கஸ்தூரி வீட்டிற்கு செல்லும் கண்ணன் & ஐஸ்வர்யா, அடிக்க பாயும் பிரசாந்தை தடுக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

0
கஸ்தூரி வீட்டிற்கு செல்லும் கண்ணன் & ஐஸ்வர்யா, அடிக்க பாயும் பிரசாந்தை தடுக்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
கஸ்தூரி வீட்டிற்கு செல்லும் கண்ணன் & ஐஸ்வர்யா, அடிக்க பாயும் பிரசாந்தை தடுக்கும் கதிர் - இன்றைய எபிசோட்!
கஸ்தூரி வீட்டிற்கு செல்லும் கண்ணன் & ஐஸ்வர்யா, அடிக்க பாயும் பிரசாந்தை தடுக்கும் கதிர் – இன்றைய எபிசோட்!

கஸ்தூரியின் வீட்டுக்கு வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை முழு குடும்பமும் சேர்ந்து திட்டித் தீர்க்க, பிரஷாந்த் கண்ணனை அடிக்க கை ஓங்குகிறார். அப்போது அங்கு வரும் கதிர் கண்ணனை காப்பாற்ற, மற்றவர்கள் கதிரை கேள்வி கேட்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடில் கண்ணனை நினைத்து அழுது கொண்டிருக்கும் லட்சுமியை பார்வதி மற்றும் தனம் தேற்றுகிறார்கள். பின்னர் சாப்பிடாமல் இருக்கும் லட்சுமியை வற்புறுத்தி சாப்பிட வைக்கிறார் தனம். ஆனால் பார்வதி, மூர்த்தி குடும்பத்தை குத்திக்காட்டி பேசுக்கொண்டிருக்கிறார். பின்னர் பார்வதி மற்றும் தனத்தின் அம்மா கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை பற்றி குறைகூறிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணன் இந்த நேரத்தில் தான் இப்படி பண்ணனுமா, தனம் வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறாள்.

சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அனுவை பேசவைக்கும் முயற்சியில் ரோஜா!

அவளுக்கு இந்த குடும்பத்தை விட்டால் வேற வாழ்க்கையே இல்லையா என தனத்தின் அம்மா பார்வதி மற்றும் முல்லையிடம் புலம்புகிறார். பின்னர் குடோனில் வேலை செய்து கொண்டிருக்கும் கதிர், ஜீவாவிடம் கண்ணன் எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்பதை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது கண்ணன் பாதுகாப்பாக தான் இருக்கிறான் என ஜீவா கூறிக்கொண்டிருக்கையில், ஜீவாவுக்கு போன் செய்த சதீஸ், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கஸ்தூரி வீட்டிற்கு செல்வதாக கூறுகிறார். பின்னர் கஸ்தூரி வீட்டுக்கு வரும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை, மல்லி கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்க்கிறார்.

அப்போது சத்தம் கேட்டு அங்கு வரும் கஸ்தூரி மற்றும் அவரது அம்மா இவ எதுக்கு இங்க வந்தா, உன்ன இங்க வர வேணாம்னு சொன்னேன்ல உனக்கு வெக்கமே இல்லையா, அவனை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்து நிக்கிற உனக்கு எவ்வளோ தைரியம் இருக்கும் என கத்துகிறார். அப்போது ஊரில் இருக்கும் வீட்டு சாவியை கேட்கிறார் ஐஸ்வர்யா. அந்த வீடு என் பேர்ல இருக்கு அதுல ஒரு செங்கல் கூட உனக்கு சொந்தம் இல்ல என கஸ்தூரியின் அம்மா கூறுகிறார். அப்போது அங்கு வரும் பிரசாந்த்திடம், ஐஸ்வர்யா சொத்து கேட்கிறாள் என கஸ்தூரி கூற, உங்களால தான் நான் இந்த கல்யாணத்தை பண்ணேன் என ஐஸ்வர்யா கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது இந்த கண்ணனை தான் உனக்கு பிடிச்சிருக்கா என பிரசாந்த் கூறி விட்டு கண்ணனை அடிக்க கை ஓங்க, அங்கு கதிர் பிரசாந்தை தடுத்து விடுகிறார். அப்போது மூர்த்தி குடும்பம் ஊருக்காக தான் கண்ணனை வீட்டை விட்டு துரத்தின மாதிரி நடிச்சிட்டு, இப்போ கல்யாணம் பண்ணுங்க, அப்பறோம் உங்கள சேத்துக்குறோம் என இவங்க தான் சொல்லிருப்பாங்க என கதிரை பார்த்து மல்லி கூறுகிறார். பின் கண்ணனை துரத்தி விட்ட பிறகு அவன் இங்க இருக்கான்னு தெரிஞ்சு, கதிர் இங்க எப்படி வந்தான் என கேட்க அதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!