அம்மா அப்பாவிடம் புகார் அளிக்கும் மீனா, கதிருக்கு உதவி செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
அம்மா அப்பாவிடம் புகார் அளிக்கும் மீனா, கதிருக்கு உதவி செய்யும் முல்லை - இன்றைய
அம்மா அப்பாவிடம் புகார் அளிக்கும் மீனா, கதிருக்கு உதவி செய்யும் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
அம்மா அப்பாவிடம் புகார் அளிக்கும் மீனா, கதிருக்கு உதவி செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா ஐஸ்வர்யாவுடன் சண்டை போட்டு தன்னுடைய வீட்டிற்கு கயலுடன் சென்றுவிடுகிறார். அங்கே தனது அப்பாவிடம் இது பற்றி சொல்ல, அவர் மாப்பிள்ளையுடன் இங்கே வந்துவிடு என சொல்கிறார். மறுபக்கம் கதிர் புது கடைக்கு பெயிண்ட் அடிக்க, முல்லை அவருக்கு உதவி செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா அந்த வீட்டில் இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல, அப்போது மாப்பிளை எதாவது சொன்னாரா என மீனாவின் அப்பா கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என மீனா சொல்ல, அந்த வீட்டில் ஐஸ்வர்யா இருக்காளே அவளுக்கு சரியான வாய், நான் என்ன சொன்னாலும் சண்டைக்கு வருகிறாள் என மீனா சொல்கிறார். வீட்டில் தனம் அக்கா எதாவது சொன்னால் கூட நான் யோசித்து தான் பேசுவேன், ஆனால் அந்த ஐஸ்வர்யா நான் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசுகிறாள் என சொல்கிறார். நான் தான் உன்னை இங்கே வர சொன்னேனே, இப்போ வந்து அது பண்ணுது இது பண்ணுதுனு என புலம்பிக் கொண்டிருக்கிறாய் என மீனாவின் அப்பா சொல்ல, நான் என்ன செய்ய முடியும் என மீனா கேட்கிறார்.

மீனாவின் அம்மா மாப்பிள்ளை ஒப்புக் கொண்டால் தான வர முடியும் என கேட்க, கதிர் இல்லாததால் இனி ஜீவா வரமாட்டான் என சொல்கிறார். கண்ணன் கடை வேலையை பார்க்காமல் வேற இடத்தில் வேலைக்கு அனுப்ப போறாங்களாம். அவங்க எல்லாரும் புத்திசாலித்தனமாக இருக்காங்க, வீட்டில் கஷ்டம் இருந்தாலும் பணம் கொடுத்து கண்ணனை வேலைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் நான் தான் ஏமாளியாக இருக்கேன் என சொல்கிறார். குடும்ப பொறுப்பு என்றால் கொத்து சாவி, கடை பொறுப்பை எல்லாம் கொடுப்பார்கள் என நினைத்தியா என மீனாவின் அம்மா கேட்க, மீனாவின் அப்பா அவங்க என்ன வேணாலும் செய்யட்டும் நீ உன் புருஷன் புள்ளையுடன் வா நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீங்க சொல்வது சரி தான் அங்கே இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை என மீனா சொல்ல, ஜீவாவும் வர வேண்டும் என மீனா சொல்கிறார். கல்யாணம் முடிந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அங்கே எல்லாரும் புருஷனை கைக்குள் போட்டு இருக்காங்க ஆனால் உனக்கு பேசி சமாளிக்க தெரியவில்லை என சொல்ல, மீனா ஆமாம் எல்லாம் என் தலையெழுத்து என சொல்கிறார். பின் வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து மூர்த்தி கண்ணனிடம் கேட்கிறார். அப்போது கண்ணன், மீனா அவருடைய வீட்டிற்கு சென்று இருப்பதாக சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா பாண்டியனை வைத்து கொண்டு எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார். மூர்த்தி அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணனிடம் ஐஸ்வர்யா எல்லா வேலைகளையும் முடிந்துவிட்டதாக சொல்ல கண்ணன் அதுக்குள்ள எப்படி முடித்தாய் என கேட்டு ஆச்சர்யப்படுகிறார். மறுபக்கம் தனம் கடைக்கு தேவையான பணத்தை எடுத்து வைக்க, ஜீவா எப்படி எல்லாம் சரியான நேரத்தில் செய்கிறீர்கள் என கேட்டு ஆச்சர்யப்படுகிறார். அப்போது கண்ணன் வர தனம் கண்ணனிடம் பணத்தை கொடுக்காமல் ஜீவாவிடம் கொடுத்து நன்றாக விசாரித்து கட்ட சொல்கிறார். கண்ணன் இதற்கு கூட என்னை நம்பமாட்டீங்களா என கேட்க, ஆமாம் நீ சின்ன பையன் என தனம் சொல்கிறார்.

பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய கோபி, ராதிகாவை சந்தித்து கல்யாணம் பற்றி முடிவெடுக்க சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது என கண்ணன் சொல்ல, அதான் எனக்கும் சந்தேகமாக இருக்கிறது அந்த புள்ள உன்னை எப்படி நம்பியது என ஜீவா கேட்கிறார். பின் கண்ணனும் ஜீவாவும் வேலை விஷயமாக கிளம்புகின்றனர். மறுபக்கம் முல்லை தனது அப்பாவுடன் டீ எடுத்து கொண்டு புது கடைக்கு வருகிறார். முல்லை நாம எடுத்த முடிவு சரியாக வருமா என கேட்க அதெல்லாம் சரியாக வரும் என முருகன் சொல்கிறார். கடையில் கதிர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்க, என்ன நீங்க பெயிண்ட் அடிக்கிறீர்கள்? என முல்லை கேட்கிறார். பெயிண்ட் அடிக்க நிறைய செலவாகுமாம் என கதிர் சொல்ல, சரி நானும் பெயிண்ட் அடிக்கிறேன் என முல்லை கதிருடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கிறார். முருகன் அவர்களின் அன்பை பார்த்து சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here