கடையில் ஆரம்பித்த ஐஸ்வர்யா மீனா சண்டை, அறிவுரை சொன்ன கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கடையில் ஆரம்பித்த ஐஸ்வர்யா மீனா சண்டை, அறிவுரை சொன்ன கண்ணன் - இன்றைய
கடையில் ஆரம்பித்த ஐஸ்வர்யா மீனா சண்டை, அறிவுரை சொன்ன கண்ணன் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கடையில் ஆரம்பித்த ஐஸ்வர்யா மீனா சண்டை, அறிவுரை சொன்ன கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா மீனாவிற்கு சாப்பாடு கொண்டு செல்ல கடையில் வைத்து வாக்குவாதம் நடக்கிறது. மறுபக்கம் கண்ணன் இந்த விஷயத்தை கேள்வி பட்டு ஐஸ்வர்யாவை பொறுமையாக இருக்க சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடை திறக்க இருப்பதை நினைத்து பதட்டமாக இருப்பதாக சொல்ல முல்லை அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் அங்கு வந்த கண்ணன், அண்ணன் என்ன வேலைக்கு போகலையா என கேட்க இனிமேல் இவங்க வேலைக்கு எல்லாம் போகமாட்டார் என முல்லை சொல்கிறார். முதலாளியாக இருக்க போகிறார் என சொல்ல, கண்ணன் என்ன சொல்றீங்க என கேட்கிறார். முல்லை ஹோட்டல் தொடங்க இருப்பதாக சொல்ல அன்னைக்கு நீ சாப்பிட்டீயே நன்றாக இருந்ததாக சொன்னாய் அது போல சாப்பாடு நன்றாக இருக்கும் என முல்லை சொல்கிறார்.

பின் கண்ணன் நீங்க வெளியே வந்ததுடீங்க தனம் அண்ணி கடைக்கு சென்றுவிடுகிறார். ஐஸ்வர்யாவும் மீனாவும் சமைத்ததை சாப்பிடவே முடியவில்லை. இனிமேல் உங்க கடையில் வந்து சாப்பிடுகிறேன் என சொல்லிவிட்டு கண்ணன் கிளம்புகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா கடைக்கு சாப்பாடு கொண்டு செல்கிறார். அப்போது ஜீவா 1 மணி தான் ஆகிறது என சொல்ல வீட்டில் தொல்லை செய்ய ஆள் இல்லை அதனால் எல்லா வேலையும் சீக்கிரமாக முடிந்துவிட்டதாக சொல்கிறார். பின் மீனா அதை கேட்டு கோபப்படுகிறார். ஐஸ்வர்யா சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்கிறது என சொல்ல சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் மீனா ஜீவாவிடம் பார்த்தியா என்னை கடுப்பேத்த சாப்பாடு கொண்டு வந்திருப்பதாக சொல்ல ஐஸ்வர்யாவிடம் மீனா, கயல் என்ன செய்கிறாள் சாப்பிட்டாளா என கேட்கிறார். ஜீவா, மீனாவின் நடிப்பை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் மீனா பில் போட தெரியாமல் இருக்க ஐஸ்வர்யா வந்து பில் போடுகிறார். மீனா வந்ததும் நான் போடுகிறேன் என சொல்ல ஆனால் ஐஸ்வர்யாவை செய்ய வேண்டாம் என மீனா சொல்கிறார். ஐஸ்வர்யா ஒரு பில்லை மட்டும் போடுகிறேன் என சொல்ல, ஆனால் மீனா முடியாது என சொல்கிறார். ஜீவா வந்து ஒரு பில் தான என சொல்ல, உன் வேலையை நீ பார்த்தால் போதும் என மீனா சொல்கிறார்.

இங்கேயும் சண்டை போட தொடங்கி விட்டீர்களா என கேட்க, ஐஸ்வர்யா நான் எதுவும் பேசவில்லை லேட் ஆகியதால் பில் போடுகிறேன் என சொல்கிறார். ஜீவா ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக பேச இதே கண்ணனாக இருந்தால் அவனுடைய பொண்டாட்டிக்கு தான் ஆதரவாக இருப்பான் என சொல்கிறார். மீனா நான் வீட்டிற்கு போறேன் என சொல்ல, ஐஸ்வர்யா நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்று தனத்திடம் மீனா செய்ததை சொல்கிறார். பின் மூர்த்தி ஜீவாவை நினைத்தால் கவலையாக இருப்பதாக சொல்ல, ஜீவாவும் மீனாவும் கடையில் இருந்து வருகின்றனர்.

மீனா கடையில் வேலை செய்ததால், அசதியாக இருப்பதாகவும், எவ்வளவு வேலை இருக்கிறது கடையில் என சொல்கிறார். பின் கண்ணன் இந்த வேலை எல்லாம் நீங்க தான் செய்தீர்களா என கேட்க, மூர்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு வேலை செய்தது போல இருக்கிறதே என கேட்கிறார். ஜீவா இவ வராமல் இருந்தால் கூட நானே எல்லாம் செய்திருப்பேன் இவளுக்கு பதில் சொல்லி நான் 2 வேலை செய்வது போல இருந்ததாக சொல்கிறார். பின் மீனா நாளையில் இருந்து கடைக்கு போக மாட்டேன் என சொல்கிறார். தனம் நினைத்தேன் என சொல்ல, ஐஸ்வர்யா என்னால் இவர்களுடன் வீட்டில் இருக்க முடியாது என சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா நாளையில் இருந்து கடைக்கு போகிறேன் என சொல்ல, ஜீவா அண்ணி எல்லா வேலையும் அண்ணி நன்றாக பார்த்துக் கொள்கிறார் என சொல்கிறார். அண்ணி எல்லாரையும் சமாளிக்கிறார் என சொல்கிறார். பின் மூர்த்தி இப்படி ஆளு ஆளுக்கு சொல்வதை விட்டு விட்டு நானே கடைக்கு போகலாம் என நினைக்கிறேன் என சொல்கிறார். தனம் ஒரு மாசத்துக்கு எங்கையும் போக வேண்டாம் என சொல்கிறார். ஐஸ்வர்யா அதான் நான் வரேன் என சொல்ல, எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என தனம் சொல்கிறார். பின் கண்ணன், ஐஸ்வர்யா இப்படி சண்டை போடுவதை நினைத்து வருத்தமாக இருக்கிறார்.

கோபியை பிரிய முடிவு செய்த பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

நீ குட்டி அண்ணியிடம் பொறுமையாக போனால் என்ன என கேட்க, அவங்க நியாயமாக நடந்து கொள்கிறார்களா என கேட்கிறார். என்ன இருந்தாலும் அவங்க வயதில் பெரியவர் நீ தான் பொறுத்து போ என சொல்ல, ஆனால் ஐஸ்வர்யா முடியாது என சொல்கிறார். முல்லை அண்ணி மீனா அண்ணிக்கு பிரச்சனை இல்லை என சொல்ல, நீயாவது இறங்கி போக வேண்டும் என கண்ணன் சொல்ல, ஐஸ்வர்யா என்னால் முடியாது என சொல்கிறார். அண்ணன் உடம்பு சரியில்லாமல் இருக்காங்க நீங்க இப்படி சண்டை போடுவது நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். எல்லாரும் நன்றாக தான் இருக்காங்க என ஐஸ்வர்யா சொல்ல, ஐஸ்வர்யா இதை பற்றி பேசாதே என கண்ணனிடம் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!