
கண்ணனை நினைத்து வருத்தப்படும் ஜீவா, கதிர், பயங்கர கோவத்தில் பிரசாந்த் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை நினைத்து தனம், ஜீவா, கதிர் கவலைப்படுகின்றனர். பிரசாந்தை நினைத்து கதிர் பயப்படுகிறார். பிரசாந்த் மதுரையில் கல்யாணம் ஏற்பாடு எல்லாம் பண்ணியாச்சு அங்கே என்ன சொல்வது என்று பிரசாந்த் கோபப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை வீட்டை விட்டு அனுப்பியதால் அவன் எங்கே போவான் என்று தனம் மூர்த்தியிடம் அழுது புலம்புகிறார். மூர்த்தி அவன் கல்யாணம் பண்ணிட்டான்ல எல்லாம் பார்த்துப்பான் இனிமேல் அவனை பற்றி பேசாதே என்று சமாதானம் சொல்லி தனத்தை படுக்க சொல்கிறார். ஜீவா கண்ணனை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்க மீனா அங்கே வருகிறார்.
நம்ம காதலித்து தான கல்யாணம் பண்ணோம் நம்மளை வெளியே அனுப்பியிருந்த என்ன செய்திருப்போம் என்று கேட்க, நாம படித்து முடித்துவிட்டோம் வெளியே போன வேலை கிடைக்கும் ஆனால் கண்ணனுக்கு என்ன வயசு ஆகுது, வெளியே போய் என்ன செய்கிறானோ என்று வருத்தப்படுகிறார். அதெல்லாம் நல்ல இருப்பான் என மீனா தைரியம் சொல்கிறார்.
கதிர், முல்லையிடம் கண்ணன் கோபித்துக் கொண்டு வெளியே போய் நண்பன் வீட்டில் இருப்பான் என்று நினைத்தேன் இப்படி, கல்யாணம் செய்வான் என்று நினைக்கவே இல்லை என்று கூறுகிறார். கோவிலில் பிரசாந்த் கண்ணனை அடித்தான், நான் இருந்ததால் தடுத்தேன். மீண்டும் அவன் என்ன செய்வான் கண்ணன் எப்படி சமாளிக்க போறான் என்று கவலைப்படுகிறார். கண்டிப்பாக அவன் மதுரையில் எல்லா ஏற்பாடும் செய்திருப்பான். அவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று கோவத்தில் கண்ணனை என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று அழுகிறார்.
தமிழகத்திற்கு மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை – மத்திய அரசு ஒதுக்கீடு!
முல்லை கதிருக்கு எதுவும் நடக்காது என சமாதானம் கூறுகிறார். பின்னர் பிரசாந்த் கண்ணன் மீது சரியான கோவத்தில் இருக்கிறார். கஸ்தூரி ஐஸ்வர்யா இப்படி பண்ணுவானு நினைக்கவே இல்லை என்று சொல்கிறார். அந்த பொண்ணு சொல்லிட்டே இருந்துச்சு நீங்க தான் கேட்கவில்லை என்று ஜனா சொல்கிறார். மல்லி இதை என்னிடம் சொல்லாதது பெரிய தப்பு, எனக்கு தெரிந்தால் இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பேன் என்று சொல்ல, நடந்து முடிந்ததை பற்றி பேசாமல் இனி நடக்க போகிறதை பேசுங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.