வயதான பாட்டி போல மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
வயதான பாட்டி போல மாறிய
வயதான பாட்டி போல மாறிய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தனம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
வயதான பாட்டி போல மாறிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தனம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் மக்களிடம் நல்ல புகழ் பெற்ற சீரியல்களில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. அந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை சுஜிதா:

தமிழ் சின்னத்திரையில் பல சேனல்கள் இருந்தாலும் மக்களின் விருப்பப்படி சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி முன்னணி சேனல்களில் ஒன்றாக விஜய் டிவி இருக்கிறது. இந்த சேனல் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் புகழ் பெற்று இருந்தாலும் முன்னணி கதாபாத்திரமான தனம் கதாபாத்திரம் தான் சீரியல் கதைக்கு ஆணி வேராக இருக்கிறது.

கொரோனா பாதித்த பிரபல நடன இயக்குனர் கவலைக்கிடம் – மருத்துவ செலவுக்கு பணமின்றி தவிக்கும் குடும்பம்!

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்த நடிகை சுஜிதா நடித்து வருகிறார். அவர் தெலுங்கிலும் வத்தினம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா பல புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.

கர்ப்பமாக இருக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா – போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

தற்போது அனைவரையும் ஆச்சர்யப்படும் விதத்தில் புதிய கெட்டப்பில் அவர் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் வயதான பாட்டி போல வேடமிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது எதார்த்தமான நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த கெட்டப் வத்தினம்மா சீரியலுக்காக அவர் போட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!