தொழிலை முன்னேற்ற ஐடியா சொல்லும் முல்லை, புது பார்லருக்கு பெயர் வைக்க சண்டையிடும் மீனா – இன்றைய எபிசோட்!

0
தொழிலை முன்னேற்ற ஐடியா சொல்லும் முல்லை, புது பார்லருக்கு பெயர் வைக்க சண்டையிடும் மீனா - இன்றைய எபிசோட்!
தொழிலை முன்னேற்ற ஐடியா சொல்லும் முல்லை, புது பார்லருக்கு பெயர் வைக்க சண்டையிடும் மீனா - இன்றைய எபிசோட்!
தொழிலை முன்னேற்ற ஐடியா சொல்லும் முல்லை, புது பார்லருக்கு பெயர் வைக்க சண்டையிடும் மீனா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை தொழில் முன்னேற புது ஐடியா ஒன்றை சொல்கிறார். கதிர் அதை கேட்டு சரி என சொல்கிறார். மறுபக்கம் பார்லர் பெயர் வைப்பது பற்றி மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு கொள்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை தொழிலை முன்னேற்ற புது ஐடியா ஒன்றை சொல்கிறார். காலையில் எல்லாரும் அலுவலகம் பள்ளிக்கு செல்ல சாப்பாடு செய்வார்கள் நாம அதை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள பெண்களுக்கு உதவியாக இருக்கும் என சொல்ல, கதிர் மதியம் சாப்பிடுவதை காலையில் வாங்குவார்களா என கேட்கிறார். அதெல்லாம் வாங்குவார்கள் வீட்டில் அப்படி தான செய்து கொடுக்கிறார்கள் என முல்லை சொல்ல சரி இது நல்ல ஐடியா தான் நாளை கடைக்கு வரும் கஸ்டமரிடம் சொல்வோம் என சொல்கிறார்.

மறுபக்கம் கதிர் காலையில் கடை திறக்க கஸ்டமர் வந்து டீ கேட்கின்றனர். கதிர் மிகவும் ஸ்டைலாக போட முல்லை அதை பார்த்து ரசிக்கிறார். முல்லை தனது அப்பாவிடம் நன்றாக இருப்பதாக சொல்ல, நானே சாப்பாடு விற்குமா என்ற கவலையில் இருக்கேன் என சொல்கிறார். பின் முல்லை டீ கொடுத்துவிட்டு புது திட்டத்தை பற்றி சொல்கிறார். புதினா சாதம், கேரட் சாதம் அது போல காலையில் டிப்பன் பாக்சில் கொடுப்போம் என சொல்ல, கஸ்டமர் சரி என சொல்கிறார். பின் தனம் அம்மா போன் செய்ய தனத்திடம் எல்லாரும் நன்றாக இருக்காங்களா என கேட்கிறார்.

தனம் நன்றாக இருப்பதாக சொல்ல, பார்வதி மாப்பிள்ளைக்கு உடம்பு சரியாகிவிட்டதா என கேட்கிறார். சரியாகிவிட்டது. அவங்க இப்போது கடைக்கு போக கிளம்பிட்டாங்க என சொல்ல, இன்னும் கொஞ்ச நாள் மாப்பிள்ளையை ரெஸ்ட் எடுக்க சொல்லலாமே என சொல்கிறார். பின் தனத்தின் அம்மா பேரன் கண்ணுக்குள்ளவே இருக்கான் கொண்டு வந்து காட்டிவிட்டு போ என சொல்ல, எங்கே இங்கே வேலை அதிகமாக இருக்கிறது ஐஸ்வர்யா பார்லர் தொடங்க இருப்பதாக சொல்கிறார். உடனே தனத்தின் அம்மா இப்போ வந்தவள் எல்லாம் புத்திசாலித்தனமாக பிழைக்கிறாள் என சொல்கிறார். உடனே தனம் போனை வைத்து விடுகிறார்.

பின் ஐஸ்வர்யா புது பார்லருக்கு பெயர் பலகை தயார் செய்து கொண்டிருக்க மீனா பின் பக்கம் இருந்து கூப்பிடுகிறார். ஆனால் ஐஸ்வர்யா என்ன என கேட்காமல் இருக்க கோவப்பட்ட மீனா வந்து என்ன என கேட்கமாட்டியா என கேட்கிறார். பின் உள்ளே வந்து மீனா ஐஸ்வர்யாவிடம் கூப்பிடுவது கேட்கவில்லையா என கேட்க, ஐஸ்வர்யா தண்ணீர் தெளிக்காதீங்க என சொல்கிறார். தனம் வந்து என்ன சத்தம் என கேட்க, மீனா நான் கூப்பிடுவது கேட்காமல் இருப்பதாக சொல்கிறார். தனம் என்ன செய்கிறாய் என கேட்க போர்ட் தயார் செய்வதாக சொல்கிறார். உனக்கு போர்ட் வேண்டும் என்றால் ஜீவாவிடம் சொல்லி தயார் செய்து இருக்கலாமே என சொல்கிறார்.

நகை அடகு வைத்து பணம் ஏற்பாடு செய்யும் பாக்கியா, இனியாவை சந்திக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

இப்படி சார்ட்டில் செய்தால் மழையில் நனைந்துவிடும் என சொல்ல, ஜீவா என்ன வேலை இல்லாமல் இருக்கானா என கேட்கிறார். பின் தனம் இதுவும் நம்ம பார்லர் தான என சொல்ல, இவள் தான் ஐஸ்வர்யா என பெயர் வைத்து இருக்காளே பாண்டியன் பார்லர் என வைத்திருக்கலாம் என சொல்கிறார். உடனே ஐஸ்வர்யா பார்லருக்கு ஆம்பளை பெயர் வைத்தால் யார் வருவார் என கேட்க, அப்போ அத்தை பெயர் லட்சுமி என வைத்திருக்கலாமே என சொல்கிறார். பின் தனம் பெயர் பற்றி எல்லாரும் சேர்ந்து முடிவு செய்யலாம் என சொல்கிறார்.

மறுபக்கம் முல்லை கதிர் சாப்பாடு தயார் செய்ய மல்லி ஆளே இல்லாத கடைக்கு எதற்கு இப்படி எல்லாம் ரெடி ஆகுறீங்க என சொல்ல, முல்லை மல்லியை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். பின் கடைக்கு 4 பேர் சாப்பிட வர கதிர் முல்லை சந்தோசப்படுகின்றனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு வர பின் கதிர் பணம் கேட்கிறார். ஆனால் அவர்கள் கணக்கில் வைத்து கொள்ளுங்கள் என சொல்கிறார். மல்லி அதை பார்த்து நக்கலாக சிரிக்கிறார். என்னை பேசாதே பேசாதே என சொன்னீங்க இப்போ பேசுங்க கடைசியில் நான் சொன்ன வழிக்கு வாங்க என சொல்ல முல்லை மல்லி சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஐஸ்வர்யா பார்லர் வேலைகளை கவனித்து கொண்டிருக்க மீனா இவள் தொல்லை தாங்க முடியவில்லை என நினைக்கிறார். பின் தனத்திடம் மீனா பேச ஐஸ்வர்யாவை தனம் நக்கலடிக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here