புது கடைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் கதிர் முல்லை, பொருள் வாங்கி கொள்ள சொல்லும் தனம் – இன்றைய எபிசோட்!

0
புது கடைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் கதிர் முல்லை, பொருள் வாங்கி கொள்ள சொல்லும் தனம் - இன்றைய எபிசோட்!
புது கடைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் கதிர் முல்லை, பொருள் வாங்கி கொள்ள சொல்லும் தனம் - இன்றைய எபிசோட்!
புது கடைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் கதிர் முல்லை, பொருள் வாங்கி கொள்ள சொல்லும் தனம் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதிர் இணைந்து கடைக்கு தேவையான பொருள்கள் பற்றி பேசுகின்றனர். பின் முல்லை மற்றும் கதிர் தனத்திடம் தங்களது கடை பற்றி பேசுவதற்காக தனத்திடம் வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா ஜீவா என் வேலையை பார்க்க வரவில்லை என சொல்ல மூர்த்தி சாப்பிட்டு விட்டு போக சொல்கிறார். ஆனால் மீனாவின் அம்மா அதெல்லாம் வேண்டாம் என சொல்லி விட்டு கிளம்புகின்றனர். மறுபக்கம், முல்லை கடைக்கு தேவையான பொருள்களை பற்றி பேசுகிறார். மளிகை பொருள்கள் எல்லாம் நம்ம கடையில் வாங்கி கொள்வோம் எனவும் சொல்கிறார். பாத்திரம் எல்லாம் எவ்வளவு வாங்க வேண்டும் என சொல்ல, நம்ம வீட்டில் இருக்கும் பொருள்களையும் எடுத்துக் கொள்ளலாம் என முல்லை சொல்ல, உனக்கு சரி என பட்டால் எனக்கு ஓகே தான் என கதிர் கூறி விடுகிறார்.

விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

பின் உட்கார வேண்டிய டேபிள் பற்றி சொல்கிறார். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என முருகன் சொல்கிறார். டீ பாய்லர் செட் என சொல்ல எல்லாம் வாங்கிக்கலாம் என முருகன் சொல்கிறார். பின் முருகன் என்ன மாப்பிள்ளை எதுவும் பேசாமல் இருக்கீங்க என கேட்க நீங்க சொன்னால் சரி தான் என கதிர் சொல்கிறார். முல்லை பரோட்டா போடுவோம் என சொல்ல, கதிர் அது உடம்புக்கு கெடுதல் என சொல்கிறார்கள், அதனால் வேண்டாம் என சொல்கிறார்.

மறுபக்கம் முல்லையும் கதிரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வருகின்றனர். அங்கே கதிரை பார்த்து சரவணன் சந்தோசப்படுகிறார். அண்ணாச்சி கதிர் மீண்டும் வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார். கோவத்தில் இப்படியா முடிவு செய்வாய் என அண்ணாச்சி திட்டி விட்டு, முல்லையிடம் நீயாவது சொல்ல கூடாதா என சொல்கிறார். சரி இப்பவாவது நல்ல முடிவு எடுத்தாய் என அண்ணாச்சி சொல்ல, பின் கதிர் வந்துட்டான் இனி எதுவும் பிரச்சனை இல்லை என அண்ணாச்சி சந்தோசப்படுகிறார். உடனே முல்லை நாங்க ஒன்றும் திரும்ப வரவில்லை புதிதாக ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என இருக்கிறோம், அதான் உங்களிடம் சொல்லிவிட்டு போகலாம் என வந்தோம் என்றும் எல்லாரும் கண்டிப்பாக வர வேண்டும் என முல்லை சொல்கிறார்.

பின் பாண்டியனை கொஞ்சி விட்டு தனத்திடம் அண்ணி சின்னதாக ஹோட்டல் தொடங்க போறோம் வீட்டில் வந்து சொல்ல ஆசை தான. ஆனால் அண்ணன் எப்படி எடுத்துக் கொள்ளும் என தெரியவில்லை என்று சொல்கிறார். அண்ணாச்சி திடீரென ஹோட்டல் தொடங்கினால் உனக்கு என்ன தெரியும் அது பற்றி என கேட்கிறார். வேறு எங்கையோ வேலை செய்வதாக சொன்னார்கள் என அண்ணாச்சி கேட்க அங்கே ஒரு பிரச்சனை வந்துவிட்டது. அதான் தனியாக ஹோட்டல் தொடங்க போகிறோம் உங்க எல்லாருடைய ஆசியும் வேண்டும் என சொல்ல ஜீவா, நீ நம்பிக்கையாக செய் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறார்.

மளிகை கடையாக இருந்தால் கூட பரவாயில்லை என அண்ணாச்சி சொல்ல உங்களுக்கு போட்டியாக ஆரம்பிக்க கூடாது என்பதால் தான் ஹோட்டல் தொடங்க போகிறோம் என சொல்கிறார். தனம் பொருள் எல்லாம் இங்கையே வாங்கி கொள்ள சொல் என சொல்ல பணம் அப்பறம் கொடுக்கலாம் என தனம் சொல்கிறார். ஆனால் முல்லை நாங்க பணம் கொடுத்துவிட்டு வாங்கி கொள்கிறோம் என சொல்ல அது என்ன அப்பறம் கொடுக்கிறேன் என சொல்வது இப்பவே வாங்கி கொண்டு போங்க என சொல்ல கதிர் அப்பறம் வாங்கி கொள்கிறோம் என சொல்கிறார்.

யார் சமைக்க போகிறார் என கேட்க முல்லை இவங்க சாப்பாட்டிற்கு நிறைய பேர் வருகிறார்கள் அதனால் இவர்களே சமைக்க இருப்பதாக முல்லை சொல்கிறார். பின் கதிர் நேரமாகிவிட்டது என சொல்லிவிட்டு கிளம்புகிறார். தனத்திடம் சொல்லிவிட்டு கிளம்ப ஆனால் தனம் எதுவும் பேசாமல் இருக்கிறார். முல்லை கதிர் கிளம்பிய பின் தனம் அவன் நன்றாக வருவான் என சொல்கிறார். அவன் சொல்வதை கேட்டியா இங்கே தான் சாமான் வாங்குவானாம் ஆனால் பணம் கொடுத்து தான் வாங்குவானாம் அவன் ஒரு முடிவோடு தான் இருப்பதாக தனம் சொல்கிறார்.

முருகன் முல்லையிடம் கதிர் மாப்பிள்ளை எங்கே என கேட்க பாத்திரங்களை வாங்க இருப்பதாக சொல்கிறார். பின் தனத்தை பார்க்க போறதாக சொன்னீங்களே என கேட்க ஆமாம் காலையில் கடைக்கு சென்று சொன்னோம் என முல்லை சொல்கிறார். அக்கா நல்லா வருவீங்க என சொன்னதாக சொல்கிறார். பெரிய மாமாவிடம் வீட்டிற்கு சென்று சொல்ல முடியவில்லை என முல்லை வருத்தப்பட எல்லாம் சரியாகிவிடும் என முருகன் சொல்கிறார். பின் கதிர் எல்லா சாமான்களை வாங்கி கொண்டு வருகிறார். கடை எப்போ திறக்க போறீங்க என கேட்க நீங்களே சொல்லுங்க என கதிர் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!