , வீட்டை விட்டு ஓடுன நடு ரோடில் தான் நிற்க வேண்டும் என கூறுகிறார். உடனே ஐஸ்வர்யாவை அடித்து வெளியே போக சொல்கிறார். பின்னர் ஐஸ்வர்யா துணிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கண்ணனை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். பிரசாந்த் இருவரையும் கோபத்துடன் பார்க்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!