புது வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லும் கண்ணன், தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!

0
புது வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லும் கண்ணன், தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை - இன்றைய எபிசோட்!
புது வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லும் கண்ணன், தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை - இன்றைய எபிசோட்!
புது வேலை பற்றி குடும்பத்திடம் சொல்லும் கண்ணன், தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் புது வேலையின் முதல் நாளில் என்னவெல்லாம் நடந்தது என்பது பற்றி குடும்பத்தினரிடம் சொல்கிறார். பின் முல்லை தொழிலை முன்னேற்ற புது திட்டங்களை தீட்டுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கடையில் மதிய சாப்பாடு மிஞ்சி இருக்க உடனே மல்லி அவர்களை மட்டம்தட்டி பேசுகிறார். பின் இந்த சாப்பாட்டை என்ன செய்ய இருக்கீங்க என கேட்க இன்னைக்கு 20 பேருக்கு சாப்பாடு செஞ்சீங்களா அப்போ 15 பேர் சாப்பாட்டை என்ன செய்வீங்க என கேட்கிறார். கடை திறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இப்படி பணத்தை எல்லாம் வீணாக்கி இருக்கீங்க நாளைக்கு கடையை மூடிவிட்டு என்னுடன் மதுரைக்கு வாங்க என சொல்ல, முல்லை அம்மா அவங்க நன்றாக இருக்க கூடாது என நாம ஏன் நினைக்க போறோம் என முல்லை அம்மா சொல்கிறார்.

பின் முல்லையிடம் இன்னும் 5000 ரூபாய் இருக்கிறதா அதையும் காலி செய்துவிட்டு என்ன செய்ய இருக்கீங்க என்ன முல்லை கேட்கிறார். பின் என்ன கதிர் நாளைக்கு கிளம்பி வரீங்களா என மல்லி கேட்க கதிர் இன்னும் 5000 ரூபாய் இருக்கிறதா அது போதும் என சொல்கிறார். அதுவும் காலி ஆனா பின் தான் திருந்துவீங்க என மல்லி சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் வேலையாக இருக்க மீனா உடனே கிண்டல் செய்கிறார். அப்போது தனமும் மூர்த்தியும் கடையில் இருந்து வர கண்ணன் எங்கே என மூர்த்தி கேட்கிறார். கண்ணன் இன்னும் வரவில்லை என சொல்ல 5 மணிக்கு எல்லாம் பேங்க் முடிந்துவிடும் அப்போ இவ்வளவு நேரம் ஏன் ஆகிறது என மூர்த்தி கேட்க ஐஸ்வர்யாவை போன் செய்ய சொல்கிறார்.

அந்த நேரம் பார்த்து கண்ணன் வர மூர்த்தி ஏன் இவ்வளவு நேரம் என கேட்கிறார். கண்ணன் இப்போது தான் விட்டார்கள் என சொல்ல சும்மா சொல்லாதே நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வந்தியா என மூர்த்தி கேட்கிறார். பின் கண்ணன் இன்று முதல் நாள் என்பதால் வேலை அதிகமாக இருந்ததாக சொல்ல சரி என மூர்த்தி சொல்கிறார். பின் வேலை பற்றி கேட்க கண்ணன் எல்லாம் நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் மூர்த்தி கண்ணனை சாப்பிட வர சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா நாளை மறுநாள் நல்ல நாள் அன்று பார்லர் திறக்கலாம் என இருப்பதாக சொல்கிறார். தனம் மூர்த்தியிடம் என்ன செய்யலாம் என கேட்க பிரச்சனை எதுவும் இல்லாமல் தொடங்கினால் சரி தான் என மூர்த்தி சொல்கிறார்

பின் கதிர் முல்லையும் கடையில் இருந்து வர முல்லை எனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார். பணம் எல்லாத்தையும் செலவு செய்துவிட்டு அவங்க சொன்னது போல இருக்க போறோமோ என பயமாக இருக்கிறது என சொல்ல, கதிர் அப்படியே நடந்தாலும் நான் உன்னை விடமாட்டேன் என சொல்கிறார். இருந்தாலும் வீட்டில் இருந்து நாம சும்மா தான வந்தோம் என சொல்ல, கதிர் நேற்றைவிட இன்று லாபம் வந்திருக்கிறது அது போல நாளைக்கும் வரும் என சொல்ல முல்லை நம்பிக்கை வந்தது போல இருக்கிறார். பின் முல்லையும் கதிரும் வீட்டிற்கு வந்து சாப்பிடுகின்றனர்.

இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

அப்போது கதிர் நம்ம கடை சாப்பாடா இது பரவாயில்லை இப்போ எல்லாம் நீ நன்றாக சமைக்கிறாய் என சொல்கிறார். அப்போது முல்லை ஹோட்டலை எப்படி முன்னேற்றுவது என யோசிக்க கதிர் கிண்டல் செய்கிறார். பின் கதிர் ஹோட்டலில் என்ன செய்வது என கேட்க, எதாவது வித்தியாசமாக சமைக்க வேண்டும் என சொல்கிறார். அப்போது முல்லை சாப்பிட வருபவர்களுக்கு பாயிண்ட் போல கொடுத்தால் பின் சாப்பிட வருபவர்கள் அதிகம் வருவார்கள் என சொல்ல அதற்கு நாம விளம்பரம் செய்ய வேண்டும் என சொல்கிறார், அதற்கு காசு நிறையா ஆகும் என கதிர் சொல்ல, இதெல்லாம் பெரிய ஹோட்டலில் தான் சரியாக வரும் என சொல்கிறார். பின் கதிர் எல்லாருக்கும் இலவசமாக சாப்பாடு கொடுத்தால் என்ன என கேட்க அதுவும் நஷ்டம் ஆகும் என சொல்கிறார். சாப்பாடு ஐட்டம் குறைக்கலாம் என சொல்ல கதிர் இப்படியே யோசிக்காமல் தூங்கு என சொல்கிறார். பின் தொழில் பற்றி புது ஐடியாவை முல்லை சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!