கதிர் கடை திறப்பு விழா பற்றி குடும்பத்திடம் சொன்ன தனம், கோவிலில் கதிரை பார்க்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
கதிர் கடை திறப்பு விழா பற்றி குடும்பத்திடம் சொன்ன தனம், கோவிலில் கதிரை பார்க்கும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழா பற்றி குடும்பத்திடம் சொன்ன தனம், கோவிலில் கதிரை பார்க்கும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கதிர் கடை திறப்பு விழா பற்றி குடும்பத்திடம் சொன்ன தனம், கோவிலில் கதிரை பார்க்கும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முருகன் கடை திறப்பு விழாவிற்கு நல்ல நாள் பார்த்து சொல்கிறார். பின் தனம் கதிர் கடை திறப்பு விழா பற்றி குடும்பத்தினரிடம் சொல்கிறார். மறுபக்கம் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோவிலுக்கு வர அங்கே கதிரும் முல்லையும் வந்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முருகனை புது கடை திறப்பு விழாவிற்கு நல்ல நாள் பார்த்து சொல்ல முல்லையை காலெண்டர் எடுத்து கொண்டு வர சொல்கிறார். முல்லை எடுத்து கொண்டு வர நல்ல நாள் ஒன்றை பார்த்து சொல்ல கதிர் சரி என சொல்கிறார். பின் உங்க கடைக்கு போய்விட்டு வந்ததாக முல்லை சொன்னாள் என முருகன் கேட்க, ஆமாம் ஆனால் அண்ணியை பார்த்தால் தான் கஷ்டமாக இருக்கிறது, அண்ணன் இல்லாத போது நானும் இல்லை, குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்படுகிறார் என சொல்கிறார் கதிர் . அண்ணன் கடையில் இருந்து வந்த போது கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் அன்று மருத்துவமனையில் அண்ணி கூப்பிட்டும் போகாமல் இருந்தது வருத்தமாக இருப்பதாக சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

முல்லை, விடுங்க நாம வேண்டும் என்றே குடும்பம் பிரிய வேண்டும் என நினைத்தோமா? எல்லாம் செய்துவிட்டு மீண்டும் அங்கே சென்றுவிடுவோம் என சொல்கிறார். மறுபக்கம் தனம் கடையில் இருந்து வீட்டிற்கு வர மாமாவிற்கு சாமி கும்பிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டீயா என மீனாவிடம் கேட்கிறார். எல்லாம் செய்துவிட்டேன் என சொல்ல முதியோர் இல்லத்திற்கு சாப்பாடு கொடுக்க பணம் கொடுத்தாச்சு என சொல்கிறார். பின் தனம், இன்று கடைக்கு கதிர் முல்லை வந்ததாக சொல்கிறார். என்ன விஷயம் என மீனா கேட்க, அவன் புதிதாக கடை திறக்க போகிறான் என சொல்கிறார்.

TNPSC தேர்வுகளுக்கான முடிவுகள் எப்போது? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு !

சின்னதாக ஹோட்டல் தொடங்க இருப்பதாக சொன்னதாக சொல்ல மீனா அவங்க மாமாவை பார்த்து சொல்ல வேண்டும் என்றால் வீட்டிற்கு வந்திருக்கலாமே என சொல்கிறார். அவன் எல்லாரிடமும் சொல்ல சொன்னான் அவன் வீட்டிற்கு வந்தால் என்ன நடக்கும் என தெரியவில்லை. அதனால் தான் எல்லாரிடமும் சொல்ல சொன்னான் என சொல்ல, மீனா என்ன அக்கா பெரிய கடையா என கேட்கிறார். அதெல்லாம் நாம போக வேண்டும் என்றால் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என தனம் சொல்கிறார். அவன் என்ன அர்த்தத்தில் சொன்னான் என தெரியவில்லை என தனம் சொல்கிறார்.

பின் மூர்த்தி, கோவிலுக்கு போக வேண்டும் என சொன்னாய் என கிளம்புகின்றார். மீனாவும் கண்ணனும் கோவிலுக்கு வருகின்றனர். மறுபக்கம் கதிரும் முல்லையும் அமர்ந்திருக்க கதிர் நாம செய்வது எல்லாம் சரியாக வருமா என கேட்கிறார். எல்லாம் நல்லபடியாக வரும் என முல்லை சொல்கிறார். நேர்மையாக இருக்க வேண்டும் என நினைத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறார். பின் கதிர் இன்று வேலை எதுவும் இல்லை என சொல்ல கோவிலுக்கு போவோமா என கேட்கிறார். சரி என முல்லை சொல்ல கதிரும் முல்லையும் கிளம்புகின்றனர்.

தனம், மூர்த்தி, மீனா மற்றும் கண்ணன் ஆகியோர் கோவிலுக்கு வர கோவிலில் பூஜை கொடுத்துள்ளதாக தனம் சொல்கிறார். நேற்றே கண்ணனிடம் பணம் கொடுத்து கட்ட சொன்னதாக சொல்ல, இன்னைக்கு தான் எந்த டென்ஷனும் இல்லாமல் மூர்த்தி குடும்பத்துடன் சாமி கும்பிடுவதாக தனம் சொல்கிறார். பின் அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுக்கின்றனர். அப்போது கதிரும் முல்லையும் கோவிலுக்கு வருகின்றனர். மூர்த்தி, தனம், மீனா மற்றும் கண்ணன் அனைவரும் கதிரையும் முல்லையையும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். மூர்த்தி கதிரை பார்க்க ஆனால் கதிர் எதுவும் பேசாமல் இருக்கிறார்.

மூர்த்தி, கதிர் வீட்டை விட்டு சென்ற போது பேசியத்தை எல்லாம் நினைத்து பார்க்கிறார். பின் கண்ணன் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய பிரசாதத்தை எடுத்து வருகிறார். தனம், எல்லாருக்கும் கொடுக்க சொல்ல முதலில் கண்ணன் மூர்த்திக்கு கொடுக்கிறார். மூர்த்தி ஒரு பக்கமாக அமர்ந்து சாப்பிட கதிர் பிரசாதம் வாங்க லைனில் நிற்கிறார். கண்ணன், மீனாவிடம் அண்ணன் நிற்பதாக சொல்ல அனைவருக்கும் கொடுத்த பின் கதிர் முல்லைக்கு பிரசாதம் காலியாகிவிடுகிறது. கதிர் வருத்தப்பட்டு கிளம்ப, தனத்திடம் பிரசாதம் கதிர் அண்ணனிற்கு கொடுக்க முடியவில்லை அப்பாவிற்காக சாமி கும்பிடுகிறோம் அண்ணனிற்கு கொடுக்க முடியாமல் போய்விட்டது என கண்ணன் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here