கடினமான பரிகாரம் செய்யும் முல்லை, பதறி போய் வந்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கடினமான பரிகாரம் செய்யும் முல்லை, பதறி போய் வந்த கதிர் - இன்றைய
கடினமான பரிகாரம் செய்யும் முல்லை, பதறி போய் வந்த கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கடினமான பரிகாரம் செய்யும் முல்லை, பதறி போய் வந்த கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கஷ்டப்பட்டு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் அப்பா கதிரிடம் முல்லையை கோவிலில் பார்த்ததாக சொல்ல கதிர் வேகமாக சென்று முல்லையை தடுக்க பார்க்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கஸ்தூரியுடன் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய தொடங்குகிறார். அப்போது முல்லையை பூசாரி முட்டி போட்டு கோவிலை சுற்றி வர சொல்கிறார். பின் கஸ்தூரி முல்லையுடன் பண்ணிருவியா என கேட்க என்னால் முடியும் என முல்லை சொல்கிறார். பின் முல்லை பரிகாரத்தை தொடங்கி செய்து கொண்டிருக்கிறார். மறுபக்கம் மீனாவின் அப்பா மூர்த்தி கடைக்கு வருகின்றனர். அப்போது கதிரும் மூர்த்தியும் இருக்க உடம்பு எப்படி இருக்கிறது என மூர்த்தி விசாரிக்கிறார். இப்போது சரியாகிவிட்டது என சொல்ல ஆனாலும் கலைக்கு தான் நம்பிக்கை இல்லை என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

கலை சொந்தகார பையன் புதுக்கோட்டையில் இருக்கிறான் அவனை பார்க்க தான் சென்றுவிட்டு வருகிறேன். அவன் டாக்டர் அவனிடம் ரிப்போர்ட் காட்ட போனேன் இந்த டாக்டர் சொன்னதை தான் சொன்னதாக சொல்கிறார். பின் மூர்த்தியிடம் ஜீவா மாப்பிள்ளை தான் எல்லாத்தையும் நல்லா பார்த்துக் கொள்கிறார். உங்க தம்பி என்று சொல்லவில்லை ஜீவா மாப்பிள்ளை கணக்கு எல்லாம் அப்படி இருக்கிறது என சொல்கிறார். பின் மூர்த்தி கடைக்குள் சென்றுவிட கதிரிடம் குழந்தை இல்லை என கவலைப்படாதீங்க என சொல்கிறார்.

அதான் மருத்துவம் பார்க்க இருப்பதாக மீனா சொன்னார் அப்பறம் என கோவிலுக்கு போறீங்க பரிகாரம் எல்லாம் எதற்கு என மீனாவின் அப்பா கேட்க கதிருக்கு ஒன்றும் புரியவில்லை. புதுக்கோட்டை சென்றுவிட்டு வரும் வழியில் தண்ணீர் வாங்க நின்றேன் அப்போது கஸ்தூரியை பார்த்தேன் அவர் தான் முல்லை உடன் வந்ததாக சொன்னதாக சொல்கிறார். கதிர் அதை கேட்டு அதிர்ச்சி அடைய முல்லையை தேடி செல்கிறார். மறுபக்கம் முல்லை கஷ்டப்பட்டு பரிகாரம் செய்து கொண்டிருக்கிறார். கஸ்தூரி என்னால் நடக்கவே முடியவில்லை நீ எப்படி முட்டி போட்டு நடக்கிறாய் போதும் முல்லை என சொல்ல அவர் கேட்கவில்லை.

சிறந்த மனிதநேய விருது பெற்ற பாரதி, குழந்தைகளை மேடைக்கு அழைத்து மரியாதை – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கதிர் முல்லையை தேடி வர வண்டி பழுதாகிவிடுகிறது. அப்போது மெக்கானிக் அழைத்து வண்டியை சரி செய்ய சொல்கிறார். வண்டியை சரி செய்ததும் கதிர் வேகமாக கோவிலுக்கு வருகிறார். அங்கே முல்லையை தேடி அலைய முட்டி போட்டு முல்லை சுற்றி வருகிறார். கதிர் முல்லையை பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க முல்லை நான் செய்ய வேண்டும் என சொல்கிறார். கதிரால் எதுவும் பேச முடியாமல் இருக்க முல்லை முதல் பரிகாரத்தை முடித்துவிட்டு இரண்டாவது பரிகாரம் செய்ய போகிறார். அப்போது கதிர் தடுக்க முல்லை முடியாது என சொல்கிறார். முல்லை தீ சட்டி ஏந்திக் கொண்டு சுற்றி வர கதிர் முல்லையை நினைத்து வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!