முல்லைக்கு குழந்தை பிறக்க பரிகாரம் சொன்ன கஸ்தூரி, கடையில் புறக்கணிக்கப்படும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
முல்லைக்கு குழந்தை பிறக்க பரிகாரம் சொன்ன கஸ்தூரி, கடையில் புறக்கணிக்கப்படும் ஜீவா - இன்றைய
முல்லைக்கு குழந்தை பிறக்க பரிகாரம் சொன்ன கஸ்தூரி, கடையில் புறக்கணிக்கப்படும் ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
முல்லைக்கு குழந்தை பிறக்க பரிகாரம் சொன்ன கஸ்தூரி, கடையில் புறக்கணிக்கப்படும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கஸ்தூரி முல்லையிடம் புதுக்கோட்டை அருகே ஒரு கோவில் இருக்கிறது அங்கே பரிகாரம் செய்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என சொல்கிறார். பின் ஜீவா கடைக்கு வர அங்கே எந்த வேலையும் கொடுக்காமல் இருக்கிறார்கள் அதை நினைத்து ஜீவா வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லைக்கு குழந்தை இல்லை என்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது கஸ்தூரி ஒரு கோவில் பற்றி சொல்கிறார். புதுக்கோட்டை அருகே ஒரு கோவில் இருப்பதாக சொல்ல, அங்கே பரிகாரம் செய்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என கஸ்தூரி சொல்கிறார். முல்லை உண்மையாகவே பிறக்குமா என கேட்க ஆமாம் எத்தனை பேருக்கு குழந்தை பிறந்துள்ளது என சொல்கிறார். பின் முல்லையின் அம்மா அதெல்லாம் கஷ்டமான பரிகாரம் நீ செய்தால் உன் உடம்பு தாங்காது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் முல்லை போலாம் என சொல்ல மீனாவின் அம்மா வேண்டாம் என சொல்கிறார். கஷ்டப்பட்டால் தான் குழந்தை பிறக்கும் என கஸ்தூரி சொல்கிறார். கடையில் ஐஸ்வர்யா வேலை செய்வது எல்லாம் உதவியாக இருப்பதாக மூர்த்தி சொல்ல, அப்போது ஜீவா வருகிறார். கதிர் வாங்க எப்படி இருக்கீங்க என கேட்க என்னடா புது ஆள் போல பேசுறீங்க என கேட்கிறார். பின் உட்கார்ந்து பேசலாம் என சொல்ல, அப்போது ஜீவா என்னை விருந்தாளி போல கவனிக்கிறீர்கள் என கேட்கிறார். பின் ஜீவாவிற்கு எந்த வேலையும் இல்லாமல் இருக்க அவர் கடைக்குள் சென்று எதாவது வேலை இருக்குமா என பார்க்கிறார்.

அப்போது ஒரு வேலையை பார்த்து சொல்ல கதிர் அதை எல்லாம் முடித்துவிட்டாச்சு என சொல்கிறார். பின் அங்கே வேலை இல்லையா என கேட்க, என்னை நீங்க மிஸ் பண்ணவில்லையா என கேட்கிறார். மூர்த்தி அப்போது சின்ன கடையாக இருந்தது அதனால் தான் வேலை இல்லை என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா வந்து நீங்க மீனா வீட்டில் ஜாலியாக இருங்க என கேட்க, உன் தேவை இங்கே இல்லை என மூர்த்தி சொல்கிறார். அதை கேட்டு ஜீவா வருத்தப்படுகிறார். மூர்த்தி மீனா அப்பா பேசியதால் தான் நான் இப்படி பேசுகிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் மூர்த்தி கயலுக்கு சாப்பாடு ஊட்ட சாப்பிட்டால் தான் என்னை போல தெம்பாக இருக்க முடியும் என சொல்ல, மூர்த்தி சிறு வயது கதை எல்லாம் சொல்கிறார். அப்போது கதிர் தனம் சொல்லி கிண்டல் செய்கின்றனர். வீட்டை வாங்க வருபவர் அங்கே அட்வான்ஸ் கொண்டு வர,மூர்த்தி வீட்டை விற்க இப்போது திட்டமில்லை என சொல்கிறார். ஏன் யாராவது பணம் அதிகம் தருவதாக சொன்னார்களா என கேட்க இல்லை இப்போதைக்கு திட்டம் இல்லை அவ்வளவு தான் என சொல்கிறார். அதை கேட்டு மீனாவிற்கு கோவம் வருகிறது.

ஹேமா அம்மா யார் என கேட்ட லட்சுமி, வெண்பாவிற்கு திருமணம் நடக்க போவதாக சொன்ன ஜோசியர் – இன்றைய எபிசோட்!

ஜீவா கயலை கொஞ்சி கொண்டிருக்க மீனா வீட்டை சுத்தம் செய்கிறார். இங்கே அடிக்கடி இல்லாமல் இருப்பதால் வீடு சுத்தமே இல்லாமல் இருக்கிறது என சொல்கிறார். ஜீவா இத்தனை நாளாக இந்த கணக்கு நோட்டை எடுக்காமல் இருக்கிறேன் என சொல்ல, மீனா நாம வீடு கட்டமாட்டோமா என கேட்க முதலில் முல்லை டிரீட்மென்ட் பாப்போம் அப்பறமாக வீடு கட்டுவோம் என சொல்ல ஜீவா இப்போதைக்கு வீடு இருக்கிறது என சொல்கிறார். ஆனால் முல்லைக்கு இன்னும் சில ஆண்டுகள் கழித்து கூட செய்யலாம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!