ஜீவா ஜனார்த்தனன் கடையை பார்க்க திட்டமிடும் மீனா, தனத்திற்கு உதவி செய்த கதிர் – இன்றைய எபிசோட்!

0
ஜீவா ஜனார்த்தனன் கடையை பார்க்க திட்டமிடும் மீனா, தனத்திற்கு உதவி செய்த கதிர் - இன்றைய எபிசோட்!
ஜீவா ஜனார்த்தனன் கடையை பார்க்க திட்டமிடும் மீனா, தனத்திற்கு உதவி செய்த கதிர் - இன்றைய எபிசோட்!
ஜீவா ஜனார்த்தனன் கடையை பார்க்க திட்டமிடும் மீனா, தனத்திற்கு உதவி செய்த கதிர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தியை சந்தித்ததை பற்றி முருகன் சொல்ல, நானும் சொல்லலாம் என நினைத்ததாக கதிர்  சொல்கிறார். பின் ஜீவா ஜனார்த்தனன் வேலைக்கு உதவி செய்ய வேண்டும் என மீனா நினைக்கிறார். பின் கடையில் தனம் மூட்டை தூக்க செல்ல கதிர் சரியான நேரத்தில் உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முருகன் மூர்த்தியை சந்தித்து பேசியது பற்றி சொல்ல, அண்ணனை நானும் கூப்பிட வேண்டும் என நினைத்தேன் ஆனால் பணம் கொடுக்காமல் அந்த வீட்டிற்கு போகமாட்டேன் என சொன்னது நியாபகத்திற்கு வந்தது, அதனால் தான் போகவில்லை என கதிர் சொல்கிறார். பின் அண்ணன் என்ன சொன்னாங்க என கேட்க அவர் உங்களுக்கு வாழ்த்து சொன்னதாக சொல்கிறார். முல்லை அதை நினைத்து வருத்தப்பட, கதிர் கவலைப்படாதே இந்த ஹோட்டல் பெரிதாக வந்த பின் பணம் சேர்த்து வைத்து வீட்டிற்கு சென்றுவிடுவோம் என சொல்கிறார்.

பின் முல்லை தொழிலை விரிவுபடுத்த ஐடியா கொடுக்க, கதிர் நீ தான் தொழில் செய்ய சரியான ஆள் என சொல்கிறார். பின் மீனா ஜனார்தனனிற்கு போன் செய்ய அவர் வேலை அதிகமாக இருப்பதாக சொல்கிறார். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என மீனா சொல்ல, ஆமாம் நீ எதற்கு போன் செய்தாய் என கேட்கிறார். கதிர் தனியாக ஹோட்டல் தொடங்க இருக்கிறார் என மீனா சொல்ல, கண்ணனும் வேலைக்கு போக போறானாம் என சொல்கிறார். உடனே மீனாவின் அப்பா அவங்க எல்லாரும் பிழைக்க தெரிந்தவர்கள் நீ தான் மாப்பிள்ளையை அழைத்து கொண்டு வர வேண்டும் என ஜனார்த்தனன் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் மீனா, ஜீவா வரமாட்டான் என சொல்ல, நீ தான்பிழைக்க தெரியாமல் இருக்கிறாய் என சொல்கிறார். பின் மீனா, நான் சொல்வதை கேளுங்கள் என சொல்லி ஜீவாவை கடைக்கு வர சொல்லுங்க என சொல்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் எவ்வளவு உரிமை இருக்குதோ அதே உரிமை நம்ம கடையிலும் இருக்கிறது என சொல்லிவிட்டு அவனிடம் பேசுங்க என சொல்கிறார். இத்தனை நாள் நாம சொல்லும் போது அவள் நம்பவில்லை, இப்போது தான் புரிந்து இருப்பதாக மீனாவின் அப்பா சொல்கிறார். பின் முல்லையும் கதிரும் வீட்டில் இப்படி எல்லாம் நடக்காமல் இருந்தால் நாம இப்படி ஒரு கடை திறந்திருக்க மாட்டோம் என சொல்கிறார்.

பின் கதிர் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று வருகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் ஜனார்த்தனன் மூர்த்திக்கு போன் செய்து நன்றாக இருக்கீங்களா என கேட்கிறார். அப்போ அப்போ வலி இருக்கும் ஆனால் பொறுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாவது ரெஸ்ட் எடுக்குறீங்க ஆனால் எனக்கு அந்த வாய்ப்பும் இல்லை என ஜனார்த்தனன் சொல்கிறார். மாப்பிள்ளை வந்து உதவி செய்தால் நன்றாக இருக்கும், இல்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என சொல்கிறார்.

ஏன் இப்படி பேசுறீங்க என மூர்த்தி கேட்க, நான் சொன்னால் அவர் கேட்கவில்லை, நீங்க சொல்லி பாருங்கள், எனக்கு ஆம்பளை புள்ளை இல்லை, அதனால் மாப்பிள்ளை தான் வந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல, நான் வர சொல்கிறேன் என மூர்த்தி சொல்கிறார். பின் ஜீவாவை அழைத்து உங்க மாமனார் கடைக்கு போக சொல்கிறார். அவர் கடையில் வேலை இருப்பதாக சொல்ல தனம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் தனம் கடையில் வேலைகளை கவனிக்க அரிசி லோடு வருகிறது. ஆனால் அதை இறக்க ஆள் இல்லை.

எழிலை வீட்டிற்கு அழைத்து போக சொல்லும் பாக்கியா, ஜெனிக்கு போன் செய்த ராதிகா – இன்றைய எபிசோட்!

சரவணன் மற்றும் அண்ணாச்சியை தனம் தேடி பார்க்க ஆனால் யாரும் அந்த நேரத்தில் இல்லை. அப்போது தனம் அரிசி மூட்டைகளை இறக்க, அந்த நேரம் பார்த்து கதிர் வந்து தடுத்து நிறுத்திவிட்டு, அரிசி மூட்டைகளை அவரே தூக்கி செல்கிறார். தனமும் முல்லையும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here