“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் ஐஸ்வர்யா காதலர்களா? வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" கண்ணன் ஐஸ்வர்யா காதலர்களா? வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் ஐஸ்வர்யா காதலர்களா? வீடியோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கல்லூரி காதல் ஜோடியாக வலம் வந்து பின் திருமணம் செய்து கதையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கண்ணன், ஐஸ்வர்யா ஜோடி தற்போது இன்ஸ்டாவில் காதல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதைக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் நல்ல குடும்ப சீரியலாக முகம் சுளிக்க வைக்காத காட்சிகளுடன் கணவன், மனைவி உறவை கொண்டு செல்வது தான். இந்த சீரியலில் நான்கு ஜோடிகள் சேர்ந்து ஒரே குடும்பத்தில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் குடும்பத்தை நினைத்து தங்களுடைய சந்தோசங்களை விட்டு வாழ, கடைசி தம்பி மட்டும் தனது சந்தோசம் முக்கியம் என நினைத்து காதல் திருமணம் செய்து கொள்கிறான்.

வெண்பாவின் தற்கொலை சூழ்ச்சியில் சிக்கும் பாரதி – காப்பாற்றுவாரா கண்ணம்மா? சீரியலில் அதிரடி திருப்பம்!

அது வேறு யாரும் இல்லை, தனத்தின் அண்ணி மகளை தான். கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் அருமையாக நடித்து வருகிறார். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கண்ணனிற்கு ஜோடியாக கல்லூரி மாணவியாக விஜே தீபிகா நடித்து வந்தார். ஆனால் அவருக்கு சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது முகப்பரு அதிகமாக வந்ததால் சீரியல் நிர்வாகம் அவரை நீக்க முடிவு செய்தது. அதனால் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.

விஜய் டிவி “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியலில் இருந்து விலகும் ராஜு – ரசிகர்கள் ஷாக்!

இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்த நிலையில் அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் நல்ல நண்பர்களாக இருப்பதால் அடிக்கடி போட்டோஸ், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் இருக்கிறது. இருந்தாலும் நாங்க நண்பர்கள் தான் என பக்குவத்துடன் நடந்து கொள்கின்றனர். தற்போது இருவரும் காதல் காட்சிகளில் நடித்த ரீல்ஸ் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here