செல்ஃபி சித்தருடன் ஊர் சுற்றிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா – கலாட்டா வீடியோ!

0
செல்ஃபி சித்தருடன் ஊர் சுற்றிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & விஜே தீபிகா - கலாட்டா வீடியோ!
செல்ஃபி சித்தருடன் ஊர் சுற்றிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் & விஜே தீபிகா - கலாட்டா வீடியோ!
செல்ஃபி சித்தருடன் ஊர் சுற்றிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் & விஜே தீபிகா – கலாட்டா வீடியோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒன்றாக நடித்து வந்த சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் சேர்ந்து பாலமலை என்னும் ஆன்மீக தளத்திற்கு சென்று அங்கிருந்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மிகவும் கலகலப்பாக உள்ளதால் அதிக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

பாலமலை சுற்றுலா:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சின்னத்திரையில் முன்னணியில் உள்ள சீரியல்கள் பட்டியலில் உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவரும் மிகவும் பிரபலமாக உள்ளனர். இதனால் அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் உள்ள பின்தொடர்பவர்களின் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட இணையத்தில் பரவி விடுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் கடைசி தம்பி கண்ணனாக நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம்.

கணவர் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட ‘செம்பருத்தி’ ஷபானா – குவியும் வாழ்த்துக்கள்!

இவர் மிகவும் குறும்பான கதாபாத்திரத்தில் சீரியலில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் விஜே தீபிகா நடித்து வந்தார். அவருக்கு முகத்தில் இருக்கும் அலர்ஜி காரணமாக சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, சாய் காயத்திரி இந்த வேடத்தில் நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சமயத்தில் சரவண விக்ரம் மற்றும் விஜே தீபிகா இருவரும் நண்பர்களாக மாறி விட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து யூடூயூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை – ரசிகர்கள் விமர்சனம்!

அதில், அவ்வப்போது சுற்றுலா செல்லும் இடங்களில் எடுக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாகவும், சந்தோசமாகவும் மாறி விடுகிறது. அவர்கள் போன வீடியோவில் கோயம்புத்தூர் பொள்ளாச்சியில் உள்ள பாலமலை என்னும் கோயிலுக்கு சென்று வீடியோ போட்டனர். அதில், அடுத்த பார்ட் வருவதாகவும் கூறி இருந்தனர். தற்போது அந்த பார்ட் 2 வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், தனது நண்பரை செல்ஃபி சித்தர் என்று கூறி கலாய்த்துள்ளார். இந்த வீடியோவில் அவர் தனது நண்பர்களுடன் செய்த அட்டகாசங்கள் தான் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here